#தேர்தல்_முடிவுகளுக்கு_பின்
ராகுல், பிரியங்கா தவிர்த்து காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட்ட
1) டிகே சிவக்குமார் பற்றி
@VIS1976AL
2)காங்கிரஸ் ஐடி விங் பற்றி
@teamasterdiary
3) வார் ரூம் செந்தில் IAS பற்றி
@magorarasigan
4) கார்கே தலைமையில் மாற்றம் பற்றி
@accused_1 பதிவு விட்டாச்சு
1) "வெறுப்பை விதைத்து மக்களை பிரித்த நாசகார சக்திகளிடம் மீட்டு அன்பெனும் கடையை திறந்திருக்கிறது காங்கிரஸ்"
ராகுல் எனும் தேசத்தை நேசிக்கும் மக்களை ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கும் இளந்தலைவரை தேர்தல் வெற்றியின் மூலம் நாடு பற்றிக்கொண்டது
2) பிரதமர் பதவி வகிப்பவர் மதத்தை வைத்து ஜெய் பஜ்ரங் என முழக்கமிடுங்கள் என நஞ்சை விதித்தும்
தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை மறந்து அனுமனை அவமதித்துவிட்டதாக பிரச்சாரம் செய்தும் ,
வெளிபபடையாகவே இஸ்லாமிய வெறுப்பை விதைத்தும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்,
முஸ்லீம்களின் ஓட்டு தேவையில்லை என பேசியும் மக்களை மதத்தை கொண்டு பிரித்து வன்மத்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற பழைய கணக்கை கையிலெடுத்தும் மக்கள் தெளிவாக அமைதியும் வளர்ச்சியும் நல்லிணக்கமும் தேவையென தீர்ப்பை தந்திருக்கிறார்கள்
இந்திய தேசத்தின் ஜீவன் இன்னும் உயிர்ப்போடும் உறுதியோடும் இருக்கிறது.. திராவிட மண்ணிலிருந்து முழுவதுமாக பாசிச சக்திகள் துடைத்தெறியபட்டிருக்கிறது.. இது இந்திய ஒன்றியம் முழுவதுமாக செயல்படுத்த மாநில கட்சிகள் விருப்பு வெறுப்புகளை தூரவைத்து தேசநலன் கருதி பாஜகவை விரட்டவேண்டும்
ராகுல் எனும் இளைஞனின் "கை"களை தேசம் பலமாய் பற்றிக்கொள்ளாவிட்டால் இழப்பு நமக்குதான் .. மதம் சாதியை சொல்லி நம்மை பிரிக்கும் சதிகாரர்கள் இரத்தவெறிபிடித்து அலைகிறார்கள்.. எச்சரிக்கை..
ராகுலின் நெடிய நடைப்பயணம் நல்ல தாக்கத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது..
கர்நாடக மக்கள் நல்ல தீர்ப்பை தந்திருக்கிறார்கள்.. குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒவைசியின் நரித்தனத்தை நம்பி ஏமாறாமல் சரியான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. போலியான மதவாதிகளை நம்பாமல் தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயல்படுவதுதான் சரியென முடிவெடுத்திருப்பது நல்லபுரிதலை காட்டுகிறது,
ஹிஜாப் பிரச்சனை கையிலெடுத்த பாஜகவை பெரும்பான்மை சமூகமும் புறந்தள்ளி தோல்வியை தந்து மத நல்லிணக்கமே நாட்டின் இறையாண்மைக்கு வலுசேர்க்கும் என காங்கிரஸை வெற்றிபெற செய்திருப்பது பெரும் நம்பிக்கையை தருகிறது..
2024 ல் தேசம் விடியும்
..
ஆலஞ்சியார்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.