Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Apr 16, 2023, 14 tweets

#யதார்த்த_பதிவு

நேத்துலேர்ந்து.. ஜாலியா கலாய்ச்சும்.. கோபமாகவும்.. கேலியாகவும் பதிவு போட்டாலும்..

என் மனதின் உண்மை நிலை என்னவோ.. ஒரு ஆதங்க பெருமூச்சு.. ஒரு பெரிய வருத்தம்..

காரணம் என்னன்னா..

1. என்னதான் மாச சம்பளம் வாங்கினாலும்.. அதற்கேற்றா மாதிரி செலவுகளும்,

சேமிப்புகளும், ப்ளான் செய்தாலும்..

சில எதிர்பாராத செலவுகள்.. எதிர்பாராத பயணங்கள்.. மருத்துவச் செலவுகள்..

என்று வரும்போது டக்குனு என்ன பண்றதுனு தான் யோசிக்க தோனும்..

பயங்கர பதட்டம் வரும்.. தலையை அடகு வச்சாவது அதை எப்படியோ சமாளிப்போம்ங்கறது வேற விஷயம்..

2. என்னதான் சேமிப்பு.. காப்பீடு என்று இருந்தாலும்.. ஃபிப்ரவரி.. மார்ச்ல் அந்த வருமான வரிக்காக கமிட்மெண்ட்களை சரிகட்ட செய்ய வேண்டிய செலவுகள்.. திடீர் மருத்துவ செலவுகள்.. ஏப்ரல் மே இல் பிள்ளைகளின் ஸ்கூல் முதல் டெர்ம் ஃபீஸ்.‌..

மறுபடியும் நவம்பரில் இரண்டாம் டெர்ம் ஃபீஸ்..

இதைத்தாண்டி சில அத்தியாவசிய செலவுகள்.. பண்டிகை கால துணிமணிகள் போல..

இப்படி ஒவ்வொரு செலவுக்கும் இதயம் ஒரு நொடி நின்றுதான் துடிக்கும்..

3. மாதச்சம்பளம் வரும்போதே வரி பிடித்தம் என்று

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணம் பிடிக்கப்பட்டே கைக்கு வரும் சம்பளம்..

ஒவ்வொரு விஷயத்திலும் வரி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகிப்போன நிலை..

டோல் முதற்கொண்டு கட்டிவிட்டு பயணிக்கும் பயணங்கள்..

சம்பளம் வந்த ஐந்தே நாட்களில் வந்த அமௌண்ட்..

வீட்டு லோன்.. கார் லோன்.. கிரெடிட் கார்ட் பேமெண்ட் அது இது னு சடசடவென அக்கௌண்ட்இல் குறையும் நிலை ..

இதைத்தாண்டி நேர்மையான வாழ்க்கை வாழறோம்னு ஒரு அசட்டு பெருமை..

4. மாதச்சம்பளம் என்றாலும் அப்படி ஒன்றும் சௌகரியமாக.. இந்த கார்ப்பரேட்களில் வேலை செய்பவர்க்கு..

அது வந்துவிடுவதும் இல்லை..

ரத்தத்தின் கடைசி சொட்டு வரை உறிஞ்சி எடுக்கப்பட்டே அது பணமாக மாறி வருகிறது..

ஒவ்வொரு நாள் அலுவலகம் செல்லும்போதும்.. இன்னும் எத்தனை நாள்தான் இப்படி என்றும்..

வீட்டிற்கு வந்து குடும்பத்தை பார்க்கையில்..

இவர்களுக்காக மறுநாள் வேலைக்கு போயே ஆகணும் ங்கற எண்ணம்.. இப்படிதான் வாழ்க்கை போகிறது..

5. இதை எல்லாத்தையும் தாண்டி..

கஷ்டப்பட்டு நாம் ஈட்டிய அதே பண விஷயத்தில் நம்மை ஏமாற்றுபவர்கள்..

(ச்சே ச்சே.. அவங்க நல்லவங்க.. நாமதான் ஏமாந்தவர்கள்)..

ஏதோ ஒரு‌ சந்தர்ப்ப சூழ்நிலையில் நாம் கொடுத்த பணத்தை

இப்போ தர்றேன் அப்போ தர்றேன்னு இழுத்தடிக்கும் "மலந்தின்னிகள்"..

அந்த பணம் இனி வராது... அது அவருக்கு போட்ட "வாய்க்கரிசி" என்று நினைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவது..

அதே பணத்தால் ஸ்டேட்டஸ் என்று கூறி திமிருடன் திரியும் சில அல்ப உறவுகள்..

அதே பணத்தை வைத்து... பணத்திற்காக ஏமாற்றும் சில உறவுகள்..

நட்புகள் என்று பணம் படுத்தும் பாடு..

இப்படியாக ஒரு நடுத்தர வர்க்கம் (அது அப்பரோ.. லோயரோ..) பணத்திற்காக படும் பாடு சாதாரணமல்ல..

என்னதான் பணம் வாழ்க்கைல சந்தோஷம் தராது..

அது இது.. னு தத்துவம் பேசினாலும்.. அதற்கான தேவை நமக்கு சிதைக்கு போகும்வரை இருந்துகொண்டேதான் இருக்கிறது..

நடுத்தரத்துக்கே இவ்வளவுன்னா.. ஏழைகளுக்கு..? கேட்கவே வேண்டாம்.. அவங்களுக்கு ஒரு நல்ல விஷயம்..

இல்லைங்கற ஒரே பிரச்சனையோட போய்டுது..

நம்மள மாதிரி திரிசங்கு நிலை இல்லை..

இதெல்லாம் இப்படி இருக்க..

இவனுங்க ஒவ்வொருத்தனுக்கும் கோடிகளில்..‌

அதுவும் ஆயிரமாயிரம் கோடிகளில் சொத்துகள்.. (நூறுகளில் இருக்கும் கனி நல்லவரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!)..

என்பதை காணும்போதும் வருத்தமே மேலிடுகிறது.

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு எழுதி வைத்து.. பார்த்து பார்த்து செலவழிக்கும்..

நாமெல்லாம் நிஜமாகவே பைத்தியங்கள்தான்.. ஏமாந்தவர்கள் தான்..

எத்தனை மோடி வந்தாலும்.. எத்தனை அண்ணாமலை வந்தாலும்.. இதெல்லாம் மாறாது..

நாம ஒவ்வொருத்தரும் யதார்த்தத்தை.. தர்மத்தை புரிஞ்சுக்காத வரை..!!

புரிந்து கொண்டு அவர்களுக்கு கரம் கொடுப்போம் என உறுதி ஏற்போம்

ஜெய்ஹிந்த்

🙏🙏🙏🙏

நன்றி பாலாஜி சேஷாத்திரி முகநூல்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling