தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 20, 2023, 10 tweets

#இதுக்கு_ஒரு_எண்டே_இல்லையா

எந்த பக்கம் திரும்பினாலும், 2000₹ பேச்சாகத்தான் இருக்கிறது.

ஆனால், அடித்தட்டு மக்களை அதிகம் பாதிக்கும் 10₹ நாணயம் பற்றி ஒருத்தரும் வாயே திறப்பதில்லை.

அந்த 10₹ காயின் செல்லுமா? செல்லாதா? என்று மண்டையை பிய்த்து கொள்கிறார்கள் நம் மக்கள்.

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது.

அப்போது, அந்த நாணயத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" மற்றும் "இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது.

பிறகு, புது புது டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது

இருந்தாலும், 10₹ நாணயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே

காரணம், அடிக்கடி பரவி வரும் வதந்திகள் காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் அவற்றை வாங்க மறுக்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்டுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழும அதிகாரிகள் இது தொடர்பாக கூடி விவாதித்தனர்.

அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் 10₹ நாணயங்களை வாங்க மாநில அரசு அறிவுறுத்த வேண்டும், பேருந்துகளில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்புமின்றி நாணயங்களை வாங்க வேண்டும்.

வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும்.

அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

பிரச்சினை முடிந்தது என நம்பினர்

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

சென்னையில் மட்டுமே 10 ரூபாய் நாணயம் செல்லுபடியாவது போல தெரிகிறது.

கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

மற்றபடி, வேறு எந்த இடங்களில் 10 ரூபாய் காயின் தந்தால் ஏற்க மறுக்கிறார்கள்.. ரிசர்வ் வங்கியும்,

மத்திய அரசும், இந்த 10₹ நாணயம் குறித்த நம்பகத்தன்மையை சொன்னாலும்கூட, பெரும்பாலானோர் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

இதனால், இந்த 10 ரூபாய் காயினை வைத்து கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் பலர் விழித்து வருகிறார்கள்.

கடைக்காரர் ஒருவர் தன் கடையில் 10 ரூபாய் நாணயம் வாங்கிவிட்டார்

என்றால், அதை மறுபடியும் வேறு வாடிக்கையாளரிடமோ, வேறு கடையிலோ மாற்ற முடியாது.

இதற்காக அந்த கடைக்காரர், நேரம் செலவழித்து வங்கிக்கு செல்ல வேண்டும்.

வங்கியிலும் வரிசையில் நின்று படிவத்தை நிரப்பிய பிறகுதான் நான், அந்த பணத்தை தன் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமாம்..

அதேபோல, ஸ்விக்கி போன்ற நிறுவனத்தில் வேலை பார்ப்போருக்கு, இந்த 10 ரூபாய் நாணயம் நடைமுறை சிக்கலை தருவதாக சொல்கிறார்கள்.

கஸ்டமர்களுக்கு உணவு தந்தபிறகு, அவர்கள் தரும் பணத்தை, ஸ்விக்கி நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமாம்.

அப்படி செய்யும்போது நாணயங்களாக இருந்தால்,

கடைகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதனால்தான், 10 ரூபாய் நாணயங்களை கஸ்டமர்கள் தந்தால் ஏற்க மறுக்கிறோம் என்கிறார்கள்.

அவசரத்துக்குகூட 10 ரூபாயை யாரும் வாங்கி கொள்ளாத சூழல் உள்ளதால்,

2000₹ விவகாரம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த 10₹ நாணயத்துக்கான வழியை முதலில் சொல்லுங்கப்பா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling