அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jun 17, 2023, 12 tweets

#பிறந்தநாள்_கொண்டாட்டம்
முன்பு நாம் பிறந்த தமிழ் மாதத்தில், நம் நட்சத்திரம் வரும் தினத்தை தான் பிறந்த நாளாகக் கொண்டாடி வந்தோம். அன்று கோவிலுக்குப் போயும், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றும் கொண்டாடுவோம். இன்றோ ஆங்கில பிறந்த தேதி தான் ஞாபகம் இருக்கு.

ஒருவரது ஜாதகத்தை twitter.com/i/web/status/1…

எடுத்துக் கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே நாம் #பிறந்த_நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம், அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர்.

வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர் இந்த ஜென்ம நடச்சத்திரமும், அதன் அதிபதியும். இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று

அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள். ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால்,

எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விடக் கூடாது. குறைந்த பட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபட வேண்டும். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, (ஜாதகம் மூலம்)

தீமைகள் அகல, தோஷம் விலக எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் விரைவில் தீரும். ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
ஜென்ம நட்சத்திர

வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம்

அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது. ஜென்ம நட்சத்திரத்தின் மகிமைக்கு எடுத்துக்காட்டு இந்த புராண சம்பவம்: சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தன் ஜென்ம

நட்சத்திரத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம்

எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும். நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு

செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது. அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம். பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்சத்திரத்தை கூறி அர்ச்சனை

செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ நலனோ பலனோ இல்லை. இனி இதை கடைபிடிப்போம். ஆங்கிலேயர் ஆட்சியில் மாறியதை மாற்றி நமது தர்மத்தை பின்பற்றுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling