அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 14, 2023, 8 tweets

#சத்தியமூர்த்திபெருமாள்_திருக்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் ஊரில் அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உள்ளது. திருமயத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இவ்விரு கோயில்களும் திருமயம் மலை சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக உள்ளது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்திய மூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும், மற்றொரு கரத்தில் சங்குடனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக் காரணமாகிய

பெருமாள் திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். அதாவது பெருமாளின் கண்கள் அரைக்கண்ணாக மூடியும், இதழ்களில் மென் நகையுடனும், பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையிலும், வலக்கரம் ஆதிசேஷனை அணைத்துக் கொண்டும் காட்சியளிக்கிறார்.

சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயிலில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது. இத்தலத்தில் தாயார் உஜ்ஜீவனத்தாயார் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதி உலா வருவது இல்லை. 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல

காப்பானது மூலவர் பெருமாளுக்கு பூசப்படுகிறது. வைகாசி பௌர்ணமி தேரானது 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் வருடபிறப்பு, ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். உஜ்ஜீவனத்தாயாரை வழி

பட்டால் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியம் பெறலாம். நரம்பு தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் இத்தாயாரை வழிபட்டால் பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் பெருமாளுக்கு வெண்ணெய் பூசியும், சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும்

புடவை சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம். நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 5 - 8

முடிந்த போது இத்திருத்தலத்திற்கு சென்று தரிசிப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling