தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 18, 2023, 11 tweets

#முதல்வரும்_தளபதியும்

சித்தாராமயா முதல்வராக விட்டுக் கொடுத்து, குழப்பத்தை எதிர்பார்த்தவர்கள் முகத்தில் கறியை பூசி இருக்கிறார் #DKShivkumar

90 எம்எல்ஏக்கள் சிவக்குமாரை CM ஆக்க ஆதரவு தெரிவித்தும் காங்கிரஸ் மேலிடம் வேண்டுகோள் ஏற்றார் கர்நாடகா வெற்றிக்கு வழி வகுத்த காங்கிரஸ் தளபதி

வெகு நாட்கள் மதவெறியில் உழன்ற கர்நாடகாவிற்கு, சித்தாராமயாவின் மதச்சார்பற்ற முகம் தற்போது தேவை என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்துக்கள் அல்ல என்று கருதும் லிங்காயத்துக்கள், கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதி குரும்பர்கள் டி கே எஸ் ஐ விட சித்துவை விரும்புவதாக கூறப்படுகிறது

திப்பு சுல்தான் சமாதி அஞ்சலி செலுத்தியது, சாவர்க்கர் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவு என டி கே எஸ் தனது மத நல்லிணக்கத்தை பறை சாற்றி இருந்தாலும்,

மதவெறி பிஜேபியை அதன் போக்கிலேயே அடித்து தூக்க காங்கிரசுக்கு ஒரு இந்து முகம் தேவை.

அதற்கு டி கே எஸ் கச்சிதமாக பொருந்துகிறார்

ஒன்றிய பிஜேபி அரசால் புனையப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்சமயத்திற்கு முதல் வெறுப்பு பதவி வேண்டாம் என அவரே மறுத்ததாக ஒரு தகவல் உண்டு.

சிவக்குமார் கட்சியை உடைக்க மாட்டார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் 30 எம்எல்ஏக்களுடன் சித்து கிளம்புவார் என்றும் ஓடுது

சித்துவின் மீதான அவநம்பிக்கையோ, மீதான நம்பிக்கையோ முக்கியமில்லை 6.5 கோடி கன்னடர்கள் நலன் மற்றும் சமூக நீதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்கிறார் மல்லிகார்ஜுன கார்கே..

ஜாதி அரசியலும் மத அரசியலும் கோலோச்சிய கர்நாடகாவில்
சித்துவின் தேர்வுக்கு இது தான் சரியான காரணம்

டி கே எஸ்ன் இந்த பக்குவமும், பாசிச ஆட்சியை அகற்றும் முனைப்பும் எல்லோருக்கும் வாய்த்து விடாது.

கர்நாடகாவை விட கொடூர சாதி அரசியலும் மத வெறியும் தாண்டவமாடும் ராஜஸ்தானில் அசோக் Gehlot காங்கிரஸ் அரசை எதிர்த்து பதவி கிடைக்காத சச்சின் பைலட் ஜன சங்கர்ஷ் யாத்ரை சென்று கொண்டிருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் இளைஞரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு வழி விட மறுத்து அடம்பிடித்து முதல்வரான கமல்நாத் போக்கால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

அவர்கள் தந்தையரான ராஜேஷ் பைலட் மாதவராவ் சிந்தியா
இருவரும் ராஜிவின் படை தளாகர்த்தர்கள்.

இரண்டு மாநிலங்களிலும் கட்சியை வழிநடத்தியவர்கள்

பாண்டிச்சேரியில், நமச்சிவாயம் தான் ஆள் இன் ஆல். ஆனால் டில்லி லாபியின் மூலம் நாராயணசாமி முதல்வராக, கட்சியை உடைத்த நமச்சிவாயம் ஆட்சியையும் இழக்க வைத்தார்.

தமிழ்நாட்டிலும் ஏற்கனவே ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும் சிதம்பரம், அன்னை சோனியாவுடன் நேரடியாக மோதி கார்த்திக்கு சீட்டு வாங்கினார்

ராகுல் தலைவராக கூட இந்த கிழசிங்கங்கள் தான் தடை.

கர்நாடகாவில் காங்கிரசுக்கு உதவிய anti incumbency ராஜஸ்தானில் எதிராக உள்ளது

போஸ்பாண்டி வேறு வந்தே பாரத்தை ஓட்டிக்கொண்டு போய்,ஜெய்ப்பூரில் கேம்ப் அடித்து விட்டார்

ராகுல் திடமான முடிவு எடுத்தால் தான் ராஜஸ்தான் மீண்டும் கை வசமாகும்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால்,

தேர்தல் முடிவு அறிவிக்கும் நேரத்தில் மறுபடியும் நட்டா படத்தை தூக்கிட்டு மோடி படத்தை போட்டு, "இவரை விட்டா வேற ஆள் இல்ல"

என டுபாக்கூரை மீண்டும் நம்ம தலையில் கட்ட முயல்வர்

பிஜேபி கம்பெனி போல மூத்தவர்களுக்கு VRS கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்.

அட்லீஸ்ட் 2.5 ஆண்டு பதவி பங்கீடு ஒப்பந்தத்துக்காவது உட்பட வைத்தால் தான்,

இந்தப் பெருந்தலைகள் அடங்கி ராகுலை கட்சித் தலைவரா ஆகவும் பிரதமராகவும் விடுவாங்க

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling