முருங்கைக்காய் சுவை மிகுந்த, சத்தான காய் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. எனில் வீட்டில் காய்த்த காய் என்றால் அதன் சத்தும் சுவையும் இன்னும் கூடும். எனவே வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.
முருங்கைக்காய் - சதைபற்றான, இளசான காய் - நான்கு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மற்றும் தேவையான அளவு எண்ணெய், கறிவேப்பிலை, கொத்துமல்லி.....
இனி எவ்வாறு செய்வது....
முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சிறிது நீர் சேர்த்து வேகவிடவும். (காய் வேக வைத்த தண்ணீர் இருந்தால் அதை சேர்க்கலாம்.)
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
#முருங்கைக்காய்_தொக்கு