சர்ச்சைகளை ஏற்படுத்திய @ptrmadurai-இன் ஆடியோவை ஏன் தடவியல் பகுப்பாய்வுக்கு (forensic analysis) உட்படுத்த வேண்டும் என்று தலைவர் திரு @annamalai_k அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்? 7 காரணங்கள் இதோ! 🧵👇🏻
#என்மண்_என்மக்கள் (1/11)
1. திமுக குடும்பம் ஊழலில் திளைத்த குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இது திமுக வாக்காளர்களுக்கும் தெரியும். ஆனால், 1972ல் எம்.ஜி.ஆருக்கு பிறகு, கோபாலபுர குடும்பத்தினர் குவித்துள்ள பெரும் சொத்து குறித்து திமுகவுக்குள் இருந்து மூத்த தலைவர் ஒருவரே பேசுவது இதுவே முதல் முறை. (2/11)
2. முதலமைச்சரின் மகன் @Udhaystalin, மருமகன் சபரீசன் “தங்கள் தாத்தாக்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் சம்பாதித்துள்ளனர்” என்ற வாக்கியம், இவ்விருவர்தான் மக்கள் பணத்தையும் பொது சொத்துகளையும் இன்று பெரிய அளவில் சுரண்டுபவர்கள் என்பதை காட்டுகிறது. (3/11)
3. இதில் கூறப்பட்டுள்ள தாத்தாக்களில் ஒருவர் “விஞ்ஞான ஊழலின் தந்தை" மு கருணாநிதி. அவர் ஒரு சக பயணியிடம் ஆரஞ்சு பழங்களை திருட எண்ணியது முதல், தான் தொடங்கிய பல்வேறு திட்டங்கள் வரை இமாலய ஊழல்களில் ஈடுபட்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. (4/11)
கருணாநிதி தனது வாழ்நாளில் குவித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் குவித்தால் அதன் மதிப்பை கற்பனை செய்து பாருங்கள்! (5/11)
4. இரத்தத்தை கொதிக்கச் செய்வது என்னவென்றால் - கடினமாக உழைக்கும் தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதோடு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படவேண்டிய நிதி இவர்களால் சுரண்டப்படுகிறது. (6/11)
5. ஆடியோபடி “உதய் & சபரி” மட்டும் ஒரு வருடத்தில் குவித்தது 30000 கோடி. இது 2021-22-இல் TASMAC மூலம் கிடைத்த வருவாயில் 83% ஆகும்! இதன் பொருள் என்ன? இவர்கள் இவ்வளவு திருடவில்லை என்றால், டாஸ்மாக்கையே மூடிவிடலாம்! @KanimozhiDMK குறிப்பிட்ட “இளம் விதவைகள்” காப்பாற்றபடுவார்கள்! (7/11)
6. எல்லாவற்றையும் விட முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த குற்றச்சாட்டுக்களை ஒரு கவுன்சிலரோ, சாதாரண எம்.எல்.ஏவோ முன்வைக்கவில்லை. தி.மு.க அரசின் அமைச்சர், அதுவும் கஜானாவையே கையாளும் நிதியமைச்சர் கூறுவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது! (8/11)
7. ஆடியோ கிளிப்புக்கு @ptrmadurai அளித்த பதிலில், ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் முதல் 8 வினாடிகள் “வேறு ஒரு ஆடியோவில் இருந்து எடுக்கப்பட்ட clear voice" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (9/11)
இந்த முதல் 8 வினாடிகளில் தான் "உதய் & சபரி” தங்களின் தாத்தாக்களின் வாழ்க்கையில் சம்பாதித்ததை விட அதிக பணம் சம்பாதித்ததாக" அவர் கூறுகிறார். எனவே ஆடியோ கிளிப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை PTR-இன் அறிக்கை உறுதி படுத்துகிறது என்று தான் அர்த்தமாகும்? (10/11)
ஆடியோ உண்மை என நிரூபணம் ஆகும்பொழுது, முதல்வர் @mkstalin ராஜினாமா செய்து விசாரணையை சந்திப்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
தமிழகத்திற்கு நேர்மையான முதல்வர் தேவை, அது கண்டிப்பாக மு.க. ஸ்டாலின் இல்லை! (11/11) #ResignStalin
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.