Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Apr 3, 2023, 19 tweets

#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

02/02 தொடர்கிறது

தன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.

அவளுடைய குறையை பார்த்த யாருக்கும்,அவளின் அன்பு தெரியவில்லை,

அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்..!

அவளின் தந்தை மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

திருமண வயது வந்தது, ஆனால் பேச
முடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...

பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது.

பிறகு காலங்கள் கடந்தது எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..! எங்களுக்கும் வயது ஆகி விட்டது.

ஆனால் என் மனைவி ஒரு குழந்தை மாதிரி......தம்பி" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம்.

(கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாக துடைத்தார்)

(சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது)

தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..

"அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னை தவிர வேறு யாரையும் தெரியாது...

ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்க பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..
வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை.

அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக "அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்க குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்."

பிறகு அந்த பணத்தை கொண்டு மருத்துவரிடம் சென்று "என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று வாய் பேச முடியாத நிலையிலும்,

செய்கையை காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!
(என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது)

"பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்".என்று தன்னை திட படுத்தி கொண்டு மீண்டும் தொடர்ந்தார்..

"அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும்

ஆனால் அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால் என் மனைவியின் நிலை என்ன என்று..?

அதற்கு தான் இந்த "பணம்" ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்..

அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும்,

மீதி பாதி தொகையை என் மனைவிக்காக சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..!

அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி"..என்றார்.

"சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்...கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்...!

அவன் கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!

அதில்.....

"நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன்.

அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்...

நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பாத்து கொள்ளுங்கள்".

இதுவே என் கடைசி ஆசை.."

..........

இதை படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை,கால் நடுக்க ஆரம்பித்தது..
கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்...

"சரி தம்பி எனக்கு நேரம் ஆகி விட்டது அதை அனுப்பி விடுங்கள்,ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர்.

என்ன செய்ய வேண்டும் ஐயா என ஆவலோடு கேட்டான்.

"வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழ கூடை இருக்கிறது அந்த பழ கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா" என்றார்.

நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்..

வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி....!

அந்த முதியவருக்கு இடது கை இல்லை...!

(இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை..

அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்)

"கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்"... அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது.

"மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்..

உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்.....,!

நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்ட பட தேவையில்லையே" என்று குரலில் ஒரு நடக்கத்தோடு சொன்னான்.

இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்... ஆ...ஆ...ஆ.

"என் மனைவி நம்பி வந்தது என்னை தான்......!

சொத்தையோ....! அல்லது பிள்ளையை யோ இல்லை......!"

"அவளுக்காக சுமகின்ற இந்த சுமையும் ஒரு சுகமே.....!"
என்று சொல்லி கொண்டே

உச்சி வெயிலில் உற்சாகமாக பழ கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்... ! அந்த முதியவர்.

சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்....! பெருந்துழி யாய்...! தரையில் விழுந்தது...! தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல...! அவனின் சுபாவமும்...!

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்"
"முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும்" தான்
உலகின் ஆக சிறந்த காதல் ஜோடிகள்...!

கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில் கொடுத்து செல்வோம் உண்மையான அன்பை..!

💐💐💐💐💐💐💐
இனி வரும் நாட்கள் வசந்த காலமாகட்டும்..!

#மனைவி ஒர் அற்புதமான இறைவன் கொடுத்த வரம்

கண்களில் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling