ஊடகங்களில் தலையங்கங்களும் ஆய்வுகளும் படிக்க நேர்ந்தது.
அனைவரும் சொல்லி வைத்தார்ப்போல் ஒரே ஒரு விஷயத்தை முன்னிருத்தி எழுதியிருந்தார்கள்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை.
மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் சமரசமாகவோ ஒத்தோ போயிருக்கலாம்.
மக்கள் நலன் மாநில நலன் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கனவும் உண்டு.
புலிக்கு பயந்தவனெல்லாம் என் மேல படுத்துக்கோ என்பதாகத்தான் காங்கிரஸின் அணுகுமுறை இருந்தது.
மேலும்...
தனித்தன்மையை இழந்து காங்கிரஸுடன் கூட்டுச் சேரும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போகும் என்பது சாபமல்ல... வரலாறு.
இப்போது ஆட்சியிலேயே இல்லை
நேருவைத் தாண்டி இந்திரா மீது பெருமதிப்பு உண்டு எனக்கு.
ஆனால் அதன்பின்னான ராஜீவ் சோனியா ராகுல் பிரியங்கா மீது எவ்வித ஒட்டுதலும் இல்லை..
பாடப்புத்தகங்களில் நேரு மாமாவாக இருக்கிறார்.
வரலாற்றில் நேதாஜி தேடப்படும் குற்றவாளியாக அறியப்படுகிறார்.
மொத்தத்தில்...
CONGRESS MUST DIE எனும் யோகேந்திர யாதவின் கூற்று முற்றிலும் உண்மையே !!