ரிபுமாரினி Profile picture
யாசித்தோர் விட்ட நிம்மதிப் பெருமூச்சைக் கொண்டு அறம் செய்தோர் வினை முடிச்சை தன் கரத்தால் அவிழ்ப்பான் ஈசன்
Apr 18, 2020 4 tweets 1 min read
ஒரு ஏசி மெக்கானிக் இடம் சென்று என்னுடைய பெட்ரூம்க்கு ஏசி மாட்டனும் என்ன ஏசி வாங்கலாம்னு கேளுங்க,

உடனே அவன் 1.5 டன் Blue star ,O.G Hitachi அப்படின்னு ஒரு பட்டியல் தருவான் உடனே நீங்களும் வெளி நாட்டுடைய பிராண்ட் நல்லா இருக்கும்னு 10 ஆயிரம் கூட போனாலும் பரவாயில்லைன்னு
(1/n) வாங்குவீங்க கரண்ட் பில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வரும,

உண்மையிலேயே ஒரு 10/10 அறைக்கு 1 டன் ஏசியே போதுமானது வேண்டும் என்றே அவர்கள் உங்களிடம் அதிக பணம் அடிக்கவே 1.5 டன் 2 டன் என்று இழுத்து விடுவார்கள் என் அனுபவத்தில் மூன்று ஏசி வாங்கி உள்ளேன்
(2/n)
Jan 31, 2020 11 tweets 2 min read
#யானைஎனும்பேரழகன் 🐘
ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!

ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை
(1/N) இருக்கா சார்..?”

யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக என்னால் பதிலளிக்க முடியவில்லை.

யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள்.

“ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார்.
(2/n)
Jan 28, 2020 9 tweets 2 min read
#Thread about #Threading

புருவம்திருத்துதல்-Threading

புருவமுடிகளைத் திருத்துகிறோம் (THREADING)என்ற பெயரில் பெண்கள் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
(1/n) இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இப்பதிவு!
புருவமுடிகளை திருத்துகிறோம் என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள்
(2/n)
Apr 25, 2019 6 tweets 2 min read
#முருங்கைக்காய்_தொக்கு

முருங்கைக்காய் சுவை மிகுந்த, சத்தான காய் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. எனில் வீட்டில் காய்த்த காய் என்றால் அதன் சத்தும் சுவையும் இன்னும் கூடும். எனவே வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். முருங்கைக்காயில் தொக்கு செய்தால், காயை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

முருங்கைக்காய் - சதைபற்றான, இளசான காய் - நான்கு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்