ஏங்க அவன் நம்ம காசை எடுத்திட்டு நமக்கே கொடுப்பான். லஞ்சம் வாங்காம கமிஷன் அடிக்காம ஆட்சி பண்ணின்னா
வருஷம் ஒண்ணேகால் லட்ச ரூவா உங்ககிட்டயே இருக்குங்க. அவன் கிட்ட ஏன் கையேந்தனும்
அது எப்படிங்க
783 ரூவா குடுத்தேன் இந்த மாசம்.
பேங்க்ல எவ்வளோ பணம் வந்திச்சு.
246 ரூவா வந்திச்சுன்னு நினைக்கிறேன்.
உன் பணம் உன்கிட்டயே வந்துச்சா, அப்போ சிலிண்டர் என்ன விலை
492 ரூவாங்க
கொஞ்சம் கீழே இருக்கிற லிஸ்ட் பாருப்பா 👇
(நன்றி : @noyyalan )

அதிலே எனக்கென்ன லாபம்? நான் குடுத்த பணம் தானே..
நல்லா கேட்டே போ, 2014க்கு முன்னாடி இப்படி ஒரு தொகை உனக்கு தெரியுமா
அது மட்டுமா, வீட்டுக்கு நாலு சிலிண்டர் 10 சிலிண்டர் கனெக்ஷன் எல்லாம் வெச்சிட்டு அதுக்கும் மானியம்
இப்போ சொல்லு இந்த மானியம் மட்டுமே எவ்வளோ சாப்பிட்டு இருப்பாங்க.
ஆமா அந்நியன் சினிமால சொல்ற மாதிரி அஞ்சு அஞ்சு பைசாவா திருடிட்டு இருந்திருப்பங்க போல.
அது மட்டுமா, இப்படி அரசாங்கத்தோட மானியத்தை எக்கசக்கமா திருடி, கடைசில எண்ணை கம்பெனி
கேஸ் இல்லாம எப்படி சமைக்கிறது, அத்தியாவசிய பொருளை தட்டுப்பாடு பண்றதுல நம்ம காங்கிரஸ் திமுகவ அடிச்சிக்க ஆளே இல்லே போ..
ஆமாங்க நான் கூட முதன்முதலா போன் வந்தப்போ அவ்வளோ சந்தோசப்பட்டு இருக்கேன்..
நீ வேற, இதுக்கு பிரியாணி போட்டவன் எல்லாம் இருக்கான்..
இவன கேட்டா சம்மரு, நிறய பேர் பேன் போடறாங்கே, கரண்ட் இல்லேன்னு சொல்றான்,
அவனை கேட்டா க்ரிட் இல்லே சதீஷ்கர்ல மிச்சமா இருக்கிறது எல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்றான்.
இதெல்லாம் எந்த நாட்டுலயாவது நடக்குமா? போன், கேஸ் கரண்ட் எல்லாம் அத்தியாவசிய பொருள், அதுக்கே கையேந்த விட்டவனுக இவனுக.
ஆனா காசு மட்டும் கரெக்ட்டா அடிப்பாங்க
இதெல்லாம் 2Gய விட பெரிய G போல.
அது தான் இப்போ போச்சேன்னு செம கடுப்பு அவனுகளுக்கு மோடி மேல. எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சிட்டாரு.
இந்த கேஸ்ல மட்டுமே
இப்போ பாரு எவ்வளோ பாலம், எவ்வளோ ரோடு வேலை எல்லாம் ஸ்பீடா நடக்குது.
2014ல பிஜேபி ஆட்சி வந்து தானே எல்லாம் திறந்து வெச்சாங்க.
அதிலேயும் பாதில ஒரு பிட்டு எல்&டிக்கு
இவனுக திருட்டுதனைத்தை சொன்னா சொல்லிட்டே போகலாம். இன்னொரு தேர்தல் வந்திரும்.
இப்போ இந்த 72000க்கு வருவோம்
எவனாவது இந்த தேர்தல்ல லஞ்சத்தை ஒழிப்போம்ன்னு சொல்றானா?
அது எப்படி முடியும்
திரும்பவும் மானியம் எல்லாம் சுருட்டுவாங்க, திரும்பவும் அதே அலங்கோலம் எல்லாம் நடக்கும். அடுத்த தலைமுறைக்கு கரெண்ட்டுனா என்னனு தெரிய இன்னும் ஒரு 10 வருஷம் ஆகும்
என்னங்க நீங்க, ஏழைகளுக்கு எல்லாம் 6000 கிடைச்சா முன்னேறுவங்க இல்லிங்களா
நல்லா சொன்ன போ, 70 வருஷமா ஏழைகளை முன்னேற்ற முடியல. இப்போ 72000+72000னா எந்த காலத்துலயாவது முன்னேற விடுவாங்களா
ஏழைகள் முன்னேறனுமா இல்லே ஏழைகள்
வாங்கற எவனாவது வேண்டாம்ன்னு நிறுத்த போறானா, இல்லே குடுக்கிறவன் தான் இத்தனை வருஷத்துக்குன்னு சொல்ல போறானா?
ரெண்டு பேருக்கும் லாபம், எப்படியும் நிக்காது. காலத்துக்கும் ஏழை ஏழை தான், அடிமை
நாலு தலைமுறைக்கு ஆட்சி பண்ணி 40 தலைமுறைக்கு சொத்து சேர்த்தி வெச்சிருக்காங்க. ஆனா நமக்கு இன்னொரு இருண்ட காலம் வேணுமான்னு யோசிச்சு ஓட்டு போடு.