#எட்டுக்குடி_முருகன்_திருக்கோயில்
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் சரவண பவ என்று உச்சரித்தவாறு இருந்த அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கினான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன்
அச்சிற்பி வடித்த சிலையில் சொக்கி போனான். இது போன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தன் விடா முயற்சியால் மற்றொரு அற்புதமான
முருகன் சிலையை வடித்தான். தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்க தொடங்கியது. அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேய
சிலையாக நின்று விட்டது. காலப்போக்கில் இந்த ஊரின் பெயரும் எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என மாறிவிட்டது. இந்த எட்டுக்குடி முருகன் கோயில் சிறப்பு என்னவென்றால் பார்க்கும் விதத்திற்கேற்ப முருகனின் விக்ரகம் நமக்கு காட்சி தருவதாகும். குழந்தையாக பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக
பார்த்தால் இளைஞன் போலவும், முதியவராக பார்த்தால் முதியவர் தோற்றத்திலும் முருகன் காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார். எட்டுக்குடி கோயிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு
கால்கள் மட்டுமே. இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தணிக்கும் வகையில் தினந்தோறும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் முருகனின் நவ தளபதிகளும் இருக்கின்றனர். ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், மகாலட்சுமி, சௌந்தரராஜ பெருமாள், நவகிரகங்கள் ஆகியோருக்கு
சன்னதிகள் உள்ளன. இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப் படுகிறது. சத்ருக்களால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்க இப்பூஜையை இங்கு செய்தால் சத்ரு தொல்லை நீங்கி நமக்கு நன்மை ஏற்படும் என்றும், மாறாக எதிரிகள் அழிய வேண்டும் என்கிற எண்ணத்தில் நாம் இத்தகைய பூஜையை இங்கு
செய்தால் நமக்கு தீமைகள் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். இங்கு முருகன் அம்பாறையிலிருந்து அம்பு எடுக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் இந்த முருகனை தரிசிப்பதாலும், அந்த முருகனின் வரலாறை குழந்தைகளுக்கு சொல்வதாலும் அவர்கள் பயம் நீங்கி படைப்பாற்றல
மிக்கவர்களாக திகழ்வர். இக்கோயிலின் முன்புள்ள சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவம் நிவர்த்தியாகிவிடும் என்பது சிறப்பிற்குரியது ஆகும். சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பௌர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலாபிஷேகம் துவங்கும். இவ்விழாவில்
குறைந்தபட்சம் 23 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகையில் சிறப்பு பூஜை உண்டு. இங்கு சத்ரு சம்ஹார திரிசதை
எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. #வான்மிக_சித்தருக்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார். வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார். வான்மீகரைப் பற்றி போகர்
புகழ்ந்து பாடியுள்ளதால் இவர் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார். போகர் 7000 எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும், உலகிற்கு இராமாயணத்தை தந்தவர், தமிழ் புலமை மிக்கவர், காய சித்தி கொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எட்டுக்குடி என்கிற ஊரில் அமைந்துள்ளது கோயில். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
நடை திறப்பு
காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 மணி
வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில் எட்டுக்குடி – 610212 நாகப்பட்டினம் மாவட்டம் தொபேசி: 4366 – 245426
ஓம் சரவணபவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.