தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Jun 11, 2023, 13 tweets

#சூரரைப்_போற்று

கோரமண்டல் விபத்துக்குள்ளான
10 நாளில் மேலும் 6 விபத்துக்கள்.

அதனைத் தொடர்ந்து சங்கி கூட்டம் முன்வைக்கும் ரயில்வேயை தனியார் மயமாக்கு கோஷம்.

இதற்கு முன்பும் ரயில்வேயை கைவிட அரசு முயன்ற போது கோமாளி என்று சங்கிகளால் அழைக்கப் பட்ட லாலு பொறுப்பேற்று லாபகரமாக்கினார்

2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து

முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.

இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார். லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு.

தற்போதைய நிலவரப்படி 1.23 மில்லியன் தொழிலாளர்கள் வேலைப்பார்க்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம். அப்படிப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்கிறார். அன்றைய காலகட்டத்தில ரயில்வேக்கென்று தனியாகவே பட்ஜெட் இருந்தது.

யாரும் ஏற்க முன்வராத பதவியை ஏற்று அதை வெற்றிகரமாக செய்தும் காட்டினார்.

2004 ஜுலை 6 -ம் நாள் லல்லு தன் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நாடே திரும்பிப்பார்த்தது. காரணம், பொதுவாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விலையேற்றம் தான் இருக்கும்.

ஆனால், லல்லு தன் பட்ஜெட்டில் விலை குறைப்பு செய்தார். சாதாரண வகுப்பில் இருந்து முதல் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு வரை

அனைத்துக்கும் பயணக்கட்டண குறைப்பு செய்தார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் துறை, இவர் வேறு பயணக்கட்டண குறைப்பு செய்கிறார் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை

லல்லு தன் வித்தியாசமான செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். .மக்கள் அனைவரும் ரயில்களை பயன்படுத்த போதிய இருக்கைகள் இல்லை.

புதியதாக ரயில்கள் வாங்கலாம் என்ற யோசனையை லல்லு ஏற்கவில்லை. இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் என்ஜின்களின் இழுவிசையை சற்று அதிகரிக்கச் சொன்னார்.
இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.

ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச் சொன்னார். சாதாரணமாக 45 KMPH என்ற அளவில் இருந்த ரயில்களின் வேகம் 55 KMPH என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. கூடவே, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகியது.

பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.

அடுத்ததாக சரக்கு ரயில்களிலும் கவனத்தை செலுத்தினார். வெகு நாட்களாக உயர்த்தப்படாமலிருந்த சரக்கு ரயில்களின் கட்டணத்தை உயர்த்தினார். மேலும் சரக்கு ரயில்களின் சுமக்கும் அளவை அதிகரிக்க திட்டமிட்டார். ஆனால் உயர் அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை

இப்படிச்செய்தால் ரயில்களில் ஆக்ஸில்கள் உடைந்து மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் என்றனர். லல்லு நேரடியாக ஆய்வுகளில் இறங்கினார். அதிகாரிகள் மட்டுமல்லாது பொறியாளர்கள், இன்ஜின் இயக்குபவர்கள், ரயில்வே தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. முடிவாக 20.3 டன் என்ற

அளவில் இருந்து 22.9 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதனால் ரயில்வேவிற்கு 3000 கோடி லாபம் கிடைத்தது. நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த துறையை லாபகரமான துறையாக மாற்றினார் லல்லு. பதவியேற்கும் போது கையிருப்பு 149 கோடி.

ஆனால் பதவியேற்றப்பின் கையிருப்பு 12000 கோடி.

அன்று, லல்லு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரயில்வே துறை என்றைக்கோ தனியார் வசமாயிருக்கும்.தன் மீது வைக்கப்பட்ட எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் அடித்து தூள் தூளாக்கினார். மிகச்சிறந்த பிசினஸ் பல்கலையான ஹாவர்டில் "லல்லு வின் ரயில்வே பணிகள்" இன்றும் பாடத்திட்டத்தில் உள்ளது.

யார் ஒருவரை ஊழல்வாதியாக, கோமாளியாக ஊடகங்கள் சித்தரிக்கிறதோ, அவர் உண்மையில் மக்களுக்காக சிந்திக்கும், உழைக்கும் சமூகநீதி சிந்தனையாளராக இருப்பார் என்பதற்கு லல்லு பிரசாத் யாதவ் உதாரணம்.

அவரது பிறந்த நாள் இன்று.
அவர் மகன் @yadavtejashwi டேக் பண்ணி ஒரு வாழ்த்து பதிவிடுங்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling