SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀ Profile picture
வல்லமை தாராயோ-மாநிலம் பயனுற வாழ்வதற்கே. . #Bharathiyan #nationalist🇮🇳 #ThamizhHindu🌟 Chozha Nadu (TamizHagam)
Jul 15 5 tweets 1 min read
1967 தேர்தல் தோல்விக்கு பிறகு ஆறுமாதம் மெளனமாக எல்லாவற்றையும் கவனித்த காமராஜர் தன் அமைதியை கலைத்து முதல் கூட்டத்தை சுதந்திர தின கடற்கரை கூட்டமாக கொண்டு மக்களை சந்திக்க இருந்தார்.

அந்த கூட்டத்தின் ஊர்வலம் முரசொலி ஆபிஸை கடக்கும் போது கலவரம் வெடித்துவிட்டது.(1) Image போலீஸாலும்,ரெளடிகளாலும் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.அடிபட்டவர்கள் இரத்தம் சொட்ட சொட்ட கடற்கரை கூட்டத்தின் மேடையில் ஏறி காமராஜ் முன் நின்றார்கள்.(2)
Jan 3 15 tweets 2 min read
அரசியல்வாதிகள் எல்லோருமே தலைவனாக பார்க்கப்படுவதில்லை.சில யுக்திகளும், சிற்சில பண்புகளும் இருந்தால் போதும் அரசியல்வாதிக்கு ஆனால் ஒரு தலைவனுக்கோ இவை போதாது.(1) Image அவனுடைய எல்லா யுக்திகளையும் மீறி,அவனிடம் குடி கொண்டிருக்கும் அறிவு - செல்வம் என எல்லாவற்றையும் தாண்டி, அவனை விஞ்சி நிற்கும் மனிதநேயமே ஒரு அரசியல்வாதி பெருந்தலைவனாக உருவாகும் மூலமாக உள்ளது.(2)
Sep 24, 2023 8 tweets 1 min read
ஆலங்குளம் துவங்கி கிணத்துக்கடவு வரை 25 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த,"என் மண் என் மக்கள்" யாத்திரையில் பங்கு பெற்றேன்..தொடர்ச்சியாக மக்களோடு பேசுகிற,ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் உளவியலை நேரடியாக உள்வாங்குகிற வாய்ப்பிருந்தது.(1) Image சமூக வலைத்தளம் வழியாக நாம் பார்க்கும் அண்ணாமலையை விட பலமடங்கு உயரத்தினை அவர் களத்தில் பெற்றுள்ளார். பெண்கள்,வயதானவர்கள், இளைஞர்கள்,குழந்தைகள் என எல்லா தரப்பிலும் அவருக்கு எழுந்திருக்கும் ஆதரவு ஒரு அரசனுக்கு உண்டான பீடத்தை சுட்டிக் காட்டுகிறது..(2)
Sep 16, 2023 7 tweets 1 min read
"இந்து என்றால் திருடன்" என திரு.கருணாநிதி கூறிய பிரச்சனை நீதிமன்றத்திற்கு வந்த போது,நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை சம்பந்த பெருமானே இறைவனை உள்ளங்கவர் கள்வன் என்றெல்லாம் சொல்லியுள்ளார் என சமாளித்துப் பேசி இறுதியாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.(1) Image அதாவது,திமுக நீண்ட காலமாக தேசிய அரசியலில் பங்கு பெரும் கட்சி.நான் இந்து விரோதி என்றால் விபி.சிங் - குஜ்ரால் - தேவகவுடா - வாஜ்பாய் போன்ற தலைவர்களின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க விட்டிருப்பார்களா?(2)
May 31, 2023 8 tweets 1 min read
எந்த அரசு வந்தாலும் ஒரு 20% பேர் எந்த வீழ்ச்சியையும் சந்திக்க மாட்டார்கள்.காரணம் அதில் சமூகம்,குடும்பம்,திறமை,அதிர்ஷ்டம் என ஏதோ ஒன்று அவர்களை காத்துவிடும்.

எக்காலத்திலும் 80% மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலேயே சிக்கலோடுதான் வாழ வேண்டியதாக இருக்கும்..(1) இதனால்தான் அன்று பாரதி ,"முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்" என்று அறைகூவல் கொடுத்தார்..

இந்தியா சுதந்திரமடைந்து அது தேர்ந்தெடுத்த பொருளாதார பாதையில் பெருவாரியான மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.(2)
May 31, 2023 5 tweets 1 min read
விவசாய போராட்டத்தின் நோக்கம் சர்வதேச அளவில் பெரிய நோக்கங்களை கொண்டிருந்தாலும், காலிஸ்தானிகள் வேறொரு பாதையில் பயணம் செய்தாலும்,எதிர்கட்சிகளை பொறுத்தவரை ஜாட் வாக்குகளை சிதைத்து பாஜகவை பலகீனப்படுத்துவது மற்றும் நிர்வாகத்தை சீர்குலைப்பது என்பதில்தான் தெளிவாக இருந்தார்கள்.(1) விவசாய போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு வந்தது,மோடி எதிர்ப்பு போராளிகளை ஒரு புள்ளிக்கு தள்ளியது..பாஜகவை வீழ்த்த நினைத்த அத்தனை பேரும் ஒரு ஜாதிய அணிதிரள்தலுக்கு ஆதரவாக நின்றார்கள்..(2)
May 29, 2023 6 tweets 2 min read
'டயம்' நாளிதழ் தொடங்கி அப்போதைய 'திராவிடநாடு' 'பாரதமணி' 'போர்வாள்' என எல்லா பத்திரிக்கைகளும் ஆதீனம் நேருவுக்கு வழங்கிய செங்கோலை பற்றி தெளிவாக பதிவு செய்துள்ளன..(1)

#SengolAtNewParliament ImageImageImageImage டொமினிக் லேப்பியரும்,லேரி காலின்ஸ்சும் எழுதிய 'நள்ளிரவில் சுதந்திரம்' நூலிலும் விரிவாக இதை பதிவு செய்துள்ளார்கள்.எத்தனையோ பரிசுப் பொருட்கள் அன்று நேருவுக்கு தந்தாலும் ஏன் இந்தச் செங்கோல் மட்டும் இவ்வளவு கவனம் பெற்றுள்ளது..அது இந்த அளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது..(2) Image
May 25, 2023 12 tweets 3 min read
'கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர்.இவை இரண்டுமே அதிகாரங்களாக உள்ளது குறளில்..

|| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ||

என்பதை கொடுங்கோன்மையின் உதாரணமாக காட்டுகிறார் வள்ளுவர்.(1)

#Sengol_dharma Image அதாவது,நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி அதை செய்யாவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருவது குறையும்,அந்தணர்கள் வேதத்தையும் தர்ம சாத்திரங்களையும் மறந்து நெறிதவறுவர் என்பதை அலகாக சொல்கிறார்..

இதையே செங்கோன்மை என்றால் என்னவென்பதற்கு,👇(2)
May 24, 2023 4 tweets 2 min read
பாஜக பட்டியல் பழங்குடி சமூகத்தில் இருந்து திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திய போது,இதே எதிர்கட்சிகள் மோடியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி அது நடக்காமல் போன விரக்தியில் உளறிக் கொண்டிருந்த யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக முன்னிறுத்தினார்கள்..(1) Image தன் காயஸ்த்தா சமூகத்தை ஒடிசாவிலும்,பீஹாரிலும்,உபியிலும் மோடி புறக்கணிக்கிறார் என அகிலேஷ் யாதவ்வோடு கைகோர்த்து பேரணி எல்லாம் நடத்தினார் சின்ஹா..இத்தனைக்கும் இவருடைய மகன் மத்திய அமைச்சராகவும் இருந்தார்..(2)
May 24, 2023 4 tweets 2 min read
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 1947 ல் பண்டிட் நேருவிடம் வழங்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீன செங்கோல்,தற்போது பிரதமர் மோடியிடம் புதுப்பித்து வழங்கப்பட உள்ளது..(1)

#NewParliamentMyPride #sengol ImageImage ஆனால் திமுகவும் அதன் கூட்டணிகளும் இந்த நிகழ்வை புறக்கணிக்கின்றன.இதுதான் சைவத்துக்கும்,தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்கள் தருகிற மரியாதை.

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி பலமாக எழுந்த பிறகுதான் இந்தியா முழுக்க மடங்களுக்குரிய மரியாதையும்,அதன் செழுமையான வரலாறும் புத்துயிர் பெறுகிறது(2)
May 24, 2023 21 tweets 5 min read
திருவாவடுதுறை ஆதீனம் சித்தாந்த சைவ மடங்களில் மிகத் தொன்மையானது.பொயு 15 ம் நூற்றாண்டின் இறுதியில் மூவலூரில் பிறந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரால் துவங்கப்பட்டது.(1)

#Sengol #NewParliamentMyPride Image ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார்.இன்று 24 வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.(2) Image
May 24, 2023 8 tweets 1 min read
திமுக ஆட்சிக்கு வந்து எப்படி கூட்டணி கட்சிகளின் பேர வலிமையை,மரியாதையை காலி செய்ததோ அதே அளவுக்கு இன்னொரு காரியத்தையும் செய்துள்ளது..(1) நடுநிலை போர்வையில் இருந்தவர்கள்,ஆன்மீக திராவிடவாதிகள்,சூழலியல் போராளிகள்,திடீர் புரட்சி நடிகர்கள்,வேஷ இலக்கியவாதிகள் என எல்லோரையும் ஒருசேர வெளிப்படுத்திக் காட்டி அவர்களை குழிக்குள் தள்ளிவிட்டது..(2)
May 20, 2023 5 tweets 1 min read
நித்திஷ்குமார் இல்லாமலே 2014 ல் 31 தொகுதிகளை பாஜக கூட்டணி அங்கே பெற்றது..அதற்கும் முன்பு நித்திஷ் பாஜக கூட்டணியில்தான் போட்டியிட்டார்,2019 லும் பாஜகவோடுதான் இருந்தார்..அதே போல பாஜகவோடு இருந்துதான் அவர் மாநில ஆட்சியை அமைத்திருக்கிறார் முன்பும்..(1) Image காங்கிரஸிற்கு எந்த சாதகத்தையும் செய்ததில்லை நித்திஷ் குமார்.அதே சமயம் 1980 - 2004 - 2009 என எல்லா முறையும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்க உதவிய கட்சி திமுக..2019 ல் இந்தியா முழுக்க விரட்டியடிக்கப்பட்ட கட்சியான காங்கிரஸிற்கு ஒரே ஆறுதலையும்,அடைக்கலத்தையும் கொடுத்த கட்சி திமுக (2)
Apr 14, 2023 5 tweets 1 min read
"அண்ணாமலைக்கு தமிழக அரசியல் புரியவில்லை.மக்களுக்கு ஊழலெல்லாம் ஒரு விஷயமே இல்லை" என்ற வாதமெல்லாம் மிக மேலோட்டமானது..(1) இது ஒரு வெகுஜனனாக நமது பார்வை..இது ஏன் நமக்கு எழுகிறது என்றால்,நல்லவன் அரசியலில் அவமானப்பட்டு வெளியேறுகிறான் அல்லது அயோக்கிய சுழலில் சிக்கி வீழ்கிறான்..இதையே பார்த்து பழகியவர்கள் நாம்..(2)
Apr 13, 2023 7 tweets 2 min read
1961 ல் இருந்து 1997 வரை இந்திய கடற்படையின் மதிப்புமிக்க விமானம் தாங்கி கப்பலாக INS விக்ராந்த் பணி செய்தது.1971 ல் இந்தோ - பாக் யுத்தத்தில் கூட முக்கிய பங்கு வகித்தது.(1) Image 1997 - 2012 வரை அருங்காட்சியமாக செயல்பட்டது.2014 ல் INS விக்ராந்த் நீக்கப்பட்டு உலோகமாக விற்கப்பட்டது.ஒரு மறக்கப்பட்ட போர்வீரனாக விக்ராந்த் ஆகிவிடக் கூடாது என அதனை பஜாஜ் நிறுவனம் வாங்கி,'பஜாஜ் - V' என்ற பெயரில் இருசக்கர வாகனங்களாக கொண்டு வந்தது.(2) Image
Mar 25, 2023 7 tweets 1 min read
மீண்டும் அபத்தமாக உளறுவதையே முழு பணியாக செய்கிறார் ராகுல்காந்தி.மன்னிப்பு கேட்பது நரேந்திர மோடியின் அரசிடம் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்..(1) 'மோடி' என்பது காஞ்சி என்று அழைக்கப்படும் சமூகம் பயன்படுத்தும் சாதிய பின்னொட்டு.நரேந்திர மோடியை பொறுத்தவரை அவர் 'மோத் காஞ்சி' பிரிவை சேர்ந்தவர்.அதாவது,மோதேரா பகுதியை சேர்ந்த எண்ணெய் வாணிகர் என்பதே 'மோத் காஞ்சி'..(2)
Mar 25, 2023 4 tweets 1 min read
குலாம்நபி ஆசாத் கட்சியை விட்டு வெளியேறும் போது எழுதிய 5 பக்க கடிதத்தில் மிக முக்கியமாக குறிப்பிட்டது,"மன்மோகன்சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை கிழித்தெறிந்து,தன் முதிர்ச்சியின்மையை காட்டிய ராகுல் காந்தியால் தொடர் வீழ்ச்சியை காங்கிரஸ் கட்சி சந்திக்கிறது" என்றுதான்..(1) திருமுருகன் காந்தி - ராகுல் காந்தி எல்லாம் ஒரே வகையறாதான்..தேர்தல் அரசியல்,நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி எல்லாம் மேடையில் பேசலாமே தவிர அதை பணியாக செய்ய முடியாது..தெரியாது..(2)
Mar 24, 2023 4 tweets 1 min read
இந்தியா முழுக்க பரவி வாழும் எண்ணெய் வாணிக சமூகத்துக்கு,வடஇந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான் - குஜராத் போன்ற பகுதிகளில் 'மோடி' பின்னொட்டு உள்ளது..ராகுல் காந்தி சொன்னது பொதுப்படையாக அந்த சமூகத்தையே இழிவு செய்வதாகத்தான் உள்ளது.(1) தமிழ்நாட்டில் இருந்தாலாவது 'காந்தி - மோடி - போஸ்' எல்லாம் பெயர்கள் என்று நினைத்தேன் எனச் சொல்லி தப்பிக்கலாம்.ஆனால்,ராகுலுக்கு இந்த வாய்ப்பும் இல்லை.தெளிவாக 'மோடி' என்ற சர்நேமை சொல்லியே பேசுகிறார்.இதன் வீரியம் புரியாமல் பேசியது அறிவீனம்.(2)
Mar 13, 2023 7 tweets 1 min read
'RRR' திரைப்படத்திற்கு உலக அரங்கில் கிடைக்கப்பட்ட எல்லா விருதுகளும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கிறது.காரணம் அது இந்தியர்களின் மன உறுதியை,தியாகத்தை,கனிவை உயர்த்திப் பிடிக்கிறது..(1) Image குடும்ப அமைப்பும் இந்த தேசமும்,நமது ஒற்றுமையும் - நட்பும் பிரிக்க முடியா நரம்புகளென விரிவதை உணர்த்திய திரைப்படம்..

திரு.ஜேம்ஸ் கேமரோன் ராஜமெளலியிடம் அன்று சொன்ன வார்த்தைகள்தான் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வேண்டியது..👇(2)
Mar 2, 2023 16 tweets 3 min read
தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை மீறி யாரும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது என்பதை நாமறிவோம்.ஆர்.கே.நகர் தேர்தல் மட்டும்தான் விதிவிலக்கு அதற்கு காரணம் வேறு.மதுசூதனன் வெல்லக் கூடாது என அதிமுகவிற்குள்ளே பல கோஷ்டிகள் அன்று நினைத்தார்கள்.அதை மதுசூதனனே கூட கூறியுள்ளார்.(1)

#ErodeEast ImageImage டிடிவி தினகரன் வெல்ல வேண்டுமென திமுகவும் நினைத்தது.அதுதான் அதிமுகவை பிளக்குமென்று பேருக்கு ஒரு வேட்பாளரை திமுகவும் நிறுத்தியது..டெப்பாஸிட் போகுமென நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால் அதில் ஆளுங்கட்சியும் வெற்றி பெறவில்லை.இது தனி.(2)
Feb 24, 2023 14 tweets 3 min read
விவசாய போராட்டம் என்கிற பெயரில் 2021 குடியரசு தினத்தன்று,செங்கோட்டையில் ஏற்பட்ட காலிஸ்தானிய கலவரங்களுக்கு பின்னால் இருப்பவராக குற்றஞ்சாட்டப்பட்டவர் நடிகரும்,அரசியல்வாதியுமானவர் தீப் சித்து.(1) இந்த நபர் திடிரென பிப்ரவரி 2022 ன் போது,ஒரு கார் விபத்தில் பலியானார்.அடுத்து,அவர் உருவாக்கிய 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற சீக்கிய அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார்..(2)