THE TRUTH SEEKER Profile picture
Mar 28, 2023 14 tweets 7 min read Read on X
#பூஜ்_பூகம்பம்
2001, ஜனவரி 26.
இந்தியா குடியரசு தின சடங்குகளை தொடங்க ஆரம்பித்தபோது, குஜராத், கட்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பூஜ் நகரத்தையே நிர்மூலம் செய்திருந்தது. வைர வியாபாரிகளாக தூங்கியவர்கள் அன்னக்காவடிகளாக எழுந்தார்கள். அரசியல் பூகம்பம் ஒன்று வெடிக்க காத்திருந்து Image
#இளமை_புயல்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்
#சாஹேப்_அறிமுகம்
2005 ல் பூங்காவை திறந்து வைக்க காந்திநகரில் இருந்து சாஹேப் வந்திருந்தார்.
அலுவல் ரீதியாக மாதுரி அறிமுகப்படுத்தப்பட்டார்.
பெங்களூர் திரும்பிய மாதுரி 2006 ல் அகமதாபாத் வந்திருப்பதாக பிரதீப் சர்மாவுக்கு தகவல் கொடுக்கிறார். இரண்டு நாட்கள் கழித்தே சந்திக்க முடிந்தது Image
#ஒலி_நாடாக்கள்
2009 ல் இர்ஷாத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டபோது சிங்கால் என்ற ஐபிஎஸ் அதிகாரி, 4 ஜிபி அளவுள்ள பென்டிரைவில் பதிவு செய்யப்பட்ட 267 உரையாடல் தொகுப்பை ஒப்படைத்தார். இவை வெளியான போது, குஜராத்தில் மீண்டும் பூகம்பம். இம்முறை காந்தி நகரில் Image
#உளவுத்துறை_அமைச்சர்
இதன் விவரங்களைப் புலனாய்வு இதழாளர்களான குலைல் டாட் காமின் #அசிஷ்_கேதனும் கோப்ராபோஸ்ட் டாட் காமின் #ராஜா_சவுத்ரியும் வெளியிட்டனர்.
இந்த ஒலி நாடாக்கள் முழுவதிலும், ‘சாகேப்’பிற்காக ஒரு இளம் பெண்ணைச் சட்ட விரோதமாக எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து, அவர் யாரைச் Image
சந்திக்கிறார், யாருடன் ஓட்டலில் தங்குகிறார், விமானத்தில் யாருடன் பயணம் செய்கிறார் போன்ற அனைத்து அந்தரங்க விவரங்களையும் நவீன உளவுத் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திச் சேகரித்து உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரியான சிங்காலை வற்புறுத்துவது பதிவாகியிருந்தது Image
#சாஹேப்_ஜண்டா
சிறப்புக் காவல்படைக் கண்காணிப்பாளர் சிங்கால் அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண்கள் யார், ஒட்டலில் தங்கும்போது அப் பெண்ணுடன் எந்த ஆண் இருந்தார் என அறியத் துடிப்பதும் அந்த சாகேப் எந்த அளவு பாலியல் வக்கிரம் பிடித்த நபராக இருக்கவேண்டும் என்பதை யூகிக்க வைக்கிறது. Image
#ஜண்டா_ஒருதண்டம்
ஆகஸ்ட் 9, 2009
பரபரப்போடு சிங்காலை கூப்பிட்டு "சாகேப்போட பேசினேன். அவங்க இன்னைக்கு இரண்டு தடவை வெளியே போன விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. நம்ம ஆளுங்க சரியா வேல செய்யலேன்னு நினைக்கிறேன்” என ஜண்டா பதறுவதால் ஜண்டாவை நம்பாமல் வேறு ஒரு டீமும் சாஹேப் இறக்கி இருந்தார் Image
#பிள்ளையார்_பிடிக்க_குரங்கு
கோப்ரா போஸ்ட் மாதுரி என புனை பெயரிட்டு இருந்தாலும், இந்த ஆடியோ வெளிவந்த உடன் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை ரீதியில், சாஹேப் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க களம் இறக்கப்பட்ட பிரான்லால் சோனி மகள் மான்சி சோனி என்ற பெங்களூர் ஆர்கிடெக்ட் தான் அவள் Image
#தந்தையின்_முட்டு
அவள் அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. தந்தை என்கிற முறையில் நான் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள #சாஹபிடம் அவளைக் கவனித்துக் கொள்ள கூறினேன்
அதாவது கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே சாஹேப் மான்சியின் ஒவ்வொரு நடமாட்டத்தை கண்காணித்தாராம்
#பிரதீப்சர்மா_வாக்குமூலம்
கடச் கலக்டரா இருந்தவர், பாவ் நகருக்கு முனிசிபல் சேர்மனாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, ஊழல் குற்றசாட்டில் சஸ்பெண்டும் செய்யப் பட்டார். அதனை எதிர்த்து 2011 ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்த போது சாஹப்பின் தனி தொலைபேசி எண் மானசியிடம் இருந்தது தெரிந்தது
#குஜராத்_போலீஸ்
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது பற்றி கவலை கொள்ளாது, உளவு சாதனங்களுடன் இளம் பெண்கள், இளைஞர்கள் பின் திரிந்து இருக்கிறது. பிரதீப் சர்மா போன்ற மூத்த IAS அதிகாரிகளும் கண்காணிக்கப் பட்டனர். இடை இடையே அப்பாவி முஸ்லிம்கள் போலி என்கவுண்டரில் போட்டும் தள்ளப்பட்டனர்
#கோமாளி_காங்கிரஸ்
சாகப்பிற்கும் அந்த பெண்ணுக்கும் இடையிலான நெருக்கம் நாகரீகம் கருதி விரிவாக பகிர வில்லை.
குஜராத் உளவுத்துறை அமைச்சரை சிபிஐ கைது செய்யபட்ட போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தன் கடமையை ஒழுங்காக செய்து இருந்தால் ஒரு அப்பாவி இளைஞன் disqualify ஆகி இருப்பானா? Image
#நவீன_சீதைகள்
இந்த விவரம் எதுவும் தெரியாமல், ஏதோ ஒரு கிராமத்தில் ராமனின் அழைப்புக்கு காத்திருக்கிறார் அவர்

காத்திருந்தால் தான் அவர் சீதை

அதைத்தான் சனாதனம் விரும்புகிறது

சாக்ஷி மகராஜ் கூறுவது போல
சீதைகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்

m.timesofindia.com/city/delhi/sak…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with THE TRUTH SEEKER

THE TRUTH SEEKER Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Unmai_Thedi

Jan 20
#புதிய_பிம்பங்கள்

தொடக்க காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விஜயகாந்த் நடித்த சில திரைப்படங்கள் வெற்றிபெற்றதால்

தொடர்ந்து அதே பாணி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

தமிழ்நாட்டில் நற்குணத்தின் உச்சபட்ச செயலாக #அன்னமிடுதல் என்ற ஒரு அறச்சிந்தனை நடைமுறையில் உண்டு. Image
அதில் ஈடுபாடு கொண்டிருந்ததால் அதை தன்னளவில் தன் துறையில் நடைமுறைப்படுத்தினார்.

மற்றபடி சினிமாக்காரர்களுக்கே உரிய அனைத்து தனிநபர் பலவீனங்களும் கொண்ட ஒரு சராசரி மனிதன்தான் விஜயகாந்த்.

ஆனால் அவர் இறந்தவுடன் ஒரு சாராரால் ஏதோ #காரல்மார்க்ஸ் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்டுவிட்டது
அதற்கு அடிப்படைக் காரணம் பிஜேபி விஜயகாந்த் இறப்பை வைத்து அரசியலாக்கப்பார்த்தது

அந்த சமயம் சில பெரியாரிய தோழர்களும் அவரின் சில நல்ல செயல்பாடுகளை புகழ்ந்து செக் வைத்துவிட்டார்கள்

பிஜேபியினர் அந்த மரணத்தை வைத்து திமுகவை பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பார்த்தது
Read 17 tweets
Aug 17, 2023
#கோமளவல்லி_பெயர்க்காரணம்

2014 ஆம் ஆண்டு என நினைவு. ஜெயலலிதா டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில்
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக் கொண்டேயிருந்தார்.

பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக "ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன். Image
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே?"என்றார்

நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.

"அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அண்டோனியா அல்பினா மைனோ
இந்தியாவின் பிரதமராக முடியுமா.? அது நியாயமா..?" என்றார் Image
நிருபர்கள் முழித்தனர்.

"புரியலையா..

அண்டோனியா அல்பினா மைனோ என்பதுதானே #சோனியாகாந்தியின் இயற்பெயர்.
அவர் இத்தாலிக்காரர்.
இத்தாலி நாட்டில் பிறந்தவர். இன்னொரு நாட்டில் பிறந்தவர் எப்படி இந்தியாவிற்கு பிரதமராக முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. அ.தி.மு.க. இதனை ஆதரிக்காது..
Read 8 tweets
Aug 13, 2023
"Beef சாப்பிடுற அவா என் பிளேட்டை தொட்டுவிட்டால், என் ஆச்சாரம் கெட்டு போகாதோ? அதான் என்னுடைய சமையல் பாத்திரங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்கிறேன்"

இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்தி தான் இந்தியாவின் தேசிய பாடத்திட்டத்தை Image
வடிவமைக்கப் போகும் குழுவின் உறுப்பினர்.

இன்னொருவர் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் சன்யால்.

ஒம்போது வருஷமா கேடி ஜி 50 வருஷம் முன்னாடி செத்துப் போன நேருவை திட்டி தீர்ப்பதற்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கும் பிரதமரின் part time பொருளாதார ஆலோசகர்

இவரது முழு வேலை மகாபாரத ஆராய்ச்சி Image
இது ரெண்டும் சொல்லிக் கொள்வது என்னமோ கல்வியாளர்கள் தான்.

ஆனால் யாருக்கான கல்வி என்பது தான் பிரச்சினையே

மூன்றாவதாக சங்கர் மகாதேவனும் ஒரு உறுப்பினர்.

பாட்டு பாடறவனுக்கும் பாடத்திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

சிபிஎஸ்சி கர்நாடக மியூசிக் கற்றுக் கொடுக்கப் போகுதா?

அதெல்லாம் இல்லை Image
Read 6 tweets
May 19, 2023
#மீண்டும்_பணமதிப்பிழப்பு

வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே ₹2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

தற்போது புழக்கத்தில் உள்ள ₹2000 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும்

டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு செப்.30 தேதி வரை 2000 நோட்டுகள் வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். Image
.2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் அறிவித்தார்.

தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
எ.கட்சிகள்: ஏன் ₹1000 &₹500 ஒழித்துவிட்டு ₹2000 நோட்டு அடிக்கிறீர்கள்?
மோடி: கருப்பு பணத்தை ஒழிக்க!தீவிர வாதத்தை ஒழிக்க!
எ.கட்சிகள்: ஏன் ₹2000 நோட்டை ஒழிகிறீர்கள்?
மோடி:கருப்பு பணத்தையும் தீவிர வாதத்தையும் ₹2000 நோட்டால் ஒழிக்க முடியவில்லை! அதனால் ₹2000 நோட்டை ஒழிக்கிறேன். Image
Read 4 tweets
May 17, 2023
#அக்யூஸ்டுகளின்_தோஸ்த்_அண்ணாமலை

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். Image
தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.

செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.

எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி Image
Read 9 tweets
May 14, 2023
#சுயபரிசோதனை_நேரம்

நேற்று கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து விருப்பு வெறுப்பின்றி #கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும் என ஒரு கட்டுரை வெளியிட்டேன்.

இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி Image
இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.

"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் Image
மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது.. Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(