🐝மின்மினி🐝 Profile picture
தேடல்.. தேடல்.. தேடிக் கொண்டேயிருப்பவன்!
Feb 20, 2020 17 tweets 3 min read
"நாள்" மீள் பதிவு:-

கலித்தொகையைக் காரணம் காட்டி 'தினம்' என்பதை தமிழ்ச் சொல் என்று கூறுவது தவறானது, ஒருபோதும் ஏற்கக்கூடியதல்ல.

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழில் வடசொல் ஊடுருவி இருந்ததால் வடசொல்லை தமிழ்ச் சொல் என்று எடுத்துக்கொள்ள இயலவேயியலாது.

'தினம்' என்பது #வடசொல்லே தான்! 'நாள்' என்பதே தமிழ்ச் சொல்லாகும்.

தொல்காப்பியம் வடசொல்லை தமிழில் மாற்றம் செய்வது (தமிழ்படுத்துவது) குறித்து குறிப்பிடுகிறது.
Oct 5, 2019 11 tweets 8 min read
#தமிழ்_இலக்கணம்_🤳_✍🏼

காலம் அல்லது பொழுதை இரு பெரும் பிரிவுகளாகத் தமிழ் இலக்கணம் வகுத்துள்ளது.

அவை

1.பெரும் பொழுது
2. சிறு பொழுது

என்பனவாகும். #தமிழ்_இலக்கணம்_🤳_✍🏼

பெரும்பொழுது:

பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் கூறுபாடு ஆகும்.

பெரும்பொழுது

1.கார்,

2.கூதிர்,

3.முன்பனி,

4.பின்பனி,

5.இளவேனில்,

6.வேனில்

என அறுவகை ஆகும்.

ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள்(மாதம்) கால அளவுடையது.