சும்மா எதற்கெடுத்தாலும் இரண்டாயிரம் வருடமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வாதத்தை முன் வைப்பது நகைப்புக்குரியது.அதற்கு ஏதாவது முகாந்திரம் வேண்டாமா? உதாரணமாக பறையர்கள் எப்போது தாழ்ந்தவர்களாக குறிக்கப்படுகிறது? என்பதை சொல்ல முடியுமா?
இந்நான் கல்லது குடியும் இல்லை" என்று.வாகைத்திணையில் பாடப்பட்ட பாடல் இது வாழ்வின் வெற்றிகரமான பக்கத்தை சொல்லும் திணை அதில் மூதின் முல்லை துறையில் சொல்கிறார்.(2)
பிற்கால சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும் பறையர்களை தீண்டாதவர்கள்,சண்டாளர்கள் என சொல்லும் சாட்சிகள் இல்லை(4)
பறையர்கள் பல்வேறு பிரிவுகளாக தனக்குள்ளே இருந்தனர்."உழுபறையன்" "காவாக்கார பறையன்" "ஊர்ப்பறையன்" "வள்ளுவப்பறையன்" என்று அழைக்கப்பட்டன.இதில் புல்லுபறிக்கிற பறையர்கள் தாழ்ந்தவர்களாக கருதினர் பறையர்களுக்குள்ளேயும்(6)
மற்றபடி எல்லோரையும் போல சொத்துரிமை இருந்தது.(7)
நாயன்மார்களாக,ஆழ்வாராக,ஈடுஇணையற்ற தமிழின் சொத்தான திருக்குறள் கொடுத்த வள்ளுவர்களாக இருந்தவர்கள் எங்களால்தான் மேலே வந்தார்கள் என்று சொல்வது யாரை ஏமாற்ற? (12)