VISWA Profile picture

May 2, 2023, 9 tweets

#உங்களை_நோக்கியும்_வருவார்கள்

மற்போர் பெண்களை சீண்டியவனை நெருங்க முடியாத சட்டங்கள், மனதில் பட்டதை தெரிவிப்பவர்களை, மத வேறுபாடு இன்றி மிரட்டும்.

சமீபத்திய நிகழ்வு, புனேயில்
காலம் கடந்தது என கூறி பாடிக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை
நிறுத்த சொன்ன காவல் துறை.

சமீப காலங்களில், ஏ ஆர் ரகுமான் சர்ச்சைக்குரியவராக பொதுவெளியில் சித்தரிப்பது தொடர்கிறது.

அவர் அடையாளத்திற்காக என்பதை விட, ஒரு இந்திய குடி மகனாக தனது மனதின் குரலை வெளியிடுவதற்காக கூட இருக்கலாம்.

இதன் தொடர்ச்சியே கச்சேரி மேடையில் காவல் துறை தரிசனம்

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெற்றனர்
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கடைசி பாடலாக 'வந்தே மாதரம்' இடம்பெறும் என திட்டமிட்டனர்

நிகழ்ச்சி நேரத்தை இழுத்ததால்
கடைசி பாடலாக சையா, சையா உடன் 10 மணிக்கு நிறுத்த முடிவெடுத்தனர்.

இந்நிலையில் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மேடையில் ஏறி 10 மணி ஆகிவிட்டது கச்சேரியை நிறுத்துங்கள் என்றது.

ரகுமானும் உடன் பட்டு அப்போதே நிறுத்தி விட்டார்

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,
"காலம் கடந்ததை, மேடையின் பின்புறம் வந்து சொல்லி இருக்கலாம்" என்று கூறி முடித்துக் கொண்டனர்.

ஜக்கி வாசுதேவ் குத்தாட்ட நிகழ்ச்சியாக இருந்தால் இதே போல மேடை ஏற காவல் துறை துணியுமா?

இது ரஹ்மானின் அடையாளத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கடக்கலாம் என்றால்,

இரண்டாண்டு தண்டனையை நிறுத்த ராகுல் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் இடைக்கால நிவாரணம் இன்றி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது
இதை விட கொடுங் குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் நீதிமன்றம்

மற்றொரு புறம், மற்போர் பெண்கள் போராடித் தான் பாலியல் குற்றவாளியான WFI தலைவர் பிறிஜ் பூஷன் மீது FIR பதிவு செய்ய முடிந்திருக்கு

குற்றம் சாட்டப் பட்ட நபரோ, இன்னும் சுதந்திரமாக பொது வெளியில் சுற்றுவதுடன்

பாதிக்கப் பட்டவர்களை மிரட்டி வருகிறார்

ரஹ்மானின் அடையாளத்தில் துவங்கி, மற்போர் பெண்களின் ஜாதிகள் ஊடே, எதிர்ப்போரை எதோ ஒரு முத்திரை குத்தி பயணிக்கிறது பாசிசம்

ஹிட்லரின் வதை முகாம்களில் உயிரை விட்ட யூதர்களின் எண்ணிக்கைக்கு சமமாக சுத்த ஆரிய ரத்த ஜெர்மன் மக்களும் திறந்தவெளி சிறையில் வதைக்கப் பட்டனர் என்பது வரலாறு

ஆஸ்கார் நாயகன் என்றாலும், அற்புத வீரர் என்றாலும், ஆள்பவர் விருப்பத்திற்கு எதிராக நடக்க முயன்றால் Propaganda கும்பல் உன்னை தேச துரோகி ஆக்கி விடும்.

சமீபத்திய பலி விராட் கோலி.

பல நிறுவனங்கள் அரசியல் மயமான நிலையில், ஜாதி மயமான கிரிக்கெட்டை விட்டு வைப்பார்களா?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling