Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Apr 10, 2018, 5 tweets

காவிரி உரிமை கோரி அய்.பி.எல் கிரிக்கெட்டுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது தடியடி! கைது!
காவிரி நீர் உரிமை கோரி தமிழ்நாடே போராட்டக் களத்தில் கனன்று கொண்டிருக்கிறது. 1/5 #CauveryManagementBoard #CauveryVsIPL

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் திரையுலகத்தினர், தமிழ் உணர்வாளர்கள், இளைஞர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பல்வேறு இயக்கங்கள் எல்லாம் இந்த நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. 2/5

காவிரி நீரை இழந்து நாடே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இத்தருணத்தில் இப்படி நடப்பது இயல்பானதும்- அவசியமானதுமாகும்! இந்த உணர்வை புரிந்துகொள்ளத் தவறக்கூடாது. 3/5

இந்த நேரத்தில் அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கேளிக்கை தேவையில்லை. மக்கள் உணர்வைத் திசை திருப்பும் சூதாட்ட விளையாட்டை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராடுபவர்கள் மீது தடியடி நடத்துவதும் கைது செய்வதும் கண்டனத்துக்குரியது. 4/5

காவிரி உரிமைக்காக போராடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிக்கலாமா?
உடனே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். 5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling