வருஷம் சரியா ஞாபகம் இல்ல... ப.சிதம்பரம் காமர்ஸ் மினிஸ்டர் என நினைவு.
இந்த மொத்த விபரமும் ஜுனியர் விகடனில் வெளி வந்த செய்தி தான்..
மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முந்தைய நாள் இரவு வரை ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தில் ப.சிதம்பரமும் ஒரு இயக்குனர்.
காமர்ஸ் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அதிக இந்திய அன்னியச் செலாவணி ஈட்டித் தந்த இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி விதித்து அந்தத் தொழிலை முடக்குகிறார் ப. சிதம்பரம்.
இந்த இரும்புத்தாது ஏற்றுமதியை செய்து வந்த நிறுவனம் செய்வதறியாது திகைக்கிறது
இனி இந்த நிறுவனத்தை நடத்த இயலாது என முடிவெடுக்கும்போது அதே நிறுவனத்தை ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம் விலைக்கு வாங்க முன் வருகிறது.
பங்குச் சந்தை வல்லுனர்கள் வேதாந்தா குழுமத்திற்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா என வியக்கிறார்கள்.
எதிர்காலமே இருண்டு போன நிறுவனத்தை ஏன் இத்தனை விலை கொடுத்து வாங்குகிறது இந்த வேதாந்தா குழுமம் என கவலைப்படுகிறார்கள்.
வாங்கி முடித்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்....
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்
இரும்புத்தாது ஏற்றுமதியால் இந்தியாவுக்கு கிடைத்து வந்த அன்னியச் செலாவணி இழப்பை சரிக்கட்ட மீண்டும் இரும்புத்தாது ஏற்றுமதிக்கான வரி முற்றிலுமா நீக்கப்படுகிறது..
ஆக அதன்பின் தெரிந்தது சரக்கு முறுக்கில்லை... செட்டியார் தான் முறுக்கு என..
இதைப் பற்றி கம்யூனிஸ்டுகள் கத்தி ஓய்ந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை
ப.சிதம்பரம் மீது...
அதே சிதம்பரம் தான் இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி உள்ளார்.
தீதும் நன்றும் மகன் தர வாரா !!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தைச் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்கள் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் தலைமையில் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இது பழைய செய்தி தானே.. இதில் என்னவென்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்..
பாஜகவில் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்களில் நான்கு பேரை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அழைக்கிறார்கள் என தவறான தகவல் கூறி அரசு அலுவலரான பிடிஓ தூத்துக்குடி கலைஞர் அரங்கம் அழைத்து சென்று கனிமொழி கீதாஜீவன் விளாத்திகுளம் எம் எம் ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்
அங்கு சென்றபின் தான் தங்களை எதற்காக அழைத்து வந்தார்கள் என அந்த நான்கு பஞ்சாயத்து தலைவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் அங்கு 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக அண்ணாமலை அவர்களை சந்தித்து மனு கொடுக்கச் சென்றதாக பேட்டி தரச் சொல்லி நிர்பந்தப் படுத்தியிருக்கிறார்கள்
சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகள்..
நெ 9, முதல் குறுக்குத் தெரு, ராசாஅண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை இ.எல்.விஸ்வாசத்திடமிருந்து 20.1.1969 ல் ரூ 57000 கொடுத்து வாங்குகிறார் ராசாத்தி அம்மையார்
இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் ராசாத்தி அம்மையார் . இந்த வீட்டை வாங்கிய கபாலி ராசாத்தி அம்மையாருக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்
அதே நாளன்று கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து அதன்படி மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு ராசாத்தி அம்மையாருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
அதாவது, தான் விற்ற வீட்டிலேயே ராசாத்தி அம்மையார் தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
பரட்டைத்தலை என சோஷியல் மீடியாவால் எள்ளி நகையாடப்பட்ட தற்போதைய தெலுங்கானா கவர்னர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றிய பதிவு
**********************************
என்னுடைய லாரியில் முன்பு ஓட்டுனராகப் பணி புரிந்த ஒருவர் கடந்த வாரம் கோவில்பட்டியில் இருந்து தெலுங்கானாவிற்கு PPE Kit ஏற்றிச் சென்றிருக்கிறார். லோடி இறக்கிவிட்டு திரும்பும் வழியில் வாகனம் நிர்மல் காட் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர் படுகாயம்.
உடனே அவரின் உறவினர்கள் எவரோ எவரையோ பிடித்து தமிழிசை அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் உதவிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டு விட்டு தனது கணவர் சவுந்தர் ராஜனை மேலதிக உதவிக்கு நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
ராஜ் டிவிய ஒழிச்சுக் கட்டுனது, விஜய் டிவி லைவ் நியூஸ நிப்பாட்ட்டுனது, பிஎஸ்என்எல் ப்ராண்ட்பேண்ட் கேபிள சுமங்கலிக்கு யூஸ் பண்ணுனது. டாட்டாவையே மெரட்டுனது ஏர்செல் மேக்சிஸ். இவ்வளத்துக்கும் சப்போர்ட் பண்ணுன தாத்தன்கிட்டயே ஷேர் ஆட்டையப் போட்டதுன்னு சொல்லீட்டே போகலாம் #கேடிபிரதர்ஸ்
தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவி வாங்கியே ஆகனும்ன்னு தாத்தாவ வீல் சேர்ல வெச்சி டெல்லிக்கு தள்ளீட்டு போயி அந்த தள்ளாத வயசுலயும் மனுஷன இவனுக பண்ணுன கொடுமை இருக்கே !!! #கேடிபிரதர்ஸ்
அப்ப தமிழ்நாடு முழுக்க ஒரு விமர்சனம் வந்துச்சு... விவசாயம் விவசாயம்ன்னு கத்துனீங்களே விவசாய மந்திரி கேட்டு வாங்கீருக்கலாம்ல்லன்னு... என்ன செய்ய பேரனுக டிவி சேனல் தானே வெச்சுருக்கானுக #கேடிபிரதர்ஸ்
தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தாகி விட்டன.
ஊடகங்களில் தலையங்கங்களும் ஆய்வுகளும் படிக்க நேர்ந்தது.
அனைவரும் சொல்லி வைத்தார்ப்போல் ஒரே ஒரு விஷயத்தை முன்னிருத்தி எழுதியிருந்தார்கள்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை.
மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் சமரசமாகவோ ஒத்தோ போயிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியும் யதார்த்தம் அறிந்து விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.
மக்கள் நலன் மாநில நலன் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கனவும் உண்டு.
புலிக்கு பயந்தவனெல்லாம் என் மேல படுத்துக்கோ என்பதாகத்தான் காங்கிரஸின் அணுகுமுறை இருந்தது.
மேலும்...
காங்கிரஸ் தான் ஏகோபித்த ரட்சகன் எனும் அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் மாநில கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்து விடலாமே.
தனித்தன்மையை இழந்து காங்கிரஸுடன் கூட்டுச் சேரும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போகும் என்பது சாபமல்ல... வரலாறு.
ஸ்டெர்லைட்- எனது பார்வை #இந்த ஆலையினால் நச்சுக்காற்றும் புற்று நோயும் இன்னபிற துர்மரணங்களும் நிகழ்வதாகச் சொல்லித்தான் போராட்டம் முதலில் வைகோவால் முன்னெடுக்கப்பட்டு இப்போது குமரெட்டியாபுரம் மக்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் எத்தனை பேர் இதுவரை புற்றுநோயால் , காற்று மாசால் பாதிக்கட்டவர்கள் எனும் புள்ளிவிவரம் ஏதேனும் உள்ளதா ?!! சமீப காலமாக தூத்துக்குடி மக்களிடையே புற்று நோய் அதிகளித்துள்ளதாக வந்த வாட்சாப் செய்திகளின் உண்மை நிலவரம் என்ன ?!
நிற்க. இவையொன்றும் நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் பதிவிட கேட்கும் கேள்விகள் அல்ல !! இவை உண்மையில்லாத பட்சத்தில் இவ்வாறு கூறிப் போராடும் மக்களிடம் ஆதாரப்பூர்வமாக இந்த அரசு எடுத்துரைத்து பயம் போக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ?!!