iRoBo Profile picture
Sep 11, 2023 8 tweets 5 min read Read on X
MyV3ads Scam ஒரு பார்வை..!

விளம்பரம் பார்த்தால் காசு,ஆள் சேர்த்துவிட்டா ரெபரல் கமிசன்,12 லெவல்,கோடி,கோடியா வருமானம் இதான் இந்த MLM மோசடியோட பார்முலா..! சட்டத்துல இருந்து தப்பிக்க ஹெர்பல் மருந்துகள் விற்க்ககூடிய கம்பெனியா ரிஜிஸ்டர் பன்னிட்டு நடத்துறாங்க..! ஆனாலும் இந்த கம்பெனி ரிஜிஸ்டர் பன்னினது வேற ஒரு கேட்டகிரில..! 1/nImage
Image
இந்தியாவுல 2019க்கு முன்னாடி வரைக்கும் நிறைய MLM money rotation மட்டும் வச்சி நடத்தினாங்க.. நிறைய குற்றசாட்டுகளுக்கு பிறகு முதலீடு பன்ன கூடிய பணத்துக்கு ஈட பொருள் கொடுக்காம இருக்க MLM எல்லாம் ஸ்கேம்னு அறிவிக்கபட்டது.. பணம் மட்டுமே பிரதானமா இயங்ககூடிய MLM நிறுவனங்கள் அதுல இருந்து தப்பிக்க ஹெர்பல் பொருட்கள்,நேப்கின்,மளிகை பொருட்கள் வச்சி மேக்கப் போட்டு மறைச்சி அதே money rotation வேலைய பன்ன ஆரம்பிச்சாங்க அதுல ஒன்னுதான் myv3ads..! 2/n

Image
Image
2016-2020 கால கட்டத்துல Apex digital ads இந்த பேர்ல விளம்பரம் பார்த்தால் வருமாணம்,ரெபரல் வருமானம்,கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு அந்திர மாநில பதிவோடோ ஒரு MLM சக்கைபோடு போட்டுச்சி..ப்ளே ஸ்டோரில் apex digital channel னு ஆப் வச்சி நடத்தினாங்க, Myv3adsல இப்ப நடக்குற கூத்து எல்லாம் அப்பவே நடந்துச்சி... அன்ன ஹசாரே எல்லாம் மீட் பன்னி விடியோக்கள்,கெளரவ டாக்டர் பட்டம், மீட்பர் சுரேஸ் இப்படி பல பட்டங்கள் குடுத்தானுங்க மோசடிகள் நடந்தேறியது.. ஒரு நாள் கடைய மூடிட்டு எஸ்கேப்... அப்புறமா வழக்கம் போல மக்கள் காவல்துறை,பொருளாதார குற்றபிரிவுல புகார் குடுத்து போராட்டம்,அரசு எங்கள கண்டுக்கலனு கத்திட்டு கிடந்தாங்க... போன பணம் போனதுதான்..! ஈரோட்ல 2 முகவர்கள அரெஸ்ட் பன்னினாங்க.. அதுல ஏமாந்த மக்கள் இன்னும் மீண்டு வரமுடியாம இருக்காங்க...! 3/n
அதே கம்பெனியோட அதே பார்முலாவ அப்படியே எடுத்துட்டு வந்து இன்னைக்கு ஜிமிக்ஸ் வேலை காட்டிட்டு இருக்க க்ஃம்பெனிதான் MYV3ads..! உகல பொருளாதார காட்பாதர், 5 டாக்டரேட்,5 மாநில கவர்னர் விருது, குருஜி இப்படி எல்லாம் கொரளி வித்தை காட்டிட்டு இருக்காங்க..! இந்த வீடியோ எடிட் எல்லாம் பார்த்தாலே நல்லா புரியும்..! 4/n
இந்த மாதிரியான MLM எல்லாம் சீக்கிரம் மக்கள் மத்தியில பரப்ப நம்பிக்கை தன்மையை ஏற்படுத்த காவலர்கள்,ஆசிரியர்கள், தொலைகாட்சி தொடர் பிரபலங்கள் பணம் முதலீடு செய்திருப்பதாக மக்களை நம்பவைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்..! உதாரணத்திற்கு...! 5/n

Myv3ads நெட்வர்க் மர்கெட்டிங் ப்ளன்..! இது Basic member ப்ளானாம்...! இதுல ஒரு பேசிக் மெம்பரே 10வது லெவல்ல பக்கத்து கிரகத்தில இருந்து ஏலியன் எல்லாம் ப்ளன்ல சேர்க்க வேண்டி இருக்கும்..! இன்னும் silver,gold,diamond,crown மெம்பர் ப்ளன் எல்லாம் இருக்கு..அவுங்க எல்லாம் பக்கத்து கேலக்ஸில போய் ஆள் சேர்த்தாதான் ப்ளன் கம்பிளிட் பன்ன முடியும்...!
6/n
இந்த money circulation banning actல இருந்து தப்பிக்கதான் இந்த அயுர்வேத பொருட்கள் வாங்கி ஸ்கீம்ல சேரலாம் என்ற ஜிம்மிக்ஸ் வேலை..! மத்தபடி எப்பவும்போல money rotationதான் இந்த விளம்பரம் பார்த்தா காசு MLMகான்செப்டே...! 7/n
Image
Image
இதை போலவே,இதை பின்பற்றி விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று இயங்கி வரும் நிறுவனங்கள் Royalo - சென்னை தலைமை இடம், SBO - திருவண்ணாமலை தலைமை இடம்,
இதைபோலவே இயங்கி ஏற்கனவே மோசடி செய்து தற்போது வேறு பெயரில் இயங்கும் MLM நிறுவனம் Fourkart..! இப்படி ஏகபட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகிறது..! 8/8


Image
Image
Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with iRoBo

iRoBo Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @iRoBo_UN

Feb 17, 2024
Jeka Bazar - வங்காளதேசத்தை தலைமை இடமாக வைத்து இயங்கிய ஒரு MLM நிறுவனம், விளம்பரம் பார்த்தா காசு,இதான் இதோட பிசினெஸ் மாடல், ஆனா அப்டி மட்டும் போட்டா மாட்டிக்குவோம்னு,வாங்குற காசுக்கு கம்பெனி பொருட்கள் குடுக்கும்,அத வாங்கிட்டு நீங்க விளம்பரம் பார்த்து சம்பாதிச்சிகளாம்.. ஆள் சேர்கனும்னு அவசியம் இல்ல.. உங்களுக்கு விருப்பம் இருந்தா,எக்ஸ்ட்றா இன்கம் வேனும்னா,நீங்க விருப்பட்டா ஆள் சேர்கலாம்,இல்லைனா விளம்பரம் பார்த்து உங்க வருமானம் மட்டும் எடுத்துக்கலாம், கேட்ட மாதிரி இருக்குல..

வங்காளதேசம் முழுவதும், இந்தியாவுல ஒரு சில பகுதிகளில் இது பரவி நடந்துச்சி,கர்நாடகால கூட பன்னினாங்க, 2019 to 2021 டிசம்பர் வரைக்கும்வரைக்கும் 1/nImage
Image
400 ரீடெய்ல் ஸ்டோர்ஸ் எல்லா ஊர்லயும் இருக்கும்.. இதுல சேரனும்னு நினைக்கிறவுங்க நேர சேர முடியாது அவுங்க ஸ்டோர்க்கு போய் எந்த ப்ளன்ல சேர நினைக்கிறாங்களோ அதுக்கான பொருள் வாங்கி சேரனும், அப்புறமா ஐடி லாகின் பன்னி விளம்பரம் பார்க்க ஆரம்பிக்கலாம்.. ப்ளான் பொருத்து ஒரு நாளைக்கு ரூ.7 முதல் ரூ.300 வரை ஒரு நாள் வருமானம், மாசம் ஒரு தடவ வித்ட்ராவல் எடுத்துகலாம்..இதுக்கு ப்ளே ஸ்டோர் ஆப் இருக்கும் அதுல லாகின் பன்னி,வர கூடிய ஆட் பார்க்கனும், ஆட் முடிவுல ஒரு நம்பர் காட்டும் அதை குறிப்பிட்ட பகுதில டைப் பன்னினா நீங்க ஆட் பாத்துட்டதா அர்த்தம், அப்புறமா அந்த அமவுண்ட் உங்க வாலெட்ல ஆட் ஆகும்.. இதும் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா..? 2/nImage
Image
Image
Image
இந்த நிறுவனத்துல வச்சிருந்த பொருட்கள்ள பல பொருட்கள்,இயற்கை மருத்துவம்,ஆர்கானிக் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் கேட்டகிரிதான்.. இப்படிதான் அந்த ஸ்டோர்கள் இயங்கியது,அரசு அங்கிகாரம்,வங்காளதேச அதிகாரிகள் மெம்பரா இருக்கதா சொல்றாங்க,விருதுகள் இப்டி அமோகமா ஒடுது இந்த நிறுவனம்....3/nImage
Image
Image
Image
Read 6 tweets
Jan 31, 2024
கவுரவ டாக்டரேட் பட்டம் பிரான்ஸ்ச தலைமை இடம் வச்சி இயங்குகிற international UNICEF council myv3ads நிறுவனத்தின் வெளிப்படைதன்மைக்கு  வழங்கினதா சொல்லி மக்கள் மத்தில இதை பரப்பினது மட்டும் இல்லாம இதை வைத்து ஆட்களை சேர்க்கும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளனர்..!  இதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கும் போது இதில் உள்ள பொய்கள் நிறைய சிக்கியது..! மக்களை ஏமாற்றும் நோக்கம் இதில் தெளிவாகவே தெரியும்..! 1/n
இதைபற்றி தேடும்போது நிஜ UNICEFக்கும் இவர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை..!  இவர்களின் சமூகவளைதள கணக்குகள்,youtube அனைத்தும் அழிக்கபட்டு உள்ளது, ஒரு தகவல் கிடைத்தது,இவர்களது ட்ரஸ்ட்டிற்க்கு பணம் கொடுத்தல் டாக்டர் பட்டம் தரப்படும் என விளம்பரம் ஒன்று கிடைத்தது, அதன் பிறகு இவர்களது தில்லாலங்கடி வேலைகள் தெரிய ஆரம்பித்தது..!2/nImage
Image
இந்த International UNICEF council university பிராஸ்சில் இல்லை..! கோவை சுந்தராபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முகவரியில் இயங்குவதாக Trust என பதிவு செய்துள்ளதாக சொல்லபட்டுள்ளது, அதில் பதிவாகியுள்ள தொலைபேசி எண் தற்போது ஒரு HR consultancy இயங்கி வருகிறது.. அந்த  International UNICEF council university தற்போது மூடபட்டுவிட்டது அதற்கான காரணங்கள் தேடும்போது அங்கையும் ஒரு டிவிஸ்ட்டு..! 3/nImage
Read 5 tweets
Dec 29, 2023
கேப்டன் விஜயகாந்த் - ஈழம்

ஈழ தமிழர்களுடன் நெருங்கிய பழக்கம்,ஈழ போராட்டத்திற்கு உதவிகளும், தமிழகத்தில் பல போராட்டங்களும்,முகாம் மக்களுக்கான உதவிகளும் தொடர்ந்து செய்து வந்தவர்..! எந்த நிலையிலும் ஈழ போராட்டத்தை தனது அரசியலுக்கு பயன்படுத்தாத பண்பாளர்..! கடைசிவரை இதை கடைபிடித்த மாண்பாளன்..!

தடையிருந்த காலத்திலேயே வெளிப்படையான ஈழ ஆதரவு பேசியவர்..! அதற்கான தன்னால் முடிந்த முழு உதவிகளும் செய்தவர்..! 1/nImage
1980களில் திரைத்துறையில் வளர்ந்து வந்த காலத்தில் போராட்ட குழுக்களுக்கான உதவிகள், ஈழ பிரச்சனைக்காக நடிகர்களை கூட்டி உண்ணாவிரதம்,ஈழ தமிழர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்க ஆளுநரை சந்தித்து பேசியது.., இன கலவரம் மூண்டபோது சென்னை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டம் செய்து,தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரசிகர்களை வைத்து அதே நாளில் போராட்டம் நடத்தியவர்..!
2/nImage
1984 காலகட்டத்தில் ஈழ போராட்டத்தின் நியாங்களை விளக்க தெரு தெருவாக இறங்கி வீடு,கடை,அலுவலகங்களின் பேசி.. உண்டியல் ஏந்தி ஈழத்திற்க்கு உதவி செய்தவர்..!

ஈழ தமிழர்களுக்கு உதவ ஊமை விழிகள் படத்தின் திரையரங்கு வருமானத்தை அளித்தவர்..!
அந்த படத்தில் இடம் பெற்ற 'தோல்வி நிலையென' பாடலின் தாக்கம் போராட்டத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கம்..! இலங்கை அரசின் கட்டுபாட்டு பகுதிகளில் இந்த பாடல் கேட்க தடை செய்யபட்ட காலங்களும் உண்டு..! 3/n
Read 10 tweets
Sep 23, 2023
Fourkart MLM -  அந்த மிருகம் உங்கள நோக்கிதான் வருது...! ஓடிருங்க...!

வாட்சப் ஸ்டேசஸ் வைத்தால் 50 முதல் 5000 வரை ஒரு நாள் வருமானம் என களமிறங்கி இருக்கும் தூத்துகுடியை தலைமை இடமாகவைத்து இயங்கும் நிறுவனம்..! 4 மாதங்களே ஆன நிலையில் 15ஆயிரம் பேர் இதுவரை இனைந்துள்ளனர்..! 1/n
Image
Image
இந்த Fourkart Fourvine என்ற நிறுவனத்தின் புதிய ப்ராஜெக்ட் மட்டுமே.. இதற்கு முன்பு அந்த நிறுவனம் செயல்படுத்திய ப்ராஜக்ட்கள் இவை அனைத்தும்...!

1st- AUTOPOOL SYSTEM

2nd- MONEY WORLD

3rd- MONTHLY WORLD

4th- COMPOUNDING

5th- MONEY 2 MONEY

6th- BACK TO FORM

7th- 14K AUTOPOOL

8th- சிறு சேமிப்பு திட்டம்

9th- ஆடு பண்ணை

10th- கோழி பண்ணை

11th- 700 AUTOPOOL REINVESTMENT

12th FOURKART

12வது ப்ராஜக்ட்தான் FOURKART மிச்சம் 11 என்ன ஆச்சினு கேட்டிங்கன்னா அதுல ஒரு கதை இருக்கு...! 2/n

Image
Image
FOURVINE பணம் போட்ட ஆட்கள் எல்லாம் பணத்தை வாங்க முடியாம.. இந்த நிறுவனத்தோட ஓனரின் மிரட்டல்களால் இன்று வரை பணத்தை பெற முடியாமல் பல பேர் இன்றும் சிரமபட்டுகொண்டுள்ளனர்..! பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி மிரட்டல் விடுத்து தற்போது புதிய MLM ஆரம்பித்து 15 ஆயிரம் பேரை சேர்த்து அடுத்த நாமம் போட தயாராகிகொண்டு இருக்கிறது Fourkart..! 3/n
Read 6 tweets
Sep 21, 2023
Royalo info marketing MLM : உசார் ஐயா உசாரு...!

சென்னை மடிபாக்கத்தை தலைமை அலுவலகமா வச்சி நடந்துட்டு இருக்க ஒரு விளம்பரம் பார்த்து வருமானம் பார்க்கலாம் என இயங்கி வரும் ஒரு MLM நிறுவனம்..! ஆயிர்வேத பொருட்கள் விற்பனையும் செய்றதா சொல்றாங்க..ஆனா அது இவுங்க பன்ற மணி சர்குலேசன மறைக்க பன்ற வேலை..! வாரம் வாரம் பணம் எடுத்துகலாம்,பரிசுகள் ஏறாலம்னு சொல்லி இதுவரை 3 லட்சம் பேர்களுக்கு மேலே சேர்ந்து இருக்காங்க..!
Image
அவர்கள் விற்க்ககூடிய ஆயிர்வேத மாத்திரைகள் & டானிக்... இரத்தத்தை சுத்திகரிக்க மாத்திரை வச்சிருக்காங்களாம்..! இதை வாங்கி MLM சேர்ந்துகலாமாம்..!


Image
Image
Image
Image
Royalo info marketing MLM - ஏற்கனவே எச்சரிக்கை குடுத்து இருந்தோம், இவ்வளவு சீக்கிரத்துல நடக்கும்னு எதிர்பாக்கல...! பணம் போட்ட மக்களுக்கு தற்போது வீடியோ பார்த்த வருமானம் தரப்படுவதில்லை..! ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளம் தரப்படவில்லை என புகார் நிறைய வந்துள்ளது.. பணம் பெற வேண்டும்மென்றான் ஆட்கள் சேர்த்து விட்டபிறகே தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..! 54நாட்களுக்கு ஒரு முறை ஆட்கள் சேர்த்தால் மட்டுமே வித்ட்ராவல் எடுக்க முடியும் எனவும் சொல்லபட்டுள்ளது.. இதற்க்கு "விஸ்வருபம் ப்ளன்" என அறிவித்துள்ளனர்..!
Read 5 tweets
Sep 18, 2023
Vestige marketing Ltd MLM ஒரு பார்வை...!

இவ்வளவு பில்டப்களோட வளம்வந்துட்டு இருக்க MLM, Amway காலத்துல இருந்து ஒருக்க நிறுவனம்...! இந்த வீடியோக்கள் நான் எடிட் பன்னினது இல்ல.. இது Vestige MLMல இருக்க ஆட்கள் பன்னின வீடியோ 1/n


Image


2004ல் புது டெல்லியை தலைமை இடமாக கொண்டு ஆரம்பிக்கபட்ட ஒரு e-commerce MLM நிறுவனம்..! 2500க்கும் மேற்பட்ட ஆன்லைன்,ஆப்லைன் அவுட்லெட்கள் இருப்பதாக அவர்களே கூறுகிறார்கள்..! ஆனால் சுமார் 400 வகையான,குறிபிட்ட பொருட்கள் மட்டுமே வைத்து இயங்கும் நிறுவனம்..! சொந்த தயாரிப்பிலும் பொருட்கள் வைத்திருக்கிறார்கள்..! 2/nImage
இந்த நிறுவனத்துக்கு ப்ளேஸ்டோர்ல ஆப்,வெப்சைட் ரெண்டுமே இருக்கு...!தமிழ் நாட்ல 2 ப்ராஞ்ச் ஆபீஸ், மாவட்ட அளவுல 39 காண்டக்ட் பாயிண்ட்ஸ், தாலுகா அளவுல 84 காண்டக்ட் பாயிண்ட்ஸ், ஆன்லைன் டிஸ்டிபியூட்டர் கன்சல்டிங் செண்டர் 5 மாவட்டத்துலனு வச்சி நடத்திட்டு இருக்காங்க

3/n
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(