மகோராரசிகன் Profile picture
பதிவுகளை ஆர்டி செய்யும் ஃபாலோயர் ஐடிகள் அனைத்தும் திருப்பி ஃபாலோ பேக் செய்யப்படும்

Apr 27, 2023, 10 tweets

#Modi_Lies 1

1. ஜனவரி12, 2014,கோவா

“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும், வாஜ்பாய்க்கென்று சொந்தமாக ஒரு வீடு கிடையாது”

உண்மை :
multi-storeyed apartment in East Kailash, New Delhi இருப்பதாக 2004 ல் வாஜ்பாய் வேட்பு மனு தாக்கல்

2)செப்டம்பர்15,2013,ரேவரி

“ கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையால் இதனை நான் செய்தேன்.”

1985 -ல் ராஜீவ் காந்தி ஒரு தொழில் நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, சர்தார் சரோவர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
1999-ல் கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி பாராளுமன்ற அவை குறிப்பு உள்ளது

2001 அக்டோபரில் தான் முதலமைச்சராகிறார் மோடி

3) ஜூலை 2013, அகமதாபாத்

“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்தது. இப்போது ரூபாய் எங்கே டாலர் எங்கே?"

ஆனால் அப்போது ரூபாயின் மதிப்பு 30 சென்ட்களாக இருந்தது என்பதே உண்மை.

இப்பத்தான் ஒரு டாலர் என்பது ₹87 ஐ நெருங்குது

4) அக்டோபர் 2013
“இந்தியாவின் பிரதமராக நேருவுக்குப் பதிலாக, பட்டேல் ஆகியிருந்தால் இந்தியாவின் வரலாறு மகோன்னதம் கொண்டிருக்கும்.
பட்டேலின் இறுதிச் சடங்கில் கூட நேரு பங்கேற்கவில்லை”

பட்டேலின் இறுதிச்சடங்கின் போது, 1950 -ல் எடுக்கப்பட்ட வீடியோவை வரலாற்று அறிஞர்கள் வெளியிட்டார்கள்.

5) நாக்லா ஃபடேலா கிராமம் சுதந்திர தின விழாவை முதன்முறையாக டிவியில் பார்க்கும் படம் என ஒன்றை Prime Miniter Office டுவிட்டரில் வெளியிட்டது
நாக்லா ஃபடேலா கிராமத்தில் மின்சார வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை
PMO வெளியிட்ட படம் தங்களது கிராமத்தின் படமல்ல என்பதை உறுதி செய்தனர்.

6) "எத்தனையோ யுத்தங்களில் இந்தியா பங்கெடுத்தும், எவ்வளவோ வீரர்கள் அந்த யுத்தங்களில் உயிரைக் கொடுத்திருந்தும், அவர்கள் தியாகங்களை போற்ற
ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை. சில நல்ல காரியங்கள் என்னால் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது"

இந்தியாவின் யுத்த நினைவு சின்னங்கள் 👇

7) உபி தேர்தல் முன் :

"150 பேர் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச் செயல். எல்லை தாண்டி இருக்கும் சதிகாரர்கள் செய்த பயங்கரமான காரியம். இந்தியாவுக்காக எதையும் செய்யத் துணிந்த தேசபக்தியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்"
உபி ரெயில்வே டிஜி குப்தா
சதி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்

8) அஸ்ஸாம் தேர்தலின் போது :

மத்திய அரசு கொடுத்த ₹1.8 லட்சம் கோடி செலவு செய்ததற்கு இன்று வரை சி.ஏ.ஜியிடம் கணக்கு காட்டவில்லை"

முதல்வராயிருந்த தருண் கோகாய் “பொய் மேல் பொய் சொல்லும் பிரதமரை பார்த்திருக்கிறீர்களா? உயர்ந்த பதவிக்குரிய மரியாதையை குலைக்கிறார்” என பொலந்து விட்டார்

9) குஜராத் முதலமைச்சராக :

Vibrant Gujarat Global Investment Summit-ன் போது 450 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீடு ஈர்த்தார்

2011 ல இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர் தான்.
இதில் குஜராத் பங்கு 2.38%

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling