*பிடித்துப் படித்தது...*
➕➖➗✖➕➖➗✖➕
கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒருவர் அவரிடம், “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” எனக்கேட்டார். நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன்,
நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!.
"நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் வேண்டும்?" என அவர் கேட்டார்!!
*நட்புக்கு இலக்கணமான எண்கள் “220, 284" ஆகிய எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க வேண்டும்”என ராமானுஜம் கூறினார்.*
குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய ராமானுஜம் , 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படி கூறினார் !!!.
220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220
284 →1,2,4,71,142,284
இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி ராமானுஜம் கூறினார் !!!.
இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்?
ராமானுஜம் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது....
220 → 1+2+4+5+10+11+20+22+44+55+110=284
284 →1+2+4+71+142=220
220, 284 என்ற எண்களின் வகுத்திகளை, சம்பந்தப்பட்ட எண்களைத் தவிர்த்து, கூட்டினால் மற்றொரு எண் கிடைப்பதே அந்நபரின் வியப்புக்குக் காரணமாய் அமைந்தது!!!
வியப்பின் விளிம்புக்கே சென்ற அந்நபர், இவரை ஏன் அனைவரும் “எண்களின் தந்தை”, "கணிதமேதை" என போற்றுகின்றனர் என புரிந்துகொண்டார் !!!.
➕➖➗✖➕➖➗✖➕➖