நான் கமல் பூணூல் ஜாதி, அதனால் அன்பேசிவத்தில் இந்துத்துவத்தை விமர்சிக்கலை என நான் மொன்னையாக ஒரு ஸ்டேட்மெண்ட் மட்டும் வைத்திருந்தால், நீங்களப்படி என்மேல் பட்டம் சுமத்த நியாயமாக இருந்திருக்கும்.
அதற்கு நீங்க, அன்பேசிவத்திலிருந்து ஒரு பதிலும் சொல்லாம ஹேராமுக்கு தாவிட்டீங்க..
ஹேராம் - இந்துத்துவ கிழிப்பு குறித்து எனக்கு பல கேள்விகள் இருக்கு.
*ஹேராம்- இந்துத்துவத்தை (இந்துத்துவ - கருத்தியலை) விமர்சித்ததா? இந்திய வரலாற்றில் சம்பந்தப்பட்ட ஒரு இந்துத்துவ அமைப்பை மட்டும் விமர்சித்ததா?
*ஹேராமுக்கு முன்னர், ஜின்னாவின் பிரிவினை கோரிக்கையை ஒட்டி எழுந்த பல கலவரங்களை பற்றி வெகுஜன மக்களுக்கு என்னவகையான சித்திரம் இருந்தது?
எனப் பேட்டி தருமளவுக்கு?
அதுவரைக்கும், கமல் "இந்துத்துவ கருத்தியல் மீது சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை",
"கமல் வெறுமனே, தனக்கு தெரிந்தவற்றை டிஸ்பிளே செய்து பெயர் வாங்க எத்தனிக்கும் சமூக அக்கறையற்ற கலைஞன்" என்கிற என்னுடய நிலையில் நான் வழுவாமல் நிற்பேன்.
-- --
பி.கு. - நான் கமல் எனும் நடிகனின் தீவிர ரசிகன். கமல் எனும் சமூக அக்கறையற்ற கலைஞனின் தீவிர வெறுப்பாளன். அவ்வளவே..முற்றும். 🙏