ச.கருணாநிதி Profile picture
மனிதர் மீது மனிதர் செலுத்தும் ஆதிக்கத்தின் எல்லா வடிவமும் மானுட பண்பிற்கு எதிரானது. | CASTE AND RELIGION ARE AGAINST HUMANITY | 💙❤🌈
Aug 11, 2023 16 tweets 2 min read
பள்ளிக்கூட மாணவர்களிடம் இத்தனை கோரமான சாதிவெறி இருக்கிறது என்பது இந்த சமூகத்திற்கான இறுதி எச்சரிக்கை மணி. இனியும் சாதியை வார்த்தெடுக்கிற வேலைகளை அரசியலும்,சமூகமும் செய்து கொண்டே இருக்குமானால் எத்தனை இதர பெருமைகளை தாங்கியிருந்தாலும் இந்த மண் பீக்காட்டுக்குச் சமம்.
Image
Image
நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரி மறவர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள்.
Mar 19, 2023 5 tweets 1 min read
இந்த #dada படத்துல அந்தப்பொண்ணு சுயமரியாதை வேண்டி, அவன் பிரண்டு வீட்ல தங்கமாட்டேன்னு சொல்லி வெளிய வீடு பாக்கச் சொல்லி வெளிய வருது. கொஞ்ச வாடகைக்கு கிடைச்ச ஹவுசிங்க் போர்ட்ல, அங்கிருக்க மக்கள் கூட ஈஸியா அடாப்ஃட் ஆகி சந்தோசமா வாழுது. Pregnancy time ல குடிக்காதன்னு சொல்லி கேக்குது. அவ கேட்டது, செஞ்சது எல்லாமே நியாயமான காரணங்கள். ஆனா, அந்த நாயி, ஹவுசிங் போர்ட் வீட்ட ரொம்பவுமே uneasy ஆ feel பண்ணறான். சத்தியத்த மீறி குடிக்கறான். அவன் ப்ரண்டு வீட்ல அட்ஜஸ்ட் பண்ணலன்னுதான் இவ்ளோ பிரச்சினன்னு சொல்லி அவள சத்தம் போட்டு, அபார்ஷன் லெவலுக்கு தள்ளறான்.
Jan 11, 2023 13 tweets 2 min read
வர்க ரீதியாக பெரும்பான்மை தமிழ்சினிமா பார்வையாளர்கள் நடுத்தர,ஏழை குடும்பத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை திரையில் நிகழும் ஒரு நகர்புற எலைட் குடும்ப கதைக்குள் அந்தப் கனெக்ட் செய்ய வைக்க தமிழ்சினிமாவுக்கு என ஒரு பார்முலா இருந்தது. அது ஏழையாகவோ/ நடுத்தர வர்கமாகவோ இருக்கும் நாயகனோ அல்லது வேறு முக்கிய கதாபாத்திரங்களோ வெளியில் இருந்து அந்த வீட்டில் நுழைவதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் எங்கள் வீட்டு பிள்ளை, ரஜினியின் பணக்காரன், மாப்பிள்ளை வரை பலத் திரைப்படங்கள் இந்த பார்முலாவை அடியொற்றியே வந்திருக்கும்.
Jun 14, 2021 12 tweets 2 min read
கோடிக்கணக்கான செலவில் உருவாக்கப்படும் பிரம்மாண்டமான சினிமாக்களுக்கு மத்தியில் "C/O கஞ்சர்பாலம், பலசா 1978, கலர்போட்டோ" மாதிரியான சின்னச்சின்ன எளிய படங்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் அற்புதமானது. #Cinembandi யும் அவ்வகையைச் சார்ந்தது. எதேச்சையாக கிடைத்த பொருள் ஒரு கைவிடப்பட்ட கிராமத்தின் கனவாக எப்படி மாறுகிறது எனும் எளிய கதை. கன்னடம்-தெலுகு பேசும் எல்லைப்புற கிராமமான கோலப்பள்ளி எனும் ஊரில் வருங்காலம், கிராமம் பற்றி நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஷேர்- ஆட்டோ ஓட்டுனர் கையில் ஒரு உயர்தரமான கேமிரா சிக்குகிறது.
Mar 2, 2021 8 tweets 3 min read
தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, பவ்யமாக கைகட்டி, கணவன் பின்னால் நிற்கும் பெண்களல்ல அவர்கள். எசிலிக்கு எசிலியாக, ராட்சசர்களுக்கு ராட்சசிகளாக, அன்புக்கு அன்பாக, முகத்துக்கு நேராக ஊடகை, காதலை, கூடலைக் கொட்டித்தரும் அசுரச்சிகள்.
கருத்த, கம்பீரமான தன் ஆண் இதர சமூக ஆண்களின் முன்பு அடிமையாய் தலைகுனிவதை அவர்கள் எப்பொழுதும் விரும்பியதில்லை.
Feb 28, 2021 8 tweets 5 min read
நாட்டிலேயே முதன்முறையாக கணினி படிப்பிற்கான வசதிகள் சென்னை மாநாகராட்சி பள்ளிகளில்தான் கொண்டுவரப்பட்டது; கொண்டு வந்த மேயர்.. தலைவர் @mkstalin 😍

#HBDMKStalin சென்னையின் மேயராக தலைவர் @mkstalin இருந்த காலத்தில்தான் நகரத்தின் முக்கியமான 9 மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டன; மேம்பாலங்களுக்கு ஒதுக்கிய 95கோடியில் 30 சதவீதத்தை மிச்சம் செய்து கட்டி முடித்ததுதான் தலைவரின் நிர்வாகத் திறனுக்கு சான்று.

#HBDMKStalin
Jul 25, 2020 15 tweets 2 min read
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா H.M .ஜெகநாதன் அவர்களின நிளைவு தினம்- ஜீலை 25.

தாத்தா HM.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரவது மகனாக பிறந்தார். தந்தையார் பிரிட்டிஸ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப்பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.
.
Mar 22, 2019 5 tweets 2 min read
யார் பெரியார்? #Thread
--
சமீபத்திய பொள்ளாச்சி விவகாரத்தில் கூட பெண்களின் ஒழுக்கம் பற்றி கேள்வியெழுப்பிய சனாதன மதவாத ஆண்களை செருப்பால் அடித்தவர்தான் பெரியார். நவீனத்தின் வளர்ச்சியடைந்திருந்தாலும் சுயசாதி உணர்வு பேசி வலம் வரும் ஆப்பாயில் இளைஞர்களை செருப்பால் அடித்து சமத்துவம் போதிக்கும் கருத்தியலின் தந்தைதான் பெரியார்.
Jun 9, 2018 22 tweets 3 min read
ஹாய் தோழர்.. நேற்றும் இன்றும் கடினமான வேலைப்பளுவில் இருந்ததால் உடனடியாக விவாதத்திற்கு வர இயலவில்லை. அபயங்கரிடம் வாள் இருந்தும், வெட்டவில்லை என்பதில் ஆரம்பித்து, எனக்கு அருகில் இருக்கும் கலைகளின் "வெறுப்பை உமிழ்பவன்" பட்டம் தந்து... என் கமல் மேலான விமர்சனத்திற்கு பதிலடியாக காலாவை பகுதிபகுதியாக போஸ்ட்மார்ட்டம் செய்வோம் எனச்சொல்லி "அன்பே சிவம் என் மனதுக்கு நெருக்கமான சினிமா கூட கிடையாது. அதன் பாதி எழுத்து ஏற்கெனவே வெற்றி பெற்ற படம். ஆனால், எங்கள் படைப்பு எவ்வளவு உயர்வு தெரியுமா? என்றால்,