👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood

Mar 30, 2023, 10 tweets

#கிழக்கின்_ஏதன்ஸ்
நம்ம மதுரை தான் 😂

நேற்று போட்ட thread ல

@arakkarperiyar ஒரு கருத்து சொல்லி இருந்தார்

பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்

ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்

அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது

#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்

#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்

#தூங்காநகரம் சங்ககாலத்திலேயே இருந்திருக்கு 🤗

`மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி’ -(மதுரைக்காஞ்சி 425)

#அங்காடித்தெரு
இதில் நாளங்காடி என்பது பகலில் இயங்குவதையும், அல்லங்காடி இரவில் இயங்குவதையும் குறிக்குது

கொற்கையிலும் தொண்டியிலும் நங்கூரமிட்ட கப்பலில் இருந்து வைகை வழியே

மதுரையை தூங்க விடாமல் ஈழத்தில் இருந்தும் ரோமாபுரியில் இருந்தும் பொருள்கள் இறங்கி கொண்டே இருந்திருக்கு

#சேரர்தொடர்பு
எந்த நம்பூதிரி செய்த வேலை என தெரியல..

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே இருப்பவன் கிழக்கே இருப்பவனை இன்னமும் பாண்டி என்றுதான் இளக்காரமா அழைக்கிறான்

பாண்டியர்கள் ரொம்பவே சேரர்களை டார்ச்சர் பண்ணி இருப்பான் போல

ஆனா ஈழத்துடன் ரெண்டு பேருமே குளோசா இருந்திருக்கிறார்கள்

#கோவில்நகரம்
மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு சித்திரை திருவிழா.

தசாவதாரம் படத்தில் காட்டிய மாதிரி சைவர்களுக்கும் வைணவர்களுக்கும், அந்தக் காலத்தில் செட்டே ஆகாது

மாலிக்காபுர் படையெடுத்து வந்த போது திருப்பதி ஏடு கொண்டலவாடு மதுரைல கொஞ்ச நாள் ஸ்டே பண்ணி
இருக்கார்

#சமணர்_கழுவேற்றம்

மதுரையின் ஒரிஜினல் ஓனர் யார்னு சுல்தான்களும் நாயக்கர்களும் சண்டை போட்ட காலத்திற்கு வெகு முன்னே
அந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கு.

அப்படி நிகழவே இல்லை பிற்காலத்தில் ரைட் அப் எழுதினாலும்

வைணவர்களை டார்ச்சர் செய்த சைவர், சமணரை என்ன பாடு படுத்தி இருப்பாங்க

#கழுவேற்ற_ஆதாரங்கள்
நின்ற சீர் நெடுமாறன் சாமணத்தம் த்தில் 8 குன்றுகளில் வாழ்ந்த எண்ணாயிரம் சமணரை கழுவேற்றியதாக பெரிய புராணம், பின் வந்த, தக்கயாக பரணி, திருவிளையாடல் புராணத்தில் வருது.
கழுகுமலை, மீனாட்சி அம்மன் கோயில்களில் ஓவியமா தீட்டி இருக்கு. சித்திரை திருவிழாவில் நடிக்கப்படுது

#சமணர்_இலக்கியம்
ஆனால் இது பற்றிய எந்த தகவலும் சமணர் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆதாரங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம். அல்லது மொத்த சமணர்களும் படுகிலை செய்யப்பட்டிருக்கலாம்.
எண்ணாயிரம் என்பது எண்ணிக்கை அல்ல. ஒரு ஊர். அங்கே இருந்த ஒரு அஞ்சாறு சமணர் மட்டும் கொல்லப்பட்டதா ஒன்று ஓடுது

#புத்தமத_தொடர்பு
3000 வருடங்களாக மதுரை பல பல மதத்தவராலும் இனத்தவராலும் ஆளப்பட்டாலும், பல கொடூரங்களை நிகழ்த்தி இருந்தாலும். சோழ தேசத்து வாணிகன் மனைவி கண்ணகிக்கு அங்கு நிகழ்ந்த அநீதிக்கு, ஒரு மாநகரையே அழித்தது எல்லாம் கொஞ்சம் ஓவர். என்றாலும் சிறந்த காப்பியம் கிடைத்தது என நகர்வோம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling