#ஆன்மீக_அறிவியல்
விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசு
பட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! பொதுவாக, மாதத்துக்கு
ஒரு முறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள்
அதிகம். அதனைத் தடுக்க அகத்திக் கீரை அருமருந்து. எனவே தான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள். தவிர, அகத்திக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.
வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப்
புகை போடவேண்டும். பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித் தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழி முறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் மிக நல்ல
கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத் தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டு இருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
இடி இடிக்கும்போது,
அர்ஜுனா...அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லும் வழக்கம் உண்டு. இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற
பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.
நகத்தைக் கடித்தால் தரித்திரம் என்பர்.
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும். நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால்தான், நகம் கடிப்பதை
தரித்திரம் என்றார்கள் பெரியோர்.
உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது. உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ,
அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.
வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது. நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு - தெற்காகத் தான் இயங்குகிறது. எனவே வடதிசையில் தலை வைத்துப் படுக்கும் போது காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய
வாய்ப்புள்ளது.
கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது. பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப் பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த
பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப் படுகிறது. எனவே தான் இன்றைய இடி தாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத
மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள்
அதிகம் பரவும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.