பாண்டியர்களின் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்து குளித்தலுக்கும்,முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது.அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிக சிறப்பை கி.பி 140 வாழ்ந்த டாலமி குறிப்பின் மூலம் அறியலாம்...
இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தை தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலையை அடைந்தது!இவர்களது ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 25 க்கும் அதிகமான துறைமுகங்களே சாட்சி...
இத் துறைமுகபட்டினங்களால் கொற்கை,மருங்கூர்,அழகன் குளம் போன்ற துறைமுகங்களின் புகழ் மங்கத் தொடங்கியது.அதேநேரம்,காயல்,குலசேகர மற்றும் சுந்தரபாண்டியன் பட்டினங்கள் மேன்மை அடைந்த என்பதை மார்க்கோ போலோ காயல் பட்டினம் குதிரை வணிக குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்..
குலசேகர பாண்டியன் ஆட்சியல் மதுரை உலகின் தலைசிறந்த செல்வ செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்கால பாண்டியர் உலகிலேய தலை சிறந்த வணிக துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது....
முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர்கள் யுவனர்களோடு சிறந்த வணிக உறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு,தொண்டி,முசிறி,நீலகண்ட துறைமுகம்,கொற்கை,அழகன் குளம்,காலப்பட்டினம்,பாண்டிச்சேரிஎயிற்பட்டினம் போன்றவை
மிகச் சிறந்த துறைமுகங்களாக இருந்ததை பெரிபுளுசு குறிப்பிடுவதன் மூலம் 25-க்கும் அதிகமான துறைமுகங்களை கொண்டு செல்வ செழிப்போடு உலகை வலம் வந்ததை இன்றைய தமிழர்கள் நன்கு உணர வேண்டும்....
பண்டைய தமிழர்களின் தைரியமான தன்மானம் மிக்க வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்தாவது,...அடுத்த தலைமுறையினரை தன்மானத்தோடு வாழ தயார் படுத்துங்கள்.....
என்றென்றும் அன்புடன்....