யாரென கண்டால் அதே ரஞ்சித் கோஷ்டி
அவனுக்கே 5 அறிவு என்றால் அவன் பின்னால் செல்லும் கூகைகளுக்கு 4 அறிவுதானே இருக்க முடியும்?
தமிழகம் தாண்டி ஆந்திர அழகிகள், கலிங்க குயில்கள், வங்கத்து தங்கங்கள், பர்மா பதுமைகள், சயாம் எனும் தாய்லாந்து கிளிகள், கம்போடிய கன்னிகள், மலேசிய மங்கைகள்,
ஏன் சிங்களத்து சின்னமயில்கள் கூட அவன் மஞ்சத்தை அலங்கரித்திருக்கும், ஆனால் அவன் அதனையா செய்தான்?
இல்லை, தான் வாழ்வின் மிகபெரும் விஷயமான அந்த தஞ்சை ஆலயத்துக்கு பணிபெண்களை நியமித்தான்.
அவள்தான் உண்மையான தேவ தாசி, கடவுளின் அடிமை
இது இந்துக்களில் மட்டும் அல்ல, எல்லா மதத்திலும் இருந்தது, பைபிள் சொல்கின்றது
இதோ “ஆண்டவரின் அடிமை”, இதனை வடமொழியில் மாற்றிபோடுங்கள் அந்த வார்த்தைதான் வரும்.
ஆத்திரபட ஒன்றுமில்லை வடமொழியில் தேவனுக்கு தாசி என்றுதான் வரும், அது மொழியே அன்றி பழி அல்ல.
மரியாள் அந்த பணியினைத்தான் செய்தாள், அதனால்தான் தூதன் சொன்னவுடன் நான் ஆண்டவரின் அடிமை என அவளால் சொல்ல முடிந்தது
அடிமை முறை உச்சத்தில் இருந்த காலத்தில், அதாவது மனிதன் சக மனிதனை அடிமையாக வைத்த காலத்தில்,
எல்லா அடிமைகளும் எஜமான் தாசன்/ தாசிகள் என உரிமையற்று அடிமையாக இருந்தபொழுது, தேவ தாசன்களுக்கும் தேவதாசிகளுக்கும் சகல உரிமையும், மரியாதையும் இருந்திருக்கின்றது
கணிகையர் வேறு, பரத்தையர் வேறு, அந்தபுர அழகிகள் வேறு
தேவனுக்கு அடிமையாக இருந்த இப்பெண்கள் வேறு
முன்னிரண்டும் சாக்கடை என்றால் மூன்றாம் ரகம் சந்தணம்
குழப்பம் எங்கு தொடங்கிற்று?
ஆலயமே அனாதையானபின் அப்பெண்களின் வாழ்வு என்னாகும்?
ஆம் பெண்கள் என்பதால் அவர்கள் வாழ்வு திசைமாறி போயிற்று
அந்த புனிதமான நதிகள் சாக்கடையாயின.
இன்று ஒருவன் கூவத்து நீரில் சென்னை தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது என சொன்னால்,
இந்த ரஞ்சித் எனும் அரைபயித்தியத்தின் அடிபொடிகள் அப்படித்தான் கிளம்புகின்றன.
அவர் அக்கால மொழியில் புனிதமான வார்த்தையான தேவதாசி, இவர்களால் வேறு பொருளாயிற்று
இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்ன தெரியுமா?
தமிழில் கலந்துவிட்ட வடமொழி குழப்பம், அதுதான் காரணம்
இறைவனின் அடிமை என தமிழில் வந்திருக்க வேண்டிய வார்த்தை தேவதாசி என வடமொழியிலே வந்துவிட்டது
தமிழில் வடமொழி கலந்து பேசிவிட்டு அதனையே தமிழ் என சொல்லிவிட்டு, அதற்கு விபச்சாரி என இவர்களே பொருளும் கொண்டுவிட்டு கத்திகொண்டிருக்கின்றார்கள்
தேவதாசிகள் எனும் உயர்வான புனிதமான பெயரை விபச்சாரிகள் என ஒப்புகொள்வது என்பது கண்டிக்கதக்க ஒன்று
ராஜராஜன் தன் சுகத்துக்காக பெண்களை அங்கு நியமிக்கவில்லை, அதற்கு அவனுக்கு அவசியமுமில்லை
அவர்கள் மிக உன்னதமானவர்களாக கொண்டாடபட்டனர், அவர்களை நெருங்கி நடக்க கூட மற்றவரால் முடியாது.
கத்தோலிக்க கன்னிகாஸ்தீர்க்கள் எனும் புனிதமான கன்னியர் இருக்கின்றார்கள் அல்லவா?,
கத்தோலிக்க சகோதரிகளுக்கு ரோமை பீடமும் ஐரோப்பாவும் இன்றுவரை ஆதரவாக நிற்கின்றன
ஆனால் இந்து ஆலய சகோதரிகள் மன்னராட்சி ஒழிக்கபட்டபின் திசைமாறி சென்றுவிட்டனர், அவர்களை காப்பார் யாருமில்லை
வரலாற்று உண்மை என்பது இதுதான்
அதுவும் அங்கேயே இருந்து பணியாற்றுவது எவ்வளவு சிரமம்?
மாலை தொடுத்தல் தீபம் என எவ்வளவு வேலைகள்?
தங்கள் வாழ்வினை அர்பணித்த பெண்கள் சாதி,இன அடையாளமின்றி அங்கு வரவேற்கபட்டார்கள், கொண்டாடபட்டார்கள்
வெள்ளதனைய மலர்நீட்டம் என்பான் வள்ளுவன், இவர்கள் உள்ளத்தறிய அவர்கள் அறிவு