அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 24, 2023, 12 tweets

#திரிபுராந்தகர்_திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்னும் ஊரில் பாடல்பெற்ற திரிபுராந்தகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள விமானம் கஜபிருஷ்ட விமானம் ஆகும். இத்தல மூலவரான சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்

பாலிக்கிறார். சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. இங்கு மூலவரின் தலைக்கு மேல் பச்சை கற்பூரம் மட்டும் தூவி, பாலாபிஷேகம் செய்வது சிறப்பம்சமாகும். திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக

ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது. இங்கு சிவன் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் தன்பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாற்றை சிறப்பாக பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும் வித்யுன்மாலியும் கருவறைக்கு

முன்புறம் துவாரபாலகர்களாக காவல் புரிகின்றனர். திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் இத்தல மூலவர் #திரிபுராந்தகர் என்றும், அம்பாள் #திரிபுராந்தகி_அம்மன் என்றும் பெயர் பெற்றுள்ளனர். இத்தல விநாயகர், சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் என்பதால் #அச்சிறுத்த_விநாயகராக தனிச்

சன்னதியில் உள்ளார். இக்கோயிலில் அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறாள். இந்த கோலத்தை, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள். இவளை வேண்டிக் கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். அம்பாளுக்கு முன்புறம்

பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளின் கருவறை விமானமானது, கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக அமைக்கப் பட்டுள்ளது. இத்தல ராஜ கோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச் சன்னதியில் இருக்கிறார். திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது

ஐதிகம். இத்தல பிரகாரத்தில் ஆறு முகங்களை கொண்ட சண்முகர் வள்ளி-தெய்வானையுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். சித்திரை பிரம்மோற்சவம், ஆடியில் அம்மனுக்கு பூ பாவாடை திருவிழா, சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகியவை இங்கு

சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆளுமைத் திறன் வளர, தீய குணங்கள் நீங்க, ஆணவம் குறைய, துன்பங்கள் நீங்க, குடும்ப ஒற்றுமை அதிகரிக்க இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாற்றியும், சிறப்பு அபிஷேகங்கள்

செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இக்கோயிலில் இருந்து 7 கிமீ தூரத்திலுள்ள பிஞ்சவாக்கம் கிராம வேளாண் பெருமக்கள் உச்சிகால அபிஷேதற்க்கு தேவையான பாலும் பூவும் நெடுங்காலமாக கொடுத்து வருகின்றனர். இக்கோயிலுக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் கோயிலுக்கு சொந்தமான ‘திருமஞ்சன குழி‘ கொண்டு

வரப்பட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இக்கோயில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் செங்கல் கோயிலாகவும் ,கிபி 1055 ல் கற்றளி கோயிலாகவும் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பெற்ற கோயிலாகவும் விளங்குகிறது என இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாம்

ராஜேந்திரன் ,ராஜராஜ சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன், வீரக்கண்ட கோபாலன், விஜயகண்டகோபாலன், முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாக செலவிற்காக நிலங்களையும் காசுகளையும் தானமாக அளித்துள்ளார்கள் என்று இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருவள்ளூரில் இருந்து 22 கி.மீ

தொலைவில் கூவம் என்னும் ஊர் உள்ளது. கூவம் நதி உற்பத்தி ஆவதும் இங்கு தான். கூவத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன. காலை 6 .00 AM -12 .00 PM வரை மாலை 5 .00 -8 .00 வரை நடை திறந்திருக்கும்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling