#கூட்டாட்சிமுறைக்கு_சவால்
நாடாளும் மன்றத்தை ஏன் நாட்டின் முதல் குடிமகன் திறக்கலை? என்ற கேள்வியை அழகா திசை திருப்பி,
செங்கோலா?கன்னக்கோலா என விவாதம் பண்ண வச்சிட்டு,
ஜனநாயகம் - கூட்டாட்சி என்பதற்கே சாவு மணி அடிக்கும் திட்டம் தான்
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கூடுதல் எண்ணிக்கையில் 888 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 2026-ம் ஆண்டு வரை எம்.பிக்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சட்ட திருத்தம் கொண்டு வந்ததால்
2026-ம் ஆண்டு வரை இதே எம்.பிக்கள் எண்ணிக்கைதான் இருக்கப் போகிறது.
2026-ம் ஆண்டுக்குப் பின்னரே எம்.பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் உருவாகும்.
மக்கள் தொகை அடிப்படையில்தான் எம்பிக்கள் பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படுகிறது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின்
திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முழு வீச்சில் செயல்படுத்தி இருக்கின்றன.
ஆனால் வட இந்திய மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.
மக்கள் தொகை அடிப்படையில் MP எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் போது தென்னிந்திய பிரதிநிதித்துவம் குறைந்து கூட்டாட்சி முறையே கேள்விக்குள்ளாகி விடும்
1962-ல் தமிழ்நாட்டுக்கான லோக்சபா எம்பிக்கள் எண்ணிக்கை 41.
குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதால் தமிழ்நாடு லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை தற்போது 39 ஆக குறைந்துள்ளது.
எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் குறையும் போது நலத்திட்டங்களுக்கான எம்.பி நிதியும் குறையும்
குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்டவைகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம்
அம்மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதிகளும் அதிகம்.
நலத்திட்டங்களுக்கான எம்பிக்கள் நிதியும் அதிகம்
மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் பிரதிநிதித்துவம்,
நிதி இழப்பை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குவதானே முறை?
மக்கள் தொகை 55 கோடியாக இருந்த போது லோக்சபா தொகுதி எம்.பிக்கள் எண்ணிக்கை 545
தற்போது மக்கள் தொகை 100 கோடி தாண்டியதால் 1,000 எம்.பிக்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்
இப்படியான ஒரு நிலைமை உருவானால் நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் கேலிக்குறியதாகிவிடும்.
உ.பி, பீகார் எம்.பிக்கள் நினைப்பதுதான் இந்தியாவின் சட்டமாகிவிடும்.
தென்னிந்திய மாநில மக்கள், வட இந்தியாவுக்கு கீழ்படிந்தவர்களாக ஒடுக்கப்படுகிறவர்களாக உருமாறும் நிலைமை உருவாகும்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு பெரும் சவாலாக மாறும்.
2024 லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக பாஜக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் 2026-ல் 888 எம்.பிக்களை உருவாக்கும் வகையிலான மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது
சமூக பொருளாதார ரீதியாக தேக்கம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்திக்கக் கூடும்.
இது ஜனநாயகத்தன்மையை உலுக்கி எடுக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.
என்ன செய்யப் போகின்றன தென் மாநிலங்கள்?
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.