காலம் அல்லது பொழுதை இரு பெரும் பிரிவுகளாகத் தமிழ் இலக்கணம் வகுத்துள்ளது.
அவை
1.பெரும் பொழுது
2. சிறு பொழுது
என்பனவாகும்.
பெரும்பொழுது:
பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் கூறுபாடு ஆகும்.
பெரும்பொழுது
1.கார்,
2.கூதிர்,
3.முன்பனி,
4.பின்பனி,
5.இளவேனில்,
6.வேனில்
என அறுவகை ஆகும்.
ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள்(மாதம்) கால அளவுடையது.
பெரும்பொழுதுகளின்
காலம் - திங்கள்
கார் - ஆவணி,புரட்டாசி
கூதிர் -ஐப்பசி,கார்த்திகை
முன்பனி - மார்கழி,தை
பின்பனி - மாசி,பங்குனி
இளவேனில்
- சித்திரை,வைகாசி
முதுவேனில்
- ஆனி,ஆடி
'பெரும் பொழுது' ஓர் ஆண்டின் ஆறு பருவங்களைக் குறிப்பதைப் போன்றே ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளைக் குறிப்பது 'சிறு பொழுது' ஆகும்.
அவையாவன :
1.காலை,
2.நண்பகல்,
3.ஏற்பாடு (பிற்பகல்),
(எற்பாடு =எல்+பாடு/படு=
கதிரவன்/சூரியன்+சாயுதல்.
‘எற்பாடு’ என்பது எல்-படு நேரம்; அதாவது கதிரவன்/சூரியன் மறையும் நேரம். ‘எல்’ என்பதற்கு கதிரவன்/சூரியன் என்பது பொருள்).
1.காலை = கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி; விடியற்காலம்.
2.நண்பகல் = பகற்பொழுதின் நடுப்பகுதி.
3.எற்பாடு = பகற்பொழுதின் இறுதிப்பகுதி, கதிரவன் மறைகின்ற காலம்.
(எற்பாடு =-எல்+பாடு/படு= கதிரவன்+சாயுதல்.கதிரவன்/சூரியன் மறையும் நேரம்.)
4.மாலை = கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகுதி.
5.யாமம்= நள்ளிரவு, இரவுப்பொழுதின் நடுப்பகுதி.
6.வைகறை = கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப்பொழுதின் இறுதிப்பகுதி.
ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது.
எனவே, ஆறு சிறுபொழுதும் சேர்ந்து, இருபத்து நான்கு மணி நேரம் ஆகும்.
இனி, ஒவ்வொரு பொழுதுக்கும் உரிய நேரத்தை அறிந்துகொள்வோம்.
சிறுபொழுது உரிய நேரம்
1.காலை = 6மணிமுதல்10
மணிவரை
2.நண்பகல்=10மணிமுதல்
2 மணிவரை
3.எற்பாடு= 2மணிமுதல்
6மணிவரை
(எற்பாடு = சூரியன் மறையும் நேரம்)
சிறுபொழுது உரிய நேரம்
4.மாலை= 6மணிமுதல்
10மணிவரை
5.யாமம்= 10மணிமுதல்
2மணிவரை
6.வைகறை= 2மணிமுதல்
6மணிவரை
இவையே ஒவ்வொரு சிறு பொழுதுக்கும் உரிய நேரம் ஆகும்.