#அண்ணாஅறிவாலய_வரலாறு
திமுக தொண்டர்களுக்கு புனிதஸ்தலம் என்றால் அது கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் தான்…
ஒரு கட்சி தலைமையகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கட்டப்பட்டது
1949 இல் தொடங்கப்பட்ட திமுகவுக்கு முதல் அலுவலகம் சென்னை ராயபுரத்தில் "அறிவகம்" பின்பு
தேனாம்பேட்டையில் 1964ல் "அன்பகம்" உருவானது, என்றாலும் கட்சியின் பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அலுவலகம் தேவை, பெரிய கட்டிடம் தேவை எனவே 1972ல் அண்ணா சாலையில் 86 கிரவுண்ட் நிலத்தை வாங்கி 1980ல் பணியைத் தொடங்கினார் கலைஞர்.
நிதி பிரச்சினையால் வேலை அசை போட்டது,
1984ல் அரசினர் தோட்டத்தில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை MGR பறித்தபோது அறிவாலயம் கட்டுமானப்பணி விஸ்வரூபம் எடுத்தது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிதி திரட்டித் தர 20/07/1985 தலைவர் எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் அந்த ஒரு வருடத்தில் 96 லட்சம் குவிய வழிவகுத்தது.
இதுவும் சாமானியமாக நடக்கவில்லை இதற்காக தலைவரே ஒரே நாளில் 15 நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றிருக்கிறார். ஒருவழியாக வேலையை தொடங்கி அறிவாலயம் நிமிர தொடங்கியபோது கட்டிட அனுமதி கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது பணியை நிறுத்த வேண்டும் என வளர்ச்சி குழுமத்தை முடுக்கிவிட்டார் MGR
வேலையை நிறுத்திவிட்டு அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பித்தது திமுக, இதற்கிடையே பல குளறுபடிகள் எல்லாவற்றையும் வென்றெடுத்து அதைக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் 1986 ஜனவரியில் சட்டமன்றத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு வந்தார் தலைவர், அரசியல் விவாதமாக தடைகள் நீங்க ஆரம்பித்தது
பிரம்மாண்டமாக 1987 செப்டம்பர் 16 அன்று திறப்பு விழா கண்டது அறிவாலயம். அந்த கையோடு அதிக நிதி வழங்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு தன் கையாலே மோதிரம் அணிவித்தார் தலைவர்.
இந்த வளாகத்தில் இன்னொரு பெட்டகம் இருக்கிறது 2003ல் முன்னாள் ஜனாதிபதி KR நாராயணன் திறந்து வைத்த கலைஞர் கருவூலம்.
திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேள்வி கேட்கும் இளைய தலைமுறையையும், கட்சிக்கு புதிதாக வரும் தொண்டர்களையும் அவசியம் கொண்டு வந்து காட்ட வேண்டிய இடம் இது, நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தை வரலாற்றை புகைப்படங்கள், ஓவியங்கள் வழியாக காட்டும் இடம் இது.
நீதிக்கட்சி காலம் தொடங்கி திராவிட இயக்கம் சந்தித்த சோதனைகள், அது செய்த சாதனைகள் அங்கே வரிசைப்படி ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கட்சியின் தலைமையகம் என்பதைத் தாண்டி அறிவாலயம் தலைவருக்கு இன்னொரு வீடு காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் நிச்சயம் சென்றுவிடுவார், எத்தனையோ
வேலைகள் இருக்கும் போதும் நடைபயிற்சிக்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் அறிவாலயம், சனி ஞாயிறு என எந்த நாளும் அதற்கு விலக்கு கிடையாது.
சில சமயங்களில் வெளியூர் பயணம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பினால் கூட அப்படியே அறிவாலயத்திற்கு வண்டியை விடு ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம் என்பாரம்
இது அவருக்கு இன்னொரு வீடு கட்சிக்காரர்கள் தான் நமக்கு உறவினர்கள் அவர்களை கண் நிறைய பார்க்கவேண்டும் பேசவேண்டும் என அடிக்கடி சொல்வாராம் நமது நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் "பாச தலைவர்"
இது முழுக்க முழுக்க கட்சிக்காரர்களின் ஊழியராக கொண்டு நிர்வகிக்கப்படும் அலுவலகம்
இது ஆபீஸ் இல்லை சென்னையில் உள்ள பல கட்சி அலுவலகங்களிலும் தனியார் செக்யூரிட்டி ஊழியர்களை தான் பார்க்க முடியும் இங்கு மட்டும் தொண்டர் படை தான் பாதுகாப்பு கேடயம், வெளியிலும் சரி உள்ளிலும் சரி கட்சிக்காரர்கள் தான்.
இங்கு எவரும் எவரையுமே சார் என்பதில்லை எல்லோருமே அண்ணன் தம்பி தான்
தலைவருக்கு அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தெரியும்.கீழே இருக்கிற மக்களுக்காக பாடுபடும் கட்சி சார் இது இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதே எங்களுக்கு பெருமை என்கிறார்கள் அங்குள்ள ஊழியர்கள்.., ஆம் உண்மையிலேயே அறிவாலயம் என்பது அங்கு ஒவ்வொரு முறை செல்லும் போதும்
எப்பேர்ப்பட்ட தலைவனின் பாதம் பதிந்த இடம்..! எத்தனை அரசியல் திருப்பங்களை முடிவெடுத்த இடம் என்று ஒரு பெருமை ஏற்படும்...
அத்தகைய மாமனிதனின் சிலையை காணும்போதெல்லாம் உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற பெருமிதம், திமிரோடு அந்த இடத்தை விட்டு மனமில்லாமல் கடந்து வருவர் பலர்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.