Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

May 21, 2023, 23 tweets

🍀🏵️ #இரண்டாயிரத்திலும்_ஒன்று....

நேற்று கோட்சே பிறந்த நாளில் இந்தியாவின் உச்ச பட்ச காந்தி கரன்சியை திரும்ப பெறுவதாக அறிவித்து அதிரடித்திருக்கிறார்கள்.

என்ன ஒன்று.....

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நம் இந்திய தேசத்தில்.... விடுதலை சமயத்தில்...‌‌

சரியாக சொல்வதென்றால் 1946 ஆம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய், 5000 ரூபாய் ஆகியவற்றோடு 1000 ரூபாயும் இனி செல்லாது என அறிவித்தது பிரிட்டிஷ் இந்திய அரசு.

அது தான் முதல் தடவை.

ஆன போதிலும் இந்த ரூபாய் தாள்களை 1954 ஆம் ஆண்டு அப்போது இருந்த நேரு தலைமையிலான அரசு மீண்டும் செல்லும் என்று அறிவித்தது.

பலரும் பலத்த கண்டனங்கள் தெரிவித்த போதும் மனிதர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை......

ஏன் இப்படி செய்தார்.....

என்ன நடந்தது இடையில் என்பதற்கு சரியான விளக்கங்களை யாரும் கொடுக்க முன் வரவில்லை.

தூரதிருஷ்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நிலச்சுவந்தார் போன்ற பலரும் மர்மமான முறையில் இருந்தது பின்னாளில் தெரியவந்தது.

அது உண்மை என்றால்........

அதுவே முதல் தடவை பாகிஸ்தானுக்கு என்று பட்ஷி சொல்கிறது. புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறோம்.

கட்டகடைசியாக அப்போது தான் புதிய ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சடித்து அதில் நம் தஞ்சை பெரிய கோயில் படத்தையும் இடம் பெறவும் செய்தனர்.

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 தேதி அன்று இந்த ஆயிரம் ரூபாயை புழக்கத்தில் விடுவதாக அறிவித்தார்கள்.

முன்னதாக 1946 இந்திய ரூபாய் செல்லாது என அறிவித்த சமயத்திலேயே நம் இந்திய தேசத்தில் 143 கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டிருந்தது.

திரும்பி வந்தது 134 கோடி ரூபாய் மட்டுமே.

கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய் அளவிற்கு அப்போதே அந்த காலத்திலேயே கணக்கில் வரவில்லை என்கிறார்கள்.

இதனிடையே இதிலேயே கள்ளப் பணம் புழக்கத்தில் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது அச்சு அசலாக போலி ரூபாய் தாள்கள்....

இது தான் அந்நாளில் அதாவது 50' களில் நடந்த போருக்கு பின்னணியில் இருந்த பணம் என்று சுட்டிக் காட்ட தவறவில்லை அவர்கள்.

பின்னர் வந்த இந்திரா காந்தி தலைமையில் மத்திய அரசு சில கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி .......

சமாளிக்க வேண்டி.....

இந்திய ரூபாய் மதிப்பை குறைத்து,

அப்போது புழக்கத்தில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

இஃது பாரதூரமான விளைவுகளை நம் இந்திய தேசத்தில் ஏற்படுத்திவிட்டது.

இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் மிகப் பெரிய அளவில் புகுந்து விளையாடியது என்று ஆராய்ந்து பார்த்தவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால் பெரிய அளவில் விஷயம் விவகாரம் ஆகவில்லை......

ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்தது அப்போது தான்.

சரிக்குசரியாக நின்ற மதிப்பு அதளபாதாளத்தில் நோக்கி சீறிப்பாய்ந்தது.

1972 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போருக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

அந்த சமயத்தில் விழுந்த விதை விருட்சமாகி அசுர வளர்ச்சி கண்டது அரபு உலக நாடுகள்.

பின்னணியில் அமெரிக்கா...... காரணம் எண்ணெய் வர்த்தகம்.

நம் விஷயத்திற்கு வருவோம்.
இந்திய ரூபாய் தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் வேலைகளில் பற்பல சாதுர்யமான நடவடிக்கைகளை

மேற்கொண்டு வந்தது நம் இந்திய தேசம்.

நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருப்பது போல ரூபாய் தாள்களை காகிதங்களை கொண்டு அச்சடிக்கவில்லை.

மாறாக ஓர் வகையான துணியில் அச்சடிக்கிறார்கள்.

இன்றைய நவீன உலகில் அதில் பல பாதுகாப்பு அம்சங்களை மேற்கொண்டுள்ளது நம் இந்திய அரசு.

2016 ஆம் ஆண்டு நம் இந்திய தேசத்தில் மிகப் பெரிய சவால் ஒன்று நமக்கு தெரியாமல் காத்துக் கொண்டு இருந்தது.

அது வரை காலமும் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் அகரவரிசைப்படியில் இரண்டிற்கும் மேற்பட்ட நோட்டுகள் மக்கள் கைகளில் புழங்கி கொண்டு இருந்தன...

அவை எப்படி என்பதெல்லாம் #சிதம்பர_ரகாசியம்.

இதனை அரசு தரப்பில் வெளிப்படையாக அறிவிக்கவும் முடியவில்லை.....

அப்படி நடந்தால் எதிர்மறை விளைவை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.

போதாக்குறைக்கு நாட்டின் பொருளாதாரம் படுத்துவிடும்.
அரபு உலக நாடுகளில் இந்திய பத்திரங்கள்

பெருமளவில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது.

சரியாக சொல்வதென்றால் ஆயில் கம்பெனி வழியாக அமெரிக்காவிடம் நம் இந்திய பிடி சிக்கி தவித்து வந்தது.

பொக்ரானில் நம் இந்திய அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்தது போன்று

பல மடங்கு பாதுகாப்புடன் அதி ரகசியமாக பார்த்து பார்த்து புதிய ரூபாய் தாள்களை அச்சடித்து வந்த நிலையில் விஷயம் ஊடகங்களில் கசிந்தது.

பின்னணியில் அமெரிக்கா.....

உடனடியாக செயலில் இறங்கிய நம் பாரதப் பிரதமர் முன் எப்போதும் இல்லாத வகையில்

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 26, அதன் உட்பிரிவு 2ன் படி நேரடியாக தானே நாட்டு மக்களிடம், புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

இது நடந்தது நவம்பர் மாதம் 8 ஆம் 2016 ஆம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் வைத்து கேட்கவில்லை....

எங்களுக்கு தப்பிக்க நேரம் ஒதுக்க வில்லை என்றெல்லாம் பலரும் பிதற்றிக் கொண்டு இருந்தனர் அப்பொழுது.

இஃது உலக அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது.....

அதிலும் குறிப்பாக அமெரிக்காவில்..

பின்னாளில் ஆஃப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக நிலைக்கொண்டு இருந்த

அமெரிக்க படை வாபஸ் பெறப்பட்டதில் வந்து முடிந்தது..

இதற்கும் நம் இந்திய ரூபாய் சமாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேள்வி கேட்டால்.......

நாம் குழந்தை போன்ற வெகுளி என எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் நுணுக்கமாக..........

விடாப்பிடியாக ஆராய்ந்து பார்த்தால், மிஷனரி கும்பல் தொடர்ந்து கதறியது நினைவிருக்கலாம்....

நன்கு அவதானித்து பார்த்தால்....

அது நாள் வரையில் விடாமல் கதறிக் கொண்டு வந்த கூடன்குளம் சமாச்சாரத்தை அதற்கு பிறகு எந்த வித சலனங்களும் இன்றி காற்றாக கரைந்து காணாமல் போனதும் தெரியவரும்.

இதே காலகட்டத்தில் அங்கு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது.

மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் அமெரிக்காவில் வந்தபோது தான் மீண்டும் இந்தியாவில் கலகக் குரல்கள் வெடித்தது.....

இம்முறை தெற்கில் அல்ல..... வடக்கில் அதுவும் தலைநகரிலேயே.

கூடன்குளத்தில் வெடித்த சமூக அக்கறை அங்கு விவசாயத்தில் வெடித்தது,

காலிஸ்தான் வடிவத்தில்....

தொடர்ச்சி 2ஆம்பாகத்தில்....

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling