#Decoding_BJP 4
#பாசிசஆட்சியா_நாஜிஆட்சியா
இத்தாலியில் முசோலினி செய்த கோமாளி ஆட்சி "பாசிசம்"
ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய கொடூர ஆட்சி "நாசிசம்"
ஹிட்லர் முதல் பினோசெட் வரை 7 பாசிச ஆட்சிகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ் பிரிட் 14 தன்மைகளை வகுத்தார்.
1)வலிமையான, தொடர்ச்சியான தேசியவாதம்:
நாட்டுப்பற்று முழக்கங்கள்,
சுலோகங்கள், குறியீடுகள், பாடல்களை
தொடர்ச்சியாகப் பயன்படுத்தல்
தேசியக் கொடியை ஆடைகளிலும் புது இடங்களிலும் காட்சிப்படுத்துதல்
2) மனித உரிமை மீறல்கள் :
எதிரி பற்றிய பயமூட்டி பாதுகாப்பு பெயரில்
சித்திரவதை,
விசாரணை இன்றி மரணதண்டனை,
படுகொலை,
கைதிகள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல்
போன்றவற்றைக் கவனிக்காமல் விடவோ, ஏற்றுக்கொள்ளவோ மக்களை தயார்படுத்துதல்
.
3)பொது எதிரியை அடையாளப்படுத்துதல் :
மக்களை ஓரணியில் திரட்டி ஒருங்கிணைத்து, #நாட்டுப்பற்று_வெறி ஊட்டி,
இன -மத - மொழிச்
சிறுபான்மையினர்,
லிபரல்கள்,
கம்யூனிஸ்டுக்கள் சோசலிஸ்டுக்கள்
போன்றவர்களை பொதுவான "எதிரியாக அல்லது அச்சுறுத்தலாக" அடையாளப்படுத்தி ஒழித்துக்கட்ட முயல்வது
4)ராணுவம் மேன்மைப்படுத்தல்
பரந்த அளவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் பல இருந்தபோதும்,
அளவுக்கதிகமான அரசாங்கப் பணத்தை படைத்துறை பெறும்.
உள்நாட்டுத் திட்டங்கள் யாவும் அலட்சியம் செய்யப்படும்.
படைவீரர்களும் இராணுவ சேவையும் கவர்ச்சிகரமானதாக்கப்படும்
5) பால்நிலை ஏற்றதாழ்வு:
பாசிச அரசு ஆண்களுக்காக, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப் படுபவை
மரபார்ந்த பால்நிலை பாத்திரங்கள் இறுக்கமாக்கப்படும்.
மணமுறிவு, கருக்கலைப்பு,
சம பாலுறவு ஒடுக்கப்படும்
"குடும்பம்" என்கிற நிறுவனத்தின் அதியுயர் காவலனாக அரசு பிரதிநிதித்துவப் படுத்தப்படும்
6) ஊடக கட்டுப்பாடு :
போது ஊடகங்கள் நேரடியாகக் கட்டுப்படுத்தப்பட இயலாத போது,
அரசாங்கச் சட்டதிட்டங்களாலோ,
அனுதாபம் பெற்ற ஊடகப் பேச்சாளர், அதிகாரிகளாலோ மறைமுகமாக கட்டுப்படுத்தப்படும்.
தணிக்கை, மிகவும் பொதுவானதாக அமையும்
7) தேசப்பாதுகாப்பு மீதான மிகைவிருப்பு
மக்களை உற்சாகப்படுத்தும் கருவியாக அரசாங்கத்தால் வெகுமக்கள் மீது பயன்படுத்தப்படும்.
8) மதமும் அரசாங்கமும் :
ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.
பொதுமக்கள் கருத்தைத் தமக்கேற்றபடி கையாள்வதற்கான கருவியாக பெரும்பான்மையோரின் மதத்தைப் பாசிச அரசு பயன்படுத்தும்
குறித்த மதக் கோட்பாடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை இருக்கும்.
மதம் சார்ந்த உணர்ச்சி பேச்சுக்களும் சொல்லாடல்களும் தலைவர்கள் பேச்சில் இருக்கும்
9) கார்ப்பரேட் பாதுகாப்பு :
பாசிச அரசை அதிகாரத்தில் அமர்த்துபவர்களாக, தொழிற்றுறை, உயர்குடி வர்க்கத்தினரே இருப்பர்.
ஒருவருக்கொருவர் நன்மையாக அமையத்தக்க வணிக - அரசாங்க உறவுகளையும் அதிகார உயர்குழாத்தையும் உருவாக்குவர்.
10) தொழிலாளரை ஒடுக்கல்
பாசிச அரசின் உண்மையான அச்சுறுத்தல், தொழிலாளர்கள் கொண்டுள்ள, அமைப்பாக ஒன்றுசேரும் வலு.
தொழிற் சங்கங்கள் அழிக்கப்படும் அல்லது
ஒடுக்கப் படும்
11) கலைஞர்கள்-அறிவுஜீவிகள்
கல்வி மீது வெளிப்படையான எதிர்ப்பினைப் பாசிச அரசு ஊக்குவிக்கும்
கல்வியாளர்கள் தணிக்கைக்குள்ளாவதும் கைதாவதும் சாதாரணமாக நிகழும்.
சுதந்திரமான கலை, எழுத்து வெளிப்பாடுகள் தாக்குதலுக்குள்ளாகும்.
12) குற்றமும் தண்டனையும்
வரம்பற்ற அதிகாரம் கொண்ட
தேசிய காவல்துறை படை கொண்டு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்
எதிர்ப்போர் மீதான துஷ்பிரயோகங்கள்,
சிவில் உரிமைகளை இழக்க
நாட்டுப்பற்று பெயரில் மக்களிடம் பரப்பப்படும்
13) நட்பினர் ஊழல் பரவுகை:
பாசிச ஆட்சிகள் தம்மில் ஒருவரை ஒருவர் அரசாங்கப் பணிகளில் அமர்த்திக்கொள்வர்
நண்பர்களைப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து காப்பதற்கு அரச அதிகாரத்தையும் பலத்தினையும் பயன்படுத்துவார்கள்.
தமக்குள் உறவுக்காரர்களும் நண்பர்களுமாக இருப்பார்கள்
14) மோசடி மிகுந்த தேர்தல்கள் :
தேர்தல்கள் கேலிக்கூத்தாக இருக்கும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்க்கெதிரான சேறடிப்புப்
பரப்புரைகள், படுகொலைத் தாக்குதல்கள், வாக்காளர் எண்ணிக்கை, தொகுதி எல்லைகள் கட்டுப்படுத்துவர்
ஊடகங்கள் மூலம் தேர்தல்கள் சூழ்ச்சியுடன் கையாளப்பட
நீதித்துறையையும் பயன்படுத்தும்
கொடுத்துள்ள தன்மைகள் & படங்களிலிருந்து இந்திய ஆட்சியின் தன்மையை கணித்துக் கொள்ளுங்கள்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.