அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 21, 2023, 6 tweets

#ஸ்ரீரங்கம்_ரங்கநாதர்_வினா_விடை
1. அயோத்தியில் இருந்து ரங்கநாதரைக் கொண்டு வந்தவர் யார்?
விபீஷணன்

2. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதரின் பெயர் என்ன?
அழகியமணவாளர்

3. ஸ்ரீரங்கம் ஜீயராக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்தவர் யார்?
ஸ்ரீராமானுஜர்

4. ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட்ட

சிறப்பு பெயர் என்ன?
திருவரங்கச்செல்வம் முற்றுந்திருத்தி

5. ரங்கநாதர் மீது பாடப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் எத்தனை?
247

6. ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களைக் கட்டிய ஆழ்வார் யார்?
திருமங்கையாழ்வார்

7. பூலோகத்துடன் ஒப்பிட்டு ஸ்ரீரங்கத்தை எவ்வாறு அழைப்பர்?
பூலோகவைகுண்டம் என்று

அழைப்பர்.

8. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இன்னொரு பெயர் என்ன?
பெரியபெருமாள்

9. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம் என்ன?புன்னைமரம்

10. பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியவர்கள் எத்தனை பேர்?
11 பேர்கள்

11. எந்த திசை நோக்கி காட்சித் தருகிறார்?
விபீஷணனுக்காக தென்திசை இலங்கை நோக்கி.

12 முற்றுப்பெறாத இராஜகோபுரம் யாரால் கட்டி முடிக்கப்பட்டது?
அகோபில மடத்தின் 44 வது ஜியர் ஸ்ரீ முக்கூர் அழகிய சிங்கரால்.

13 வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வெள்ளை கோபுரம் யாருடைய பெயரால் தாங்கி நிற்கிறது?
வெள்ளையம்மாள் என்கிற தாசி இஸ்லாமிய படையெடுப்பின் போது கோவிலைக் காக்க செய்த

உயிர் தியாகத்தின் நினைவாக.

14. திருவரங்கம், ஸ்ரீரங்கம் என்பதில் அரங்கம் என்பதன் பொருள் என்ன?
அரங்கம் என்பது நதிநீரில் அமைந்த மேலான திட்டு என்று பொருள்படும்.

15. இங்குள்ள புஷ்கரனியின் பெயர் என்ன?
சந்திர புஷ்கரணி

ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling