#அகிலாண்டேஸ்வரி_சமேத_ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர்_கோவில் ஊட்டத்தூர்
பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில், திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த விக்ரகம் உளி கொண்டு செதுக்கப்பட்டது அல்ல. சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே
உருவாகிய அற்புதமான விக்ரகம் ஆகும். இது உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும். 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய
கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் #பஞ்சநதன_நடராஜர் என்று அழைக்கப் படுகிறார். சூரியன் காலையில் புறப்படும் போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக் கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகிறோமோ அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி
மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின் போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது. இந்த கோவிலில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால் ஒரு கோடி
புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார். வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜபம் செய்யும் போது பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன. இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த அபூர்வ நடராஜருக்கு
சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி நடராஜருக்கு சாற்றி
அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது. இங்குள்ள கொடி மரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 15 திதிகள் 12 ராசிகள் 9
கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக சிருஷ்டிக்கப்படுகிறது என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை. சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் எதிரில
கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும். பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம
தீர்த்தம் உள்ளது. உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச் சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதற்கு சான்றாக
ராஜராஜசோழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் சிவன் சன்னதிக்கு எதிரில் தீர்த்தம் கிடையாது. இந்த கோவிலில் உள்ள கால
பைரவர் சக்திவாய்ந்த தெய்வமாவார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகம். அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட
மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள். பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது.
முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம்
என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. உலகிலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.
ஓம் சிவாய நமஹ
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.