அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 17, 2023, 11 tweets

#இடர்_தீர்த்த_பெருமாள்_கோவில்
நாகர்கோவில் நகரில் வடிவான தெருக்கள் அமைந்த வடிவீஸ்வரம் பகுதியில் இடர் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். தென்னகத்தை ஆண்டு வந்த குலோத்துங்க சோழ மன்னன் நாக தோஷத்தால்

அவதிப்பட்டு வந்தான். பரிகாரங்கள் பல செய்தும் பலன் அளிக்கவில்லை. ஆஸ்தான ஜோதிடர் கூறியதற்காக காஞ்சிபுரம் சென்று பெருமாளை தரிசித்து வந்தான். அன்றிரவு அவனது கனவில் திருமலையில் நின்றருளும் வேங்கடவன் வந்தார். உனது இடர் தீர்ந்து போகும் இனி அச்சம் வேண்டாம் என்று கூறினார். அதன்படி அவன்

இடர் தீர்ந்து போனது. தான் கனவில் கண்ட அதே ரூபத்தில் வேங்கடவனுக்கு சிலை வடிவம் கொடுத்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கோயில் எழுப்பினான். இடரை தீர்த்தவர் என்பதாலே குலோத்துங்க சோழ மன்னன், இத்தல பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் என நாமம் இட்டு வணங்கினான். கிழக்கு நோக்கி அமைந்த

இந்தக் கோவிலில் இடர் தீர்த்த பெருமாள் சன்னிதி நடுநாயகமாக உள்ளது. பெருமாளும் கிழக்கு நோக்கியே காட்சி அளிக்கிறார். கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை தரிசிப்பது கண்கொள்ளக் காட்சியாகும். அதுவும் முழு அலங்காரத்தில் இருக்கும் பெருமாளை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்

பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாள் தனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பார். இந்த தலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி இணைந்திருப்பது இன்னும் விசேஷம். இந்த ஆலயத்திலும் சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலய வழிபாட்டுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. பெருமாள் சன்னிதிக்கு முன்பாக ராஜேஸ்வரி அம்மன் காட்சி தருகிறார். தென்திசை நோக்கி அம்மன் வீற்றிருக்கிறார். சன்னிதானத்தின் வெளியே உள்ள பிரகாரத்தில் இடமிருந்து வல்லப கணபதி முருகன் சன்னிதி, சிவன் சன்னிதி, சீதாராமர்–லட்சுமணர்

சன்னிதி, அனுமர் சன்னிதி போன்றவை உள்ளன. மேலும் நவக்கிரக சன்னிதியும் உள்ளது. இது தவிர கோவிலின் நுழைவு வாசலை ஒட்டி இடப்பக்கம் அரசமரத்து விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் இங்கு கிடையாது. சிவனுக்கு உகந்த வில்வமரம் இந்த கோவிலில் இருப்பது தனிச் சிறப்பு. இக்கோவிலில்

மாதம்தோறும் (மாசி தவிர) விசேஷம் உண்டு.
சித்திரை 1–ந் தேதி – சிறப்பு பூஜை. 10–ந் தேதி – 108 குட பால் அபிஷேகம்.
வைகாசி மாதம் – மலர் முழுக்கு பெருவிழா.
ஆனி மாதம் – வருஷாபிஷேகம்.
ஆடி மாதம் – ராஜராஜேஸ்வரிக்கு சிறப்பு பூஜை.
ஆவணி மாதம் –கிருஷ்ண ஜெயந்தி.
புரட்டாசி மாதம் – கருடசேவை.

ஐப்பசி மாதம் – கந்த சஷ்டி.
கார்த்திகை மாதம் – பரணி தீபம்.
மார்கழி மாதம் – திருக்கல்யாணம்.
தை 1–ந் தேதி – சிறப்பு பூஜை.
பங்குனி – ராமநவமி இந்த கோவிலில் 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை நீலகண்ட சிவன் பிறந்த இடமாக இது பிரபலமானது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை

திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு நடையை அடைத்து மாலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கிறார்கள். இரவில் 7.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இந்த நேரம், பக்தர்களின் கூட்டத்தை கணக்கிட்டு

மாறுபடுகிறது. இந்த கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் மிக அருகில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
சென்று தரிசிப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling