அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 18, 2023, 10 tweets

#இருகூர்_ஒண்டிப்புதூர்_நீலகண்டேஸ்வரர் ஆலயம் கோயம்பத்தூர்
மூலவர்: நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர்
அம்மன்: சுயம்வர பார்வதி தேவி மீனாட்சியம்மன்
இக்கோவில் 3000 வருட பழமையானது. நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு,

திருமுருகன் பூண்டி செப்பேடுகளில் இருந்து இருகூரின் பழமையை அறிய முடிகிறது. இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. (சீழர்களால் கட்டப்பட்டது) சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனதாகவும், இருளர்

தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர் காரணம் கூறப்படுகிறது.
லிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில்

தண்டத்துடன், ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார். இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், சுயம்வர பார்வதி தேவி, ஞான தண்டபாணி ஆகியோர் மேற்கு நோக்கியும், சௌந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரம்மதேவன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சௌந்திரேஸ்வரர் அருள் பாலிக்கிறார். இடப்பக்கத்தில் மீனாட்சியம்மன் நான்கு திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லாத வகையில் மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வர லிங்கம் உள்ளது. பீடத்தில் அமிர்த

கலசம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 நந்திகளும் வெவ்வேறான வடிவமைப்பில் உள்ளது. துர்க்கையை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தியாகி திருமண தடைகள் நீங்கும். மாங்கல்ய தோஷம், திருமண தடை நீங்க இங்குள்ள சுயம்வர பார்வதியை வழிபட்டு வரம் பெறுகின்றனர். நீண்ட ஆயுளுக்காக 60 வயதானவர்களுக்கு சாந்தி

ஹோமம் செய்யப்படுகிறது. கரிகால் சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது. 28வது கோவிலாக சௌந்தரேஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்துள்ளார். சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய

மாதங்களில் நீலகண்டேஸ்வரர் மீது மாலைப் பொழுதில் அஸ்தமன சூரிய கதிர்கள் பட்டு, சுவாமியின் திருமேனி ஒளிர்கிறது. ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்ஹார விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு

ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாகள் நடக்கின்றன.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், இருகூர் - 641 103ஒண்டிப்புதூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

போன்
+91-422-2632452,94881 55164.

ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling