👁️ 🌹👁️ Profile picture
Mar 30, 2023 10 tweets 5 min read Read on X
#கிழக்கின்_ஏதன்ஸ்
நம்ம மதுரை தான் 😂

நேற்று போட்ட thread ல

@arakkarperiyar ஒரு கருத்து சொல்லி இருந்தார்

பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்

ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்

அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது
#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்

#தூங்காநகரம் சங்ககாலத்திலேயே இருந்திருக்கு 🤗

`மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி’ -(மதுரைக்காஞ்சி 425)
#அங்காடித்தெரு
இதில் நாளங்காடி என்பது பகலில் இயங்குவதையும், அல்லங்காடி இரவில் இயங்குவதையும் குறிக்குது

கொற்கையிலும் தொண்டியிலும் நங்கூரமிட்ட கப்பலில் இருந்து வைகை வழியே

மதுரையை தூங்க விடாமல் ஈழத்தில் இருந்தும் ரோமாபுரியில் இருந்தும் பொருள்கள் இறங்கி கொண்டே இருந்திருக்கு
#சேரர்தொடர்பு
எந்த நம்பூதிரி செய்த வேலை என தெரியல..

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே இருப்பவன் கிழக்கே இருப்பவனை இன்னமும் பாண்டி என்றுதான் இளக்காரமா அழைக்கிறான்

பாண்டியர்கள் ரொம்பவே சேரர்களை டார்ச்சர் பண்ணி இருப்பான் போல

ஆனா ஈழத்துடன் ரெண்டு பேருமே குளோசா இருந்திருக்கிறார்கள்
#கோவில்நகரம்
மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு சித்திரை திருவிழா.

தசாவதாரம் படத்தில் காட்டிய மாதிரி சைவர்களுக்கும் வைணவர்களுக்கும், அந்தக் காலத்தில் செட்டே ஆகாது

மாலிக்காபுர் படையெடுத்து வந்த போது திருப்பதி ஏடு கொண்டலவாடு மதுரைல கொஞ்ச நாள் ஸ்டே பண்ணி
இருக்கார்
#சமணர்_கழுவேற்றம்

மதுரையின் ஒரிஜினல் ஓனர் யார்னு சுல்தான்களும் நாயக்கர்களும் சண்டை போட்ட காலத்திற்கு வெகு முன்னே
அந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கு.

அப்படி நிகழவே இல்லை பிற்காலத்தில் ரைட் அப் எழுதினாலும்

வைணவர்களை டார்ச்சர் செய்த சைவர், சமணரை என்ன பாடு படுத்தி இருப்பாங்க
#கழுவேற்ற_ஆதாரங்கள்
நின்ற சீர் நெடுமாறன் சாமணத்தம் த்தில் 8 குன்றுகளில் வாழ்ந்த எண்ணாயிரம் சமணரை கழுவேற்றியதாக பெரிய புராணம், பின் வந்த, தக்கயாக பரணி, திருவிளையாடல் புராணத்தில் வருது.
கழுகுமலை, மீனாட்சி அம்மன் கோயில்களில் ஓவியமா தீட்டி இருக்கு. சித்திரை திருவிழாவில் நடிக்கப்படுது
#சமணர்_இலக்கியம்
ஆனால் இது பற்றிய எந்த தகவலும் சமணர் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆதாரங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம். அல்லது மொத்த சமணர்களும் படுகிலை செய்யப்பட்டிருக்கலாம்.
எண்ணாயிரம் என்பது எண்ணிக்கை அல்ல. ஒரு ஊர். அங்கே இருந்த ஒரு அஞ்சாறு சமணர் மட்டும் கொல்லப்பட்டதா ஒன்று ஓடுது
#புத்தமத_தொடர்பு
3000 வருடங்களாக மதுரை பல பல மதத்தவராலும் இனத்தவராலும் ஆளப்பட்டாலும், பல கொடூரங்களை நிகழ்த்தி இருந்தாலும். சோழ தேசத்து வாணிகன் மனைவி கண்ணகிக்கு அங்கு நிகழ்ந்த அநீதிக்கு, ஒரு மாநகரையே அழித்தது எல்லாம் கொஞ்சம் ஓவர். என்றாலும் சிறந்த காப்பியம் கிடைத்தது என நகர்வோம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 👁️ 🌹👁️

👁️ 🌹👁️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malarvili1998

Jun 23, 2023
#தமிழ்நாட்டில்_பேருந்து

இந்தியாவிலேயே முதன் முதலாக, பயணிகள் மற்றும் தபால் வாகனங்களை நிர்மாணித்து ஓட்டியது சிம்ப்சன் & கோ.

எஞ்சினையும் அவர்களே உருவாக்கி இருக்கிறார்கள்

1904 இல் தொடங்கிய இப்பயணம் இன்று இந்தியாவின் மோட்டார் தலைலநகரமாக சென்னையை வார்த்து எடுத்திருக்கு
சமவெளியில் மட்டும் இல்லை, மலைப் பிரதேச சாலைப் போக்குவரத்திலும் முன்னோடி தமிழ்நாடு தான்.

பாலக்காடு - கோவை - ஊட்டி வழித்தடம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டு,

1920லேயே பொதுப் போக்குவரத்து நடந்திருக்கு

இரண்டு இடங்களில் இந்த பேருந்துகள் நின்று ரேடியேட்டர் cool செய்தன
பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையை சமாளிக்க 1920 களில் மாடி பஸ் எனப்படும் double டெக்கர் பேருந்துகளும் இயக்கப்பட்டன..

இவை சுதந்திரம் அடைந்த பின்னும் இயக்கப் பட்டன

பெருநகரமாக அசுர வளர்ச்சி அடைந்த சென்னையின் வீதிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய மின் கம்பிகளால் நின்று போயின
Read 8 tweets
Jun 21, 2023
#I_Couldnot_Breathe

பதிவிட்டவர் #VijayBhaskarVijay

1964 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் பல பல இடங்களில் Whites only போர்டுகள் இருந்திருக்கின்றன.

இங்கே வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான நிறவெறி கொள்கையை ஹோட்டல்கள், தியேட்டர்கள், ஸ்விமிங் பூல்கள் என்று பல Image
இடங்களில் பின்பற்றி இருக்கின்றனர்.

கறுப்பினத்தவர் இதை எதிர்த்து கடுமையாக போராட அதிபர் கென்னடி இந்த நிறவெறியை தடை செய்யும் சட்டம் கொண்டு வர அதற்கான முன் ஏற்பாடுகள் செய்து அதை அறிமுகப்படுத்தும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு லிண்டன் பி ஜான்சன் அதிபராக பொறுப்பேற்றார் Image
கிட்டத்தட்ட ஒருவருடம் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறார். St. Augustine movement என்ற அமைப்பு இப்பிரச்சனையில் மிக தீவிரமாக இறங்கி போராடுகிறது.

அதனால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து அதிரடிக்கின்றனர்.

அப்படித்தான் நெல் போர்டு என்ற பதினேழு
Read 10 tweets
Jun 20, 2023
#முதல்_இருப்புபாதை_வழித்தடம்

இது என்ன கேள்வி?

பத்தாம் வகுப்பு புவியலில் படித்தோமே..

மும்பை - தாணே இடையிலான 34 கிமீ பாதை என்போர், அடுத்த பதிவிற்கு நகரவும்.

விமான போக்குவரத்தை போலவே, ரயில் போக்குவரத்துக்கான முதல் திட்டமும் சென்னையிலேயே தொடங்கப்பட்டது

irfca.org/docs/history/i…
#RedHills_Railway

வில்லியம் ஆவரி உருவாக்கிய நீராவி இன்ஜினை கொண்டு ஆர்தர் காட்டன் முதல் இருப்புப் பாதையை செங்குன்றம் - சிந்தாதிரிப்பேட்டைக்கு அமைத்தார்.

சென்னையின் சாலை பணிகளுக்காக கிரானைட் கொண்டுவர ரெட் ஹில்ஸ் ரயில்வே 1836 ல் ஏற்படுத்தப்பட்டது

fb.watch/lhr6Nob2WT/?mi…
ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் அணை கட்டுவதற்கும் இருப்புப் பாதை அமைத்துக் கொடுத்தவர் ஆர்தர் காட்டன்

1845இல் மெட்ராஸ் ரயில்வே துவங்கப்பட்டது.

அதே ஆண்டில் ஈஸ்ட் இந்தியன் ரயில்வே கம்பெனி (EIRC) உருவானது

1849 ல் பாராளுமன்றத்தில் தீபகற்ப இந்திய ரயில்வே (GIPR) சட்டம் உருவானது Image
Read 6 tweets
Jun 19, 2023
#கட்டிடங்களின்_கதை 17

#மெட்ராஸ்விமானநிலையம்

By

#வெங்கடேஷ்_ராமகிருஷ்ணன்

மனிதனின் பழங்கால ஆசைகளில் ஒன்று பறவைகள் போல வானில் பறக்க வேண்டும் என்பது.

பறக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் தேர்ச்சி பெற்றபோது மெட்ராஸ் பின்தங்கியிருக்கவில்லை.

ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் Image
பறக்கவிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் அதன் வானத்தில் ஒரு விமானத்தைக் கண்டது.

நகரத்தின் விமானப் போக்குவரத்து வரலாறு 1910இல் தொடங்கியது.

கோர்சிகா தீவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஜியாகோமோ டி ஏஞ்சலிஸ் ஒரு விமானத்தை உருவாக்கினார்.

ஜூலை 1909இல் ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில் Image
பறந்து கடந்த பிரெஞ்சுக்காரரால் ஈர்க்கப்பட்ட டி’ஏஞ்சலிஸ், நகரத்தின் முன்னணித் தொழிலதிபரான சிம்ப்ஸனுடன் இணைந்து விமானத்தை உருவாக்கினார். இந்த விமானம் முழுக்க முழுக்க டி’ஏஞ்சலிஸின் சொந்த வடிவமைப்பு.

ஒரு சிறிய சக்தி எஞ்சின் பொருத்தப்பட்ட விமானத்தை 10 மார்ச் 1910 அன்று, டி’ஏஞ்சலிஸ் Image
Read 20 tweets
Jun 17, 2023
#கல்கத்தா__லண்டன்_பேருந்து

படத்தை பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு காலத்தில் இந்த பேருந்து சேவை இருந்தது என்பது உண்மைதான்

அப்போது உலகின் மிக நீளமான சாலை கல்கத்தாவிலிருந்து லண்டன் வரை இருந்தது

எனவே கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பஸ்ஸில் செல்ல சாத்தியமானது Image
இந்தியன் அல்லது ஆங்கில கம்பெனி அல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஆல்பர்ட் டூர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய சேவை.

1950களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது, சில காரணங்களால் அதை மூட வேண்டியிருந்தது. பேருந்து கட்டணம் 85 - 145 பவுண்டுகள் Image
கொல்கத்தாவில் தொடங்கி பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, லாகூர், ராவல்பிண்டி, காபுல், கந்தர், தெஹ்ரான், இஸ்தான்புல் முதல் பல்கேரியா, யூகோஸ்லாவியா, வியன்னா மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் வழியே, சுமார் 20300 கிமீ ஓடி 11 நாடுகளைக் கடந்தது
இந்த பேருந்து லண்டனை சென்றடையும். Image
Read 5 tweets
Jun 16, 2023
#கல்வித்தந்தை_கருமுத்து_தியாகராஜன்

கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.

இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.

இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார். Image
இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார்

இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார்.

நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார்.

தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

. Image
இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார்.

இளம்வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(