Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Apr 22, 2023, 8 tweets

#வரலாற்றில்_இன்று

ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.

என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்

அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது

ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..

அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று

கூடியிருந்த அதிகாரியிடம் கேட்டார் " ஏற்பாடுகள் தயாரா இருக்கா?ஆரம்பிக்கலாமா?"

அழியா புகழை தர போகும் அந்தத் திட்டத்தை தொடங்கினார் அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜு

அடுத்த ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் அந்த செய்தி தீயாக பரவியது

" வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை"

ஆனால் தெர்மாகோலை வைகை நீரில் போர்த்திய சில நிமிடங்களில் காற்றின் வேகத்தால் அவைகள் கரை ஒதுங்கின

மனம் தளராத செல்லூர் ராசு

அங்கிருக்கும் படகோட்டிகளை அனுப்பி அவற்றை மீண்டும் அணையின் நடுவில் விட்டு வரச் சொன்னார்.

ம்ஹும் அமைச்சரின் விடாமுயற்சியை காட்டிலும் தென்மேற்கு பருவக்காற்று வீரியமாக இருந்ததால் மீண்டும் கரை ஒதுங்கின

தெர்மாகோல்களை இன்சுலேஷன் டேப் போட்டு ஓட்டலாம் பறக்காது என ஒருவர் ஐடியா கொடுத்தார்

இங்கே இந்த வேடிக்கை நிகழும் போது தெர்மாகோல் சயின்டிஸ்ட் ஃப்ளாஷ் நியூஸ் ஓடியதை யாரோ கவனித்து
உரிய இடத்தில் தெரிவிக்க

"அங்கே என்னயா பண்ற, இங்க மானம் போகுது" என போனில் தகவல் வர

முயற்சியில் இருந்து பின்வாங்கி,

" இப்போ போகிறேன் மீண்டும் வருவோம்" பீதி ஊட்டி விட்டு கிளம்பினார்

பத்து லட்சம் செலவில் வைகை நீர் ஆவியாதலை தடுக்கும் அந்தத் திட்டம் தோல்வி அடைந்தாலும் தன் முயற்சியில் பின்வாங்காத விக்ரமாதித்தன் போல

அடுத்தபடியாக ரப்பர் பந்துகளை மிதக்க விடும் ஐடியாவில் எடப்பாடியை சந்தித்தார்

பன்னீர் கொடுத்த குடைச்சலில்
எடப்பாடி இதனை மறந்தே போய்விட்டார்

சயின்டிஸ்ட் செல்லூர் ராஜு மதுரைக்கு மேலும் பல திட்டங்கள் வைத்திருந்தார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை சட்னி ஆக்குவது

வைகையை சுத்தம் செய்து தேம்ஸ் நதி போல ஆக்குவது

ஆனால் பெரும்பாலான திட்டங்கள் மீம் மெட்டிரியலாகவே மாறிப் போயின

நேற்று ரொம்ப சீரியஸா யோசிச்சு பல ஆதாரங்களுடன் இந்த கட்டுரை வெளியிட்டேன்

சீந்துவார் இல்ல..

பரவால்ல..

அறிஞர் செல்லூர் ராஜூக்கு ஆதரவா/ எதிரா அணில் கதை போன்றவற்றை கொண்டு வருவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்லூறார் மீம் காத்திருக்கு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling