THE TRUTH SEEKER Profile picture
இங்கு நல்ல ரீல்கள் விற்கப்படும்

Apr 25, 2023, 10 tweets

#கறைபடிந்த_கரம் 17

ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U)

கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என விதிமுறைகள்

எடப்பாடி ஆட்சியில் பயனாளிகள் தேர்வு செய்வதில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பயனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அந்தப் பயனாளிகள் பட்டியல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

ஆட்சியில் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை (சிஏஜி) அம்பலப்படுத்தியது.
2016 முதல் 2021 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 500000வீடுகள் கட்ட ஒப்புதல் தரப்பட்டது, ஆனால் 200000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன

இதில் 3,354 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கியதில்தான் முறைகேடு நடந்துள்ளது.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகளை கட்டவில்லை என்பதையும், இதன்மூலம் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாட்டின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்துள்ள முறைகேடு பற்றி மட்டும்தான் சிஏஜி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் முறைகேடு ₹1,000 கோடியைத் தாண்டும். மாநில அளவில் முறையான ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல முறைகேடு விவரங்கள் வெளியாகும் என்றும் சிஏஜி பரிந்துரை செய்தது

சொந்த வீடு என்பது ஏழைகளின் எட்டாக் கனவாக இருக்கிறது. அந்த கனவு கனிந்து வரும் நேரத்தில் அதிலும் பணம் பார்த்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை என்னவென்று சொல்வது?

சுடுகாட்டிலேயே பணம் பார்த்தவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா?
#CAGexposesADMK #CAGReport #ADMKfails

கட்டுரையின் ஊடே சிஏஜி வெளியிட்ட எடப்பாடியின் மேலும் சில ஊழல்களும் மீமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன

அதற்கு தங்கமணி, சிஏசி அறிக்கை யூகத்தின் அடிப்படையில் இருக்கும் என்கிறார்

2ஜி பற்றிய சிஏஜி அறிக்கையை காற்றில் ஊழல் என பரப்பினார் உங்க ஆத்தா..

அப்ப தெரியலையோ

வீடு கட்டும் திட்ட ஊழல் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கல

பல மாநிலங்களிலும் நடந்து சாரணை நடந்து கொண்டிருக்கு

ஊழல் பெருச்சாளி பிஜேபி கொண்டுவந்த எந்த திட்டமாவது
உருப்பட்டிருக்கா?

மகாராஷ்டிரா கர்நாடகா தமிழ்நாடு பெங்கால் ஹரியானா என பாரபட்சம் இல்லாமல் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling