#பாட்டிகாலத்து_காங்கிரஸ்
தளத்திலும் களத்திலும்
திமுக தொண்டர்கள் பொறுத்து பொறுத்து போவார்கள் ஒரு லெவல் தாண்டியதும் கடுப்பாகி தூக்கி போட்டு மிதித்துவிட்டு, "யாருகிட்ட? நாங்க தாத்தா காலத்து திமுகடா" என்பார்கள்
நேற்று காங்கிரஸ்காரர்களுக்கு அப்படி சொல்லிக்க சந்தர்ப்பம் கிடைத்தது
#சிவகங்கை_சீமான்
கடந்த 2019 தேர்தலிலேயே சிவகங்கைல அப்பச்சி குடும்பத்திற்கு சீட்டுக்கொடுக்க ராகுல் சம்மதிக்கல. அப்பச்சி ஆல்ரெடி ராஜ்யசபா எம்பி வேற இருந்தார். தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து சீட்டு வாங்கி கொடுத்தார் அப்பச்சி. காரிய கமிட்டிய விட்டு கடுப்பில் வெளியே வந்தார் ராகுல்
#விளையாட்டு_பிள்ளை
காங்கிரஸ் சிக்கலில் இருக்கும்போது சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவது இவருக்கு வாடிக்கை. கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை கலாய்த்து டிவிட்டு போடுவதை கூட விட்டுவிடலாம். ஆனால் காங்கிரஸின் பரம்பரை எதிரி பாஜகவுக்கு பலமுறை ஆதரவா பேசி இருக்கிறார் இந்த ஓசி டிக்கெட்
#கூடா_நட்பு
குலாம் நபி ஆசாத் சச்சின் பைலட் போன்ற பல காலம் காங்கிரஸ் பதவிகளை அனுபவித்து, இன்றைக்கு அது அதிகாரத்தில் இல்லை என்பதற்காக வெளியேறிய போது அவர்களை போக விட்டது ராகுலின் கையாலாகத தனம் என்ற ரீதியில் பேசி திரிந்து இருக்கிறார். இதெல்லாம் ராகுல் கவனத்திற்கு போகாமலா இருக்கும்
#இந்திராகாந்தியா_ராகுல்?
இன்றைக்கு ராகுலுக்கு உள்ளே இருந்து குடைச்சல் கொடுக்கிற கூட்டத்தை விட அவர் பாட்டி காலத்தில் எதிர்ப்பு அதிகம். மாநிலத்திற்கு ஒரு பெருந்தலை இஷ்டத்துக்கு இந்திராவை ஆட்டி வைத்தது.
பழைய பிஜேபி ஜனசங் இந்திராவை ஊமைப்பொம்மை என அன்று வதந்தி பரப்பிக் கொண்டு இருந்தது
#இரும்பு_பெண்மணி
உப்பு பெறாத வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் இந்திரா குற்றவாளி என தீர்ப்பு சொன்ன போது, வெளி எதிரிகளை விட கட்சிக்குள் இருந்தே குடைச்சல் கொடுத்த மொரார்ஜி டார்ச்சர் அதிகம். ஜனசங் உடன் ரகசிய கூட்டணி அமைத்து காங்கிரசை கைப்பற்ற முயன்றதால் எமர்ஜென்சி கொண்டு வந்தார் இந்திரா
#இந்திராவும்ராகுலும்_பின்னேகார்த்திகளும்
கட்சி சார்பற்ற பொது மக்களே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ராகுலுடன் நிற்கும் போது துரோகிகள் யார் என்று அவருக்கு புரிந்திருக்கும். அவர் பாட்டி மாதிரி உறுதியான நடவடிக்கை எடுப்பதை விட அவர் சித்தப்பா சஞ்சய் காந்தி ஸ்டைலை பின்பற்றலாம்
#சஞ்சயின்_அதிரடிஅரசியல்
இந்திரா ஊமை என கிண்டல் அடித்து கிஸ்ஸா குர்ஸி என ஒரு படம் வந்தது. மொத்த படத்தையும் கூர்க்கவான் மாருதி கார் கம்பெனிக்கு அள்ளி வர செய்த சஞ்சய் அவற்றை எரித்து படம் எடுத்தவர்களை செமத்தியா கவனித்து விட்டார். ஆட்சி மாறியது கேஸ் போட்டார்கள்.
ஒன்னும் புடுங்க முடியல
#வித்தியாசமான_ராகுல்
பாட்டி போலவோ, சித்தப்பா போலவோ ராகுலால் செயல்பட முடியாது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் "காரில் போகும்போது குறுக்கே நாய் வந்தா அடிபட்டு சாகத்தான் செய்யும்" என்பவர்கள் இடையே, தன் தந்தையை சில்லு சில்லாக குதறியவர்களையும் மன்னித்து சிறையில் சென்று பார்த்தவர்
#முதிர்ச்சி
வெளிப்புறமாக குழந்தைத் தனமாக தோன்றினாலும், அரசியல்வாதிகள் அனைவரையும் விட முதிர்ச்சியான வார்த்தைகளை உபயோகிப்பவர். 50 வருடம் முன்பு தன் பாட்டி எமர்ஜென்சி கொண்டு வந்ததற்கு இன்றும் கூட மன்னிப்பு கேட்கும் பக்குவம் ராகுலுக்கு இருக்கிறது. இது நடைமுறை அரசியலுக்கு செட் ஆகாது
#Secularism_கேலிக்கூத்து
வீட்டுக்குள் இருந்து நமாஸ் செய்ததற்கு அஞ்சு லட்சம் அபராதம் விதித்து தெருவில் துப்பாக்கி கருடனும் காத்திகளுடனும் ராமநவமி கொண்டாடி கொண்டிருக்கும் தேசத்தில், சிறுபான்மை மதம், சிறுபான்மை மொழி பெரும் அபாயத்தில் இருக்கும் காலகட்டத்தில் ராகுல் போன்றவர் தான் தேவை
#தனித்தன்மை_மிக்கவர்
மதவெறி பிடித்து பெரும்பான்மை திமிரில் ஆடிக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு அன்பு மொழிகள் மட்டும் போதாது அதிரடிகளும் தேவை.
Secularism என்பது மதம் அற்ற நிலை அல்ல. மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அன்பை விதைப்பது.
அன்பை விதைக்கவும் அதிரடி தேவைப்படும் காலம் இது
#ஊடகங்களுக்கு_ஒன்று
2014 முன் இந்திய ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டன. பிறகு, மற்ற நிறுவனங்களைப் போல கட்டுக்கு கொண்டுவரப்பட்டன. நீங்கள் வாங்குற காசுக்கு மோடியை புகழுங்கள். ராகுலை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்?
பேரழிவின் பங்குதாரர் ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள்.
மனசாட்சி இல்லையா?
#மேலதிக_தகவல்
முதுகெலும்பு இல்லாத எச்சை ஊடகங்கள்..
ஆனால் அவைதான் பேரழிவின் #உள்ளும்_புறமும் உலகத்திற்கு படம் பிடித்து காட்டின
அது ஒரு காலம்..
சுயேச்சையான நியூஸ் போர்டல் அவற்றின் இடத்தை பிடித்து விட்டன
பேரழிவுடன் இவற்றையும் புதைக்கும் காலம் வரும்
#ராகுலின்_பெருந்தன்மை
நாலு வருஷம் முன் நாடே காஷ்மீர் பிரிவினைய எதிர்த்த போது ஜோதிராதித்திய சிந்தியா அதனை ஆதரித்து போட்ட பதிவு,
அப்ப கூட ராகுல் காந்தி டென்ஷன் ஆகல..
கூட வச்சிருந்து பஜ்ஜி ஊட்டி விட்டார்.
கார்த்தியை புறக்கணித்து இருப்பது
குடைச்சல்காரர்களுக்கு எச்சரிக்கை தான்
#வெறுப்பு_வியாபாரி
நரேந்திர தாமோதர தாஸ் பிரதமர் ஆன பின்/ ஆவதற்கு முன் பேசிய வெறுப்பு பேச்சுகளின் ஆதாரபூர்வமான சிறு தொகுப்பு..
இதை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் யார் வெறுப்பை தூண்டியது
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.