அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 4, 2023, 7 tweets

#நற்சிந்தனை
கழுதையை நடக்க விட்டு அதன் சொந்தக்காரரரும், அவர் மகனும் அதன் கூட நடந்து சென்றனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் என்று கேட்டான்.
'எந்த மடையனாவது கழுதையை நடக்க விட்டு, அதனுடன் நடந்து செல்வானா? கழுதை ஒரு வாகனம்' என்றான்.

பெரியவர் தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அனுமதித்தார். சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய் என்று மகன் கேட்டான்.
'என்ன அநியாயம்! நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை

மேலமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.'
பெரியவர் கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான்.
வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. பெரியவரைப் பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான். என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என மகன் வினவினான்.
'என்ன கொடுமை இது. நீ சிறுவன்.

உன்னை நடக்க சொல்லி விட்டு, அந்த பெரிய மனிதன் என்ன சொகுசாக கழுதை மேல் அமர்ந்து செல்கிறான். நீயும் ஏறிக்கொள். இதில் ஒன்றும் தவறு இல்லை.’ பெரியவரும் மகனும் கழுதை மேல் அமர்ந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். வழியில் ஒரு சந்தை குறிக்கிட்டது. கழுதை மேல் இருவர் அமர்ந்து செல்வதை கண்ட

மக்கள் கூப்பாடு போட்டனர். கழுதை சற்று மிரண்டு பின் நின்றது.
'என்ன அநியாயம் இது. இந்த கழுதை மேல் இருவர் அமர்ந்தால் கழுதை என்னாகும்.'
மக்களின் குரலுக்கு செவி சாய்த்த பெரியவரும், மகனும் கழுதையை தங்கள் தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர். வழியில் ஒரு ஆற்றை கடக்க குறுகிய பாலம் வழியே

நடந்தனர். இதை கண்ட மக்கள் வாய் விட்டு சிரித்தனர்.
'என்ன கோமாளித்தனம் இது. எந்த பைத்தியக்காரனாவது, கழுதையை தோளில் சுமந்து செல்வானா?’ மக்களின் வெடிச் சிரிப்பில் கழுதை மிரண்டது. ஆற்றில் விழுந்தது, துடி துடித்தது, பின் மூழ்கியது.

இது தான் நாம் வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம்

சொல்லும். வீண் பழி சுமத்தும், ஏளனம் செய்யும். ஏசும், எட்டி உதைக்கும், வசை பாடும். கண்டவன் சொல்வதற்கு எல்லாம் தலை சாய்க்காமல் நம் மனசாட்சிக்கு மட்டும் தலை வணங்குவது மட்டுமே நமக்கு நன்மை தரும், அல்லது கழுதையின் முடிவு போல் வீணாக முடிந்து விடும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling