தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 14, 2023, 14 tweets

#கர்நாடக_கற்றுத்தரும்_பாடம்

தேர்தல் முடிவுக்கு முன்பு சசிகாந்த் செந்தில் IAS யார் என்று,

தமிழ்நாட்டை விடுங்க, 2009-16 வரை பணியாற்றிய கர்நாடக மாநிலமே அறியாது

ஆனால் இன்று இந்தியா முழுவதும் உச்சரிக்கும் பெயர்.

"கரூர் கழனி கர்நாடக சிங்கம்" என வரும்போதே ஊடக வெளிச்சத்தில் வந்தவர்

ஒன்று அல்ல இரண்டு மாநிலங்களில் கோமாளி என நிறுவப்பட்டிருக்கிறார்.

யுபிஎஸ்சி தேர்தலில் அகில இந்திய அளவில் எட்டாம் இடம் பெற்ற IAS அதிகாரிக்கும்

சங்கல்ப அகாடமி மாணவர் என்பதால் சிறப்பு மதிப்பெண்களோடு ஐபிஎஸ் ஆனவர்க்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

எப்படி இது சாத்தியமாயிற்று?

வழக்கமாக ஊடகங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகக் காட்ட நினைத்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய எக்சிட் போல் முடிவுகளில் நேர்மையாக உண்மையை உரைப்பார்கள். ஆனால் இம்முறை கர்நாடகத் தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளில் பெரும்பாலும்

காங்கிரஸ் பார்டர் லெவலில் பாஸாகுமென்றும், தொங்கு சட்டசபை அமையுமென்றும் தான் குறிப்பிட்டன. அந்த அளவுக்கு ஆளும் கட்சியின் மிரட்டலுக்கோ, விசுவாசத்துக்கோ கட்டுப்பட்டிருந்தன. தேர்தல் முடிவோ காங்கிரசுக்கு 137 தொகுதிகளை கொடுத்தது. பாஜகவோ காங்கிரஸில் பாதியைக்கூட வெல்ல முடியவில்லை.

கேம் சேஞ்சர் எனக் கருதப்பட்ட குமாரசாமிக்கும் பலத்த அடி!

நாட்டின் பிர'மத'ரே மற்ற வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வார காலமாக இங்கே பிரச்சாரம் செய்தார். தனது ஆட்சியின் பெருமை எதையும் பேசவில்லை. பேசுவதற்கு எதுவுமே இல்லை. வந்தே பாரத் ரயில் என்கிறார்கள்... அது சாமானியர்களுக்கானதல்ல.

அதேவேளை, சாமானியர்களுக்கான முதியோர் சலுகைக்கட்டணம் ஒழிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பேசி வாக்குச் சேகரிக்கப் பார்த்தார்கள். உண்மையில் புல்வாமாவில் கொல்ல்லப்பட்ட 40 CRPF வீரர்களுக்கு ஒன்றியத்தின் பொறுப்பின்மையே காரணமென்று தெரியவந்ததும் ஆத்திரமாக வருகிறது நமக்கு.

அருணாசல பிரதேசத்திலும் இலங்கையிலும் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இப்படி அனைத்து மட்டத்திலும் நமக்கு பின்னடைவே.

சிலிண்டர் விலை 400 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் எகிறியது. வீட்டுக்கடன் வட்டி விகிதம் எகிறியது. பெட்ரோல், டீசல் விலை எகிறியது.

அனைத்து சேவைக்கட்டணங்கள், டோல் கட்டணங்கள், ஜி.எஸ்.டி.விகிதங்கள் அனைத்தும் எகிறியுள்ளன. பிரதாமகரின் கூட்டாளி அத்தானி மட்டும் போலித்தனமாக உலகின் நம்பர் ஒன்னாக உயர்ந்தார். அந்த பிராடுத்தனத்தின் மீது வலுவாக அடி விழுந்து 25வது இடத்துக்குக்கீழே துரத்தப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் 40% கமிஷன் கட்டாயமாக்கப்பட்டு மாபெரும் ஊழல்... கட்டுமானத்துறையில் பல கோடி ஊழல்... இப்படி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பத்திரிகைகளுக்கு கையூட்டு அளிக்க நினைத்து அதிலும் பிடிபட்டார் பசவராஜ் பொம்மை. ஆக, பொதுமக்களுக்கு எதிரான அத்தனை செயல்பாட்டிலும் மத்தியிலும்,

மாநிலத்திலுமிருந்த அரசுகள் ஈடுபட்டன. எனவே தங்கள் ஆட்சிப் பெருமை பேச முடியாத பிரமதரோ, வழக்கம்போல் ஆன்மீக வேடம்... ராம கோஷம்... கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்துக்கு ஆதரவு, மதவெறியை உசுப்பேத்துவது என்றெல்லாம் மட்டமான... வழக்கமான மூளைச்சலவை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!

இவரின் போலித்தனத்தின் மீதான கோபத்தை எப்படிக் காட்டுவது? அச்சூழலில் தான் அதே பழைய காங்கிரஸை. புதுப்பித்து, உயிர்ப்பித்து, மக்களின் அரசியல் நோக்கி நகர்த்திய ராகுல் காந்தி கண்ணில் பட்டார். அவரது பாரத ஒற்றுமை நடை பயணமும், எளிய அணுகுமுறையும், அழுத்தமான பேச்சுக்களும் மக்களைக் கவர்ந்தன

ஆன்மீகத்தை அரசியலில் மிக்ஸ் செய்யும் மோடி வித்தையை அவர் அம்பலப்படுத்தினார். மக்களுக்கு மத வெறியூட்டும் மோசடியை சாடினார். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை, விவசாயிகள் தண்டிக்கப்படுவதை, மொழிகள், தொழில்கள் சிதைக்கப்படுவதைக் கேள்விகேட்டார். காங்கிரஸில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டிருப்பதை,

மக்களின் தலைவராக தான் உருவெடுத்திருப்பதை உணர்த்தினார். சர்வ்வ்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயகக் குரலாக ஒலித்தார். கர்நாடக மக்கள் ராகுலின் பக்கம் சாய்ந்தனர். அழுத்தமான மோட்டி எதிர்ப்பலை உருவானது. மக்கள் விரோத பா.ஜ.க.வை சுருட்டிப் போட்டது

கர்நாடகத் தேர்தலில் வெற்றி கொடுத்த தெம்பால்,

இனி இந்த தேசம் நம்பிக்கையோடு 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும்! கூழைக்கும்பிடுகள், கார் ஊர்வலத்தில் பூக்கள் மழை பொழியச்செய்யும் தில்லாலங்கடிகள், ஜெய் ஸ்ரீராம் கோஷ வேடங்கள் அனைத்தையும் வீழ்த்தி, எளிய மக்களுக்கான ஆட்சி மக்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமையும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling