#அக்னீஸ்வரர்_திருக்கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் #திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உள்ளது இக்கோவில். புராணக் காலத்தில் மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இத்தலம், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 9வது தலம். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 72வது
தேவாரத் தலம் ஆகும். காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி - குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.
மூலவர் : அக்கினீசுவரர், தீயாடியப்பர் அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம் : வன்னி, வில்வம், ஊமத்தை, கொன்றை தீர்த்தம் :
சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் -கிணறு வடிவில் உள்ளது.
இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு #அக்னீஸ்வரம் என்று பெயர் வந்தது. இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது.
லிங்கத்தின் சிரசு மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றத்தைக் காணலாம். இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள் பாலிக்கிறார். நாம் செய்யக் கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து
விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. நவகிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. அனைத்து நவகிரகங்களும் 'ப' வடிவில் அமைந்து உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணா
மூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணா மூர்த்தியை பார்க்கலாம். மாசி மகம், பங்குனி பெருவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னா பிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. திருமணத் தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்
செழிப்புடன் திகழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வணங்கு கின்றனர். இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத் தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.
பிரார்த்தனைகள் நிறைவேறியதும்
இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் எய்துவர்.
திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக் கண்டியூர்
திருவையாறு, கல்லணை முதலிய இடங் களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. திருவையாறு - கல்லணை சாலையில் திருக்காட்டுப் பள்ளி உள்ளது.
போன்: - குருக்கள் 9442347433
சென்று தரிசிப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.