#சசிகாந்த்செந்தில்_யார்?
டி கே சிவக்குமாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பேசு பொருளாகிய விஷயம் காங்கிரஸ் ஐடி விங் பங்களிப்பு.
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில்
உதவி ஆணையராக போஸ்டிங் போடப் பட்டது
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.
இவர் தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
பெல்லாரி சுரங்கத் தொழிலில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபியின் ஆதரவுடன் ஆடிய ஆட்டத்தால்,
அவர்களை கட்டுப்படுத்த தவறிய எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றது இந்த காலகட்டத்தில் தான்
நேரில் இருந்து பார்த்த சசிகாந்த செந்தில் போன்ற நேர்மையாளர்கள் ராஜினாமா செய்வது இயல்பு தானே
அதோடு காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார்.
அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவி வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது.
தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார்.
கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.
இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது.
இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த்தான் வெற்றிபெற்றுள்ளார்.
ரெண்டு பேருமே தமிழ்நாடு தான்.
ஒருவரை இந்தியாவே புகழ்கிறது.
இன்னொருவரை காரி துப்புகிறது.
சேர்ந்த இடம் அப்படி.
ஊழல் பிஜேபியை எதிர்த்து தன் பதவியை ராஜினாமா செய்தவர் செந்தில்.
அதே ஊழல் கட்சியில் இணைந்து ஆதாயம் அடைய பதவியை ரிசின் செய்தவர் செய்தவர் ஆடு.
மீடியாவால் பெருக்கப்பட்டவர் ஆடு
சாம்சங்கிகள் தயவில் எந்த நேரத்திலும் ஊடக வெளிச்சத்தில் நனைந்த ஆட்டுக்குட்டியின் அரை வேக்காடு அரசியலில்,
சசிகான்ந் செந்தில் போன்றோரின் ஆழமான அறிவுப்பூர்வமான அரசியல் கண்டுக்கப்படாமல் இருக்கலாம்
ஆனால் காலம் ஒருநாள்
உண்மைகளையும் போலிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்
இவர் காங்கிரஸுக்குள் வந்தபோது, பாட்டன் காலத்திலிருந்து, தின்று கொட்டை போட்ட சின்ன பண்ணை கார்த்தி சிதம்பரம் கேட்டது : யாரு இவரு?
இன்று கர்நாடகா அதற்கான பதிலை சொல்லி இருக்கு
இந்தியா முழுவதும் பல சின்ன பண்ணைகளை காங்கிரஸ் புறம் தள்ளி, துடிப்பான இளைஞர்களை கொண்டு வர வேண்டும்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.