#மாமாவும்_அம்பியும் 2
“அவ்ளோ பெரிய புராண கதையெல்லாம் உருவாக்க நிறைய டயம் எடுக்குமே மாமா?”
“நம்மவாக்கு அது மட்டும்தானே புல் டைம் வேலையே. வீடு, நிலம் எல்லாம் மன்னர்கள் தானமா கொடுத்துடுவா. வேலை பார்க்க அடிமைகளையும் கொடுத்துடுவா. நாம நாள் முழுக்க ஹாயா உக்காந்து புராணம் எழுதலாம்”
“மொதல்ல மன்னர்கள் உங்களுக்கு நிலம் கொடுத்தாத்தானே நீங்க சாவகாசமா உக்காந்து புராணம் எழுதி மக்களை ஏமாத்த முடியும். அப்ப மன்னர்களை ஏமாத்த நம்மவா என்ன செஞ்சா?”
“சரியா சொன்னடா அம்பி. மொதல்ல மன்னர்களை ஏமாத்தி, அவா ஆதரவு நமக்கு கிடைச்சாத்தான் மக்களை ஏமாத்த முடியும்.
ஏதாவது முட்டாள் மன்னன் சிக்கினா போதும்… இப்ப மேஜிக் ஷோ பண்றாளே… அந்த மாதிரி ஏதாவது மேஜிக் ஷோ பண்ணி மன்னனை ஏமாத்தணும். ஆனா அது கடவுள் கொடுத்த பவர்னு அவனை நம்ப வைக்கணும். அதுக்கு அப்புறம் அவனே நம்மவாக்கு வீடு, நிலம், நிலத்துல வேலை பார்க்க அடிமைகள் எல்லாம் தானமா கொடுத்துடுவான்.
இனி நமக்கு என்ன வேலை? புல் டைம் உக்காந்து கன்டென்ட் கிரியேட் பண்ணுறதுதான். அந்த காலத்துல மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம், கதாகாலட்சேபம் தான். சாயந்திரம் ஆனா கோவில்ல மக்களை உக்கார வெச்சி இந்த புராண கதையெல்லாம் சொல்லி மக்களை நமக்கு ஏத்தாப்புல டியூன் பண்ணிட்டோம்.
content is the king, you know. ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்மவாக்கு சாதகமான கன்டென்ட் மட்டும்தான் இருந்துச்சு. மக்கள் ஈஸியா நம்ம வலையில விழுந்துட்டா”
“மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாத்தானே இந்த புராண கதையெல்லாம் நம்பி நம்மவாகிட்ட ஏமாறுவா?”
"அதில என்னடா அம்பி சந்தேகம்?”
“அப்ப மக்களுக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சுன்னா நம்ம ஆட்டம் அம்பேலா?”
“முக்கியமான பாயிண்டுக்கு வந்துட்ட. மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குற வரைக்கும்தான் சமூகத்துல நம்மவா மேல.மத்தவா கீழ. இந்த சூட்சுமத்தை ஈவேரான்னு ஒருத்தர் சரியா புரிஞ்சுண்டார்”
“ஈவேரான்னா? பெரியாரா?”
“வாயை கழுவுடா கடன்காரா! அவரை ஈவேரான்னுதான் சொல்லணும்”
“என்னாச்சு மாமா? முகமெல்லாம் வேர்க்குது… வாயெல்லாம் ஒரு மாதிரி குழறுது… ரொம்ப மூச்சு வாங்குது… செத்த உக்காருங்கோ”
“பின்னே? அந்தாளை நினைச்சாலே நேக்கு டாப் டூ பாட்டம் பத்திண்டு வர்றது
"ஏன்? என்ன பண்ணினார் அவர்?”
புரியிற மாதிரி சொல்றேன். சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்ல நம்மவா எத்தனை பேர் இருக்கா?”
“முழுக்க நம்மவாதானே சுப்ரீம் கோர்ட்டுல இருந்து, ஐஐடி வரைக்கும் நம்மவா ஆட்சிதானே நடக்குது”
“அப்படியே தமிழ்நாட்டுக்கு வா. ஸ்டேட் கவர்மெண்ட் ஜாப்ல நம்மவா எத்தனை பேர் இருக்கா?”
“ரொம்ப கொறைச்சல்தான்”
நன்னா புரிஞ்சிக்கோடா… பவர் மொத்தமும் சென்டர்ல இருக்குற வரைக்கும்தான் நமக்கு சாதகம். இவா கேக்குற மாதிரி மாநில சுயாட்சியோ… இல்ல அந்த ஈவேரா கேட்ட மாதிரி தனித் தமிழ்நாடோ அமைஞ்சிடுத்துன்னா நாம காலி. இப்ப கூட பாரு… நமக்கு EWS சென்டர்ல இருக்கு… ஆனா ஸ்டேட்ல இல்ல”
“ஏன் அப்படி?”
“தமிழ்நாட்டுல நம்மவா எத்தனை பேர் இருக்கோம்?”
“ஒரு 3% இருக்கோம்”
“ஆனா வடக்கே அப்படி இல்ல. நம்மவா கிட்டத்தட்ட 10% இருக்கோம். இப்ப லோக்சபால கிட்டத்தட்ட 50 MP நம்மவாதான். நம்மவா 100 MP இருந்த காலம் கூட இருக்கு. சென்ட்ரல் கவர்மண்ட்ல எப்பவுமே நம்மவாக்கு அதிகாரத்துல பங்கு கிடைக்கும்.
விபி சிங் ஓபிசி ரிசர்வேஷன் கொண்டு வந்தாலும் சென்ட்ரல் கவர்மண்ட்ல நமக்கு இருக்குற அதிகாரத்தை யூஸ் பண்ணி முடிஞ்ச வரை அந்த ரிசர்வேஷனை இம்ப்ளிமென்ட் பண்ணாத மாதிரி பார்த்துக்குறோம். ஆனா தமிழ்நாட்டுல நம்மவாக்கு வாக்கு வங்கி இல்ல. அதனால ஆட்சி அதிகாரத்துல பங்கு கிடைக்காது"
மாமா அம்பியின் உரையாடல் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக வருகிறது..
கட்டுரையாளர் : Dravida Selvam
மன்னர் மீம்கள் :
அறிஞர் தினகரன் செல்லையா
முதல் பாகம்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.