MyV3ads Scam ஒரு பார்வை..!
விளம்பரம் பார்த்தால் காசு,ஆள் சேர்த்துவிட்டா ரெபரல் கமிசன்,12 லெவல்,கோடி,கோடியா வருமானம் இதான் இந்த MLM மோசடியோட பார்முலா..! சட்டத்துல இருந்து தப்பிக்க ஹெர்பல் மருந்துகள் விற்க்ககூடிய கம்பெனியா ரிஜிஸ்டர் பன்னிட்டு நடத்துறாங்க..! ஆனாலும் இந்த கம்பெனி ரிஜிஸ்டர் பன்னினது வேற ஒரு கேட்டகிரில..! 1/n
இந்தியாவுல 2019க்கு முன்னாடி வரைக்கும் நிறைய MLM money rotation மட்டும் வச்சி நடத்தினாங்க.. நிறைய குற்றசாட்டுகளுக்கு பிறகு முதலீடு பன்ன கூடிய பணத்துக்கு ஈட பொருள் கொடுக்காம இருக்க MLM எல்லாம் ஸ்கேம்னு அறிவிக்கபட்டது.. பணம் மட்டுமே பிரதானமா இயங்ககூடிய MLM நிறுவனங்கள் அதுல இருந்து தப்பிக்க ஹெர்பல் பொருட்கள்,நேப்கின்,மளிகை பொருட்கள் வச்சி மேக்கப் போட்டு மறைச்சி அதே money rotation வேலைய பன்ன ஆரம்பிச்சாங்க அதுல ஒன்னுதான் myv3ads..! 2/n
2016-2020 கால கட்டத்துல Apex digital ads இந்த பேர்ல விளம்பரம் பார்த்தால் வருமாணம்,ரெபரல் வருமானம்,கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு அந்திர மாநில பதிவோடோ ஒரு MLM சக்கைபோடு போட்டுச்சி..ப்ளே ஸ்டோரில் apex digital channel னு ஆப் வச்சி நடத்தினாங்க, Myv3adsல இப்ப நடக்குற கூத்து எல்லாம் அப்பவே நடந்துச்சி... அன்ன ஹசாரே எல்லாம் மீட் பன்னி விடியோக்கள்,கெளரவ டாக்டர் பட்டம், மீட்பர் சுரேஸ் இப்படி பல பட்டங்கள் குடுத்தானுங்க மோசடிகள் நடந்தேறியது.. ஒரு நாள் கடைய மூடிட்டு எஸ்கேப்... அப்புறமா வழக்கம் போல மக்கள் காவல்துறை,பொருளாதார குற்றபிரிவுல புகார் குடுத்து போராட்டம்,அரசு எங்கள கண்டுக்கலனு கத்திட்டு கிடந்தாங்க... போன பணம் போனதுதான்..! ஈரோட்ல 2 முகவர்கள அரெஸ்ட் பன்னினாங்க.. அதுல ஏமாந்த மக்கள் இன்னும் மீண்டு வரமுடியாம இருக்காங்க...! 3/n
அதே கம்பெனியோட அதே பார்முலாவ அப்படியே எடுத்துட்டு வந்து இன்னைக்கு ஜிமிக்ஸ் வேலை காட்டிட்டு இருக்க க்ஃம்பெனிதான் MYV3ads..! உகல பொருளாதார காட்பாதர், 5 டாக்டரேட்,5 மாநில கவர்னர் விருது, குருஜி இப்படி எல்லாம் கொரளி வித்தை காட்டிட்டு இருக்காங்க..! இந்த வீடியோ எடிட் எல்லாம் பார்த்தாலே நல்லா புரியும்..! 4/n
இந்த மாதிரியான MLM எல்லாம் சீக்கிரம் மக்கள் மத்தியில பரப்ப நம்பிக்கை தன்மையை ஏற்படுத்த காவலர்கள்,ஆசிரியர்கள், தொலைகாட்சி தொடர் பிரபலங்கள் பணம் முதலீடு செய்திருப்பதாக மக்களை நம்பவைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்..! உதாரணத்திற்கு...! 5/n
Myv3ads நெட்வர்க் மர்கெட்டிங் ப்ளன்..! இது Basic member ப்ளானாம்...! இதுல ஒரு பேசிக் மெம்பரே 10வது லெவல்ல பக்கத்து கிரகத்தில இருந்து ஏலியன் எல்லாம் ப்ளன்ல சேர்க்க வேண்டி இருக்கும்..! இன்னும் silver,gold,diamond,crown மெம்பர் ப்ளன் எல்லாம் இருக்கு..அவுங்க எல்லாம் பக்கத்து கேலக்ஸில போய் ஆள் சேர்த்தாதான் ப்ளன் கம்பிளிட் பன்ன முடியும்...!
6/n
இந்த money circulation banning actல இருந்து தப்பிக்கதான் இந்த அயுர்வேத பொருட்கள் வாங்கி ஸ்கீம்ல சேரலாம் என்ற ஜிம்மிக்ஸ் வேலை..! மத்தபடி எப்பவும்போல money rotationதான் இந்த விளம்பரம் பார்த்தா காசு MLMகான்செப்டே...! 7/n
இதை போலவே,இதை பின்பற்றி விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று இயங்கி வரும் நிறுவனங்கள் Royalo - சென்னை தலைமை இடம், SBO - திருவண்ணாமலை தலைமை இடம்,
இதைபோலவே இயங்கி ஏற்கனவே மோசடி செய்து தற்போது வேறு பெயரில் இயங்கும் MLM நிறுவனம் Fourkart..! இப்படி ஏகபட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகிறது..! 8/8
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.